2024 புத்தாண்டு ராசி பலன்.. எங்கேயும் எப்போதும் சந்தோஷம்.. உற்சாகமாக இருக்கும் ராசிக்காரர்கள்
சென்னை: 2024ஆம் புத்தாண்டில் அதிக வருமானம் வருவது பற்றி யோசித்தாலும் உடல் ஆரோக்கியம் பற்றியும் அதிகம் யோசிப்பார்கள். இறைவனிடம் வேண்டுவதே நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டில் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்: ரத்தகாரகன் செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, உங்களுக்கு 2024ஆம் ஆண்டு அற்புதங்கள் நிறைந்த ஆண்டுதான் காரணம் குருவின் சஞ்சாரமும், சனியின் சஞ்சாரமும் உங்களுக்கு சந்தோஷங்களை தரக்கூடியதாக உள்ளது என்றாலும் ஓயாத வேலை உங்களுக்கு அசதியை தரும் அவ்வப்போது ஓய்வும் அவசியம், அப்படி ஓய்வெடுத்தால் மட்டுமே உடல் சோர்வில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம். உணவு விசயத்தில் அக்கறை காட்டுங்கள். 2024ஆம் ஆண்டில் சனியில் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும் முழு சக்தியுடன் மீண்டெழுவீர்கள். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உங்களுடைய நோய்கள் முழுமையாக குணமடையும். ஆண்டின் இறுதிவரை நவ கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாகவே உள்ளதால் உற்சாகத்தோடு இருப்பீர்கள் வருமானத்தையும் ஆரோக்கியத்தையும் ஒரே நேரத்தில் மன மகிழ்ச்சியோடு அனுபவிப்பீர்கள்.

ரிஷபம்: மனதிற்கு உற்சாகத்தை தரக்கூடிய சுகங்களின் நாயகன் சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, உங்களுக்கு 2024ஆம் ஆண்டு, உங்களின் உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். பதற்றத்தோடு இருப்பீர்கள். அவ்வப்போது பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் தவிர்க்க மருத்துவ அலோசனை பெற வேண்டியது அவசியம். வேலைக்கு நடுவே அவ்வப்போது ஓய்வு அவசியம். உங்களின் உணவுப்பழக்கமும் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். வேலைப்பளு உங்களின் சோர்வை அதிகரிக்கும் எனவே உங்களின் சக்தியை நீங்க சேமிப்பது அவசியம். நரம்பு தொடர்பான பிரச்சினைகள் வரலாம் மருத்துவ ஆலோசனை அவசியம்.
மிதுனம்: புதனை ராசிநாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஏப்ரல் முதல் ஜூலை வரை உடல் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும். சரியான மருத்துவ ஆலோசனை அவசியம். எந்த பிரச்சினைகளையும் அலட்சியமாக நினைக்காதீர்கள். எதையும் புறக்கணிக்க வேண்டாம். நோய்கள் வெளிப்பட்டு குணமடையும். மருத்துவ ஆலோசனை அவசியம். பழைய உணவுகள் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து விடுங்கள். உடல் சோர்வு எட்டிப்பார்க்கும். வாதம் தொடர்பான நோய்கள் வரலாம். முழங்கால் வலி, மூட்டு வலி, கீல்வாதம், பை, வாயு, அஜீரணம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி அவசியம். சீரான உணவை உண்ணுங்கள். இடையில் தியானம் மற்றும் யோகா பயிற்சி செய்யுங்கள். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வணங்குங்கள்.
கடகம்: சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, உங்க உடல் ஆரோக்கியம் இந்த ஆண்டு ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கப்போகிறது. சீரான உணவுப்பழக்கம் அவசியம். பித்த நோய்கள் அதிகமாகும். உடலில் சூடு தொடர்பான நோய்கள் ஏற்படும். அஷ்டம சனியின் காலகட்டம் உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்தும் கவனம் தேவை. குருவின் பார்வை உங்க நோய்களை தீர்க்கும். ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உணவு விசயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். ஹோட்டல் உணவுகளில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் போகும் போது நிதானம் தேவை. வேலைக்கு நடுவே சில நேரங்களில் ஓய்வெடுப்பது அவசியம். அப்போதுதான் உங்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும். மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க நீங்கள் தியானம் செய்வது அவசியம்.

சிம்மம்: சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, உங்களின் ஆரோக்கியம் 2024ஆம் ஆண்டில் சிறப்பானதாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். கண்டச்சனி காலமாக இருந்தாலும் குரு பகவானின் பார்வை ஏப்ரல் மாதம் வரை இருப்பதால் ஜனவரி முதல் மார்ச் வரை உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவீர்கள். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு பகவான் பார்வை உங்க ராசிக்கு ஆறாம் வீட்டின் மீது விழுவதால் நோய்கள் வெளிப்பட்டு குணமடையும். அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள். காரமான உணவுகளை சாப்பிடாதீர்கள். சரியான உணவுப்பழக்கம், நிம்மதியான உறக்கம் உங்களுக்கு நோய் பாதிப்புகளில் இருந்து தீர்வு கிடைக்கும். வேலைப்பளு மன அழுத்தத்தை தரலாம் அவ்வப்போது ரிலாக்ஸ் படுத்திக்கொள்ளுங்கள் அப்போதுதான் உங்களின் ஆரோக்கியம் மேம்படும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்வது நன்மையைத் தரும்.
கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு கடந்த சில ஆண்டுகாலமாகவே கன்னி ராசிக்காரர்களின் ஆரோக்கியத்திற்கு சில இடையூறுகள் ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. 2024ஆம் ஆண்டில் உங்களின் சங்கடங்கள் தீரும். உடலில் ஏற்பட்டிருந்த நீண்ட நாள் நோய்களின் பாதிப்பு தீரும். இதுவே உங்களின் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும். குரு பார்வை ஏப்ரல் மாதத்திற்கு மேல் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. நோய் பாதிப்பு நீங்குவதால் உங்களின் மன நிம்மதி அதிகரிக்கும். கடன் நீங்கி விட்டது என்ற மன மகிழ்ச்சியே நோய்களை நீக்கும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். மனதையும் உடலையும் ஆரோக்கியமாக உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள் 2024ஆம் ஆண்டில் யாராலும் உங்களை அசைத்து பார்க்க முடியாது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications