Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தாண்டு ராசி பலன் 2024: சனியின் அதிரடி ஆட்டம்.. குரு பார்க்கும் பார்வை.. திடீர் லக் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 ஆம் ஆண்டு நவ கிரகங்களின் கூட்டணி, இடப்பெயர்ச்சியை வைத்து பார்க்கும் போது நாட்டிலும் வீட்டிலும் நன்மைகள் நடைபெறும் ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்த ஆண்டு மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகிறது என்று பார்க்கலாம்.

நவகிரகங்கள் பயணம்: இந்த ஆண்டு மே மாதத்தில் குரு பெயர்ச்சி நிகழ உள்ளது மேஷ ராசியில் உள்ள குரு ரிஷப ராசிக்கு பெயர்வது நன்மை தரும் அமைப்பாகும். சனி பகவான் கும்ப ராசியிலும், ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசியிலும் பயணம் செய்யப்போகின்றனர். இந்த கிரகங்களின் பயணத்தினால் உடல் ஆரோக்கியம், கடன் பிரச்சினை, வேலை வாய்ப்பு, கல்வி, குடும்பத்தில் மகிழ்ச்சி எப்படி இருக்கும் என்று பலரும் யோசிப்பதுண்டு. கிரகங்கள் கோச்சாரப்படி சஞ்சரிக்கும் நிலையை வைத்தும் கிரகப் பெயர்ச்சியை வைத்தும் பலன்களைப் பார்க்கலாம்.

New year Rasi Palan 2024 Tamil: Prediction for Mesham,Rishabam,Mithunam, Kadagam

மேஷம்: விடா முயற்சியே விஸ்வரூப வெற்றி என்பதை உணர்ந்து கொண்ட மேஷ ராசிக்காரர்களே. இந்த ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. ஜென்ம குரு சாதகமான பலன்களையே தந்து கொண்டிருக்கிறார். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். உங்களின் நட்பு வட்டம் விரிவடையும். வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். உங்களது பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆண்டின் பிற்பகுதியில் குடும்ப ஸ்தானத்திற்கு செல்லும் குரு அபரிமிதமான பண வருமானத்தை கொடுப்பார். ராகு 12 ம் இடத்தில் பயணம் செய்வதால் வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும். ராகு நல்ல வாய்ப்பை கொடுப்பார். வெளிநாட்டு வர்த்தக தொடர்பு ஏற்படும். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். கேது 6ம் வீட்டில் பயணம் செய்வதால் புது வேலை வாய்ப்பு அமையும். புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாற்றி பழைய கடன்களை அடைக்கலாம். லாப சனி நீங்கள் கேட்டதையும் கொடுப்பார் கேட்காததையும் அள்ளிக்கொடுப்பார். தொழில் வியாபாரத்தில் தொட்டதெல்லாம் துலங்கும். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் லாப வீட்டில் சஞ்சரிப்பதால், செயலில் வேகம் கூடும். வருமானம் அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை முடித்து புது வீட்டில் குடிபுகுவீர்கள். அனுபவபூர்வமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். அழகும் வசீகரமும் அதிகரிக்கும்.

ரிஷபம்: கலை உணர்ச்சியும் காதல் உணர்வும் அதிகம் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே. பிறக்கப்போகும் 2024 புத்தாண்டு உங்களுக்கு அதிர்ஷ்டங்களை அள்ளித்தரப்போகிறது. 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது பயணம் செய்கிறார். இது நன்மை தரும் அமைப்பாகும். லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் ராகு எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவு போட்டி பொறாமைகளை ஒழிப்பார்.எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் நீங்கள் மாட்டிய பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். புத்திர பாக்கியம் தெய்வஅருள் புண்ணியம் காதல் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானத்தில் கேது வருவதால் சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும். வாங்கிய கடனுக்கு அசலுக்கு அதிகமாக கடனை செலுத்தியவர்களுக்கு கடன் சுமை குறையும்.

மிதுனம்: புத்திசாலித்தனத்தை இடத்திற்கு ஏற்ப உபயோகிக்கும் மிதுன ராசிக்காரர்களே... ஆண்டின் முற்பகுதியில் லாப குரு வருமானத்தை அள்ளித்தரப்போகிறார். விரைய குரு சுப விரையங்களை ஏற்படுத்துவார். உங்களால் எல்லோருக்கும் நல்லது நடக்கும். ஆனால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. புதிதாக அறிமுகம் ஆனவர்களை நம்பி எந்த செயலையும் செய்ய வேண்டாம். திருமணம் சுப காரியங்கள் நடைபெறும். புதிய வீடுகளை வாங்க கடன் உதவி கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்தியோகத்தில் முன்னேற்றம் வரும். இது நாள் வரை கூட்டு தொழில் செய்தவர்கள் பிரிந்து புதிய தொழில் தொடங்கலாம். அஷ்டம சனி முடிந்து விட்டதால் உங்களுக்கு கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடிவு விமோசனம் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வணங்க நன்மைகள் நடைபெறும். நான்காம் வீட்டு கேது பத்தாம் வீட்டில் ராகு பயணம் செய்வதால் நல்ல தொழில் அமையும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

கடகம்: கற்பனை உணர்ச்சி அதிகம் கொண்ட கடக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரம் இந்த ஆண்டு சாதகமாகவே உள்ளது. அஷ்டமத்து சனியின் சஞ்சாரம் சாதகமாக இல்லை என்றாலும் பிற கிரகங்களின் சேர்க்கையினால் உடல் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி யோகத்தை கொடுக்கும். தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தும். நிர்வாக பொறுப்புகள் தேடி வரும் கூடவே வசதி வாய்ப்புகளும் வரும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் யோகத்தை தரும். நடக்கும் தசைகள் யோகமாக இருந்தால் தலைக்கு வந்தது தலை பாகையோடு போய்விட்டது என்று ஆறுதல் படுத்திக்கொள்ளலாம். லாப வீட்டில் பயணம் செய்யப்போகும் குரு பகவான் அற்புதமான யோகத்தையும் அதிரடி மாற்றங்களையும் தரப்போகிறார். குரு பகவானின் பார்வையும் கோடி கோடியாக செல்வத்தை தேடித்தரப்போகிறது. முருகப்பெருமானை சஷ்டி நாளில் வழிபட சங்கடங்கள் தீரும். சூரியனை கண்டு பனி விலகுவதை போல ஒவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். கணேசனை சதுர்த்தி நாட்களில் சென்று அருகம்புல் சாற்றி வழிபடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+