Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆங்கிலப்புத்தாண்டு ராசி பலன் 2024... குரு தரும் வேலை.. சனி தரும் புரமோசன் .. சம்பள உயர்வு யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. கடந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை பறிபோனது. கார்ப்பரேட் கம்பெனிகள் கூட சம்பள உயர்வு பற்றி பேசவில்லை. பார்க்கும் வேலை நிலைக்குமா என்ற பதற்றம் பலருக்கும் இருந்து கொண்டே இருந்தது. 2024ஆம் ஆண்டில் வேலை கிடைக்குமா? யாருக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

துலாம்: சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே குருவின் பார்வையால் நல்ல வேலை கிடைத்தது. சனி பகவான் பயணத்தால் வேலையில் புரமோசனும் கிடைத்தது. இந்த ஆண்டு சம்பள உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். சொத்துக்கள் வீடு வாங்குவீர்கள். சொந்த வீடு வாங்குவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பேர் புகழ் தேடி வரும். குடத்தில் இட்ட விளக்காக இருந்த நீங்கள் இந்த ஆண்டு குன்றில் மேலிட்ட விளக்காக சுடர்விட்டு பிரகாசிப்பீர்கள். ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்ய வெற்றிகள் தேடி வரும்.

New year Rasi Palan 2024 Tamil: New Job and Promotion who will get Prediction for 6 Zodiac signs

விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசிநாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே. கடந்த ஆண்டு வேலை போனதில் பலர் விருச்சிகராசிக்காரர்கள்தான். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமலேயே இருந்தது. எப்படா விடிவுகாலம் பிறக்கும் என்று ஏங்கித்தவித்தீர்கள். பிறக்கப் போகும் புத்தாண்டு உங்களுக்கு அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. குரு களத்திர ஸ்தானமான ஏழாவது வீட்டில் அமர்கிறார். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் கடன்கள் அடைபடும். குரு பகவான் நல்ல வேலையை தேடித்தரப்போகிறார். சனி பகவான் அந்த வேலையை நிரந்தரமாக்கப்போகிறார். நல்லது நடக்க திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரியை சரணடையுங்கள்.

தனுசு: குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே. வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதையும் சமாளிக்கும் தெம்பும் தைரியமும் பிறக்கும். குரு பகவான் பார்வையால் பல அற்புதங்கள் நிகழும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். எதையும் நிதானமாக தேர்வு செய்து முடிவு செய்யுங்கள். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

மகரம்: சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே. ராசி நாதன் ஆட்சி பெற்று பாத சனியாக ராசியில் அமர்கிறார். குருபகவான் விரைய குருவாகவும் ஆறாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் இருப்பதால் செய்யும் வேலைகளை யோசனை செய்து நிதானமாக இருப்பது நல்லது. ஏழரை சனி என்றாலும் தொழில் காரகன் சனியால் புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ப வருமானமும் அதிகமாக வரும். குச்சனூர் சனீஸ்வரரை வணங்க பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

கும்பம்: சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே. ஜென்ம சனி காலம் என்றாலும் பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை காரணம் உங்கள் ராசிநாதன் சனி என்பதால் கவலையில்லை. அதே நேரத்தில் அகலக்கால் வைக்காதீர்கள். நிதானமாக ஒவ்வொரு அடியையும் வைத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். 2024ஆம் ஆண்டில் வியாபாரத்தில் பெரிய முதலீடு எதையும் செய்யாதீர்கள். வேலை செய்யும் இடத்திலும் வார்த்தைகளில் நிதானம் தேவை இல்லாவிட்டால் பிரச்சினைதான். ஏழரை சனி பாதிப்பு குறைய சனிக்கிழமை ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

மீனம்: குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே. 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு ஜென்ம ராகுவினால் பண வருமானம் அதிகரிக்கும். குரு பகவான் புதிய வேலைகளை ஏற்படுத்தி தருவார் புதிய தொழில் தொடங்கலாம். வேலை செய்யும் இடத்திலும் வீட்டிலும் உங்கள் கை ஒங்கியே இருக்கும். ஏழரை சனியாக இருந்தாலும் நன்மைகள் நடைபெறும் அதிகம் நடைபெறும் ஆண்டாகவும் அமையப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் யாரை நம்பியும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். வெள்ளிக்கிழமைகளில் விளக்கு போட்டு வணங்க மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+