Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தாண்டு ராசி பலன் 2024: குரு தரப்போகும் பொற்காலம்.. சனியால் திடீர் திருப்புமுனை யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024ஆம் ஆண்டில் குரு பகவான் பலருக்கு பொற்காலத்தை தரப்போகிறார். ராகு கேது, சனி ஆகிய கிரகங்களினால் மனிதர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனைகள் ஏற்படப்போகிறது. செல்வ வளமும் அதிர்ஷ்டமும் சில ராசிக்காரர்களுக்கு தேடி வரப்போகிறது. தனுசு, மகரம்,கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டு எப்படி இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

New year Rasi Palan 2024 Tamil: Prediction for Dhanusu,Makaram,Kumbam and Meenam

தனுசு: குருபகவான் 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் திடீர் திருப்பங்களும் வசதி வாய்ப்புகளும் பெருகும். தடைபட்ட காரியங்கள் முடிவடையும். வீட்டில் திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட சுபகாரியங்கள் நடைபெறும். சிலரது மகனுக்கு வேலை கிடைத்து வெளிநாடு செல்லும் யோகத்தை தரும். திருமணம் நடைபெறும், சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆண்டின் பிற்பகுதியில் குரு ஆறாம் வீட்டிற்கு சென்று அமர்ந்தாலும் குரு பகவானின் பார்வையால் உங்கள் வாழ்க்கையில் குதூகலம் உண்டாகும். பண வருமானம் அதிகரிக்கும். புதிய பதவி பொறுப்புகள் தேடி வரும். சனிபகவான் சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. ஏழரை சனி முடிவுக்கு வந்து விட்டது. ராகு நான்காம் இடத்திலும் கேது பத்தாம் வீட்டிலும் அமர்கின்றனர். நான்காம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ம் பாவத்திற்கு ராகு வருகிறார். கேந்திரத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம்.பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள்,வருமானம் அனுகூலம் ஆதாயத்தை தரும்.

மகரம்: சனியை ஆட்சிநாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே இந்த புத்தாண்டு வருமானத்தை அள்ளித்தரும் ஆண்டாக அமையப்போகிறது. ராகு கேது பெயர்ச்சியினால் நன்மைகள் நடைபெறும். 3ம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு பயணம் செய்கிறார். பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாதித்தியம் கிடைக்கும். பாத சனி நடந்தாலும் ஆண்டின் பிற்பகுதியில் நிகழப்போகும் குருபெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். நல்ல வேலை கிடைக்கும். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். குருவின் சஞ்சாரத்தினால் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் கட்டுப்படும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வீடு கட்டும் யோகம் கைகூடி வரும். மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்து வைக்கும் நேரம் வந்து விட்டது. திறமைக்கு ஏற்ப வேலையும் ஊதியமும் கிடைக்கும். இது வரை கலங்கிய களங்கப்பட்ட வாழ்க்கை ஓளி மயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும். திருமணம் சுபகாரியங்கள் நடைபெறும். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்க திருச்செந்தூர் முருகனை செவ்வாய்கிழமைகளில் விடாது வழிபடுவது நல்லது.

கும்பம்: எதையும் குணமாக சொல்லும் கும்ப ராசிக்காரர்களே. 2024ஆம் ஆண்டு உங்களுக்கு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. ராகு கேது பெயர்ச்சியினால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள்கள் குறையும் செய்யும் முயற்சிகள் யாவும் வெற்றியைத் தரப்போகிறது. இதுநாள் வரைக்கும் தடைபட்ட காரியத்தை செவ்வனே செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் நண்பர்கள் மூலம் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு ஜென்ம சனியின் தாக்கம் இருந்தாலும் மற்ற கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. 2ஆம் இடத்தில் ராகுவும்,8ம் இடத்திற்கு கேதுவும் பயணம் செய்வதால் வீடு பூமி வாகனம் சம்பந்தபட்ட வகையில் சுப விரையம் வரலாம். அன்னிய இனத்தவர்களால் அனுகூலம் ஆதாயம் உண்டு. கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டிர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள்.

மீனம்: குருவை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே. இந்த புத்தாண்டு உங்களுக்கு நன்மை தரக்கூடிய ஆண்டாக உள்ளது. விரைய சனியின் பாதிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் பிற கிரகங்களின் கூட்டணி சஞ்சாரம் சாதகமான பலன்களையே தரப்போகிறது. சனிபகவான் 12ஆம் வீட்டில் அமர்ந்துள்ள நிலையில் ராகு ஜென்ம ராசியிலும் கேது ஏழாம் வீட்டில் அமர்கிறார். ஜென்ம ராசி என்பது கௌரவம், செயல் தன்மை, கீர்த்தி, செல்வாக்கு,புகழ்,பெறுமை,ஆற்றலை குறிக்கும் இடத்திற்கு வருவதால் ஸ்தான பலத்தை சீர்குலைப்பார். நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். ராசிநாதன் குரு ஆண்டின் முற்பகுதியில் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். ஆண்டின் பிற்பகுதியில குரு பகவான் இடப்பெயர்ச்சியாகி மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்திற்கு செல்கிறார். தடைபட்ட காரியங்கள் தடங்கள் எதுவும் இன்றி நடைபெறும். பணம் கைக்கு வரும். சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் கூடும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும், புது வீடு வண்டி வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+