புத்தாண்டு ராசி பலன் 2024: குரு, சனி, ராகு கேது.. கிரகங்களின் ஆட்டம்.. கோடீஸ்வர யோகம் யாருக்கு?
சென்னை: 2024ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. ராகு கேது, சனி, குரு ஆகிய கிரகங்களினால் மனிதர்களின் வாழ்க்கையில் பலவித மாற்றங்கள் ஏற்படப்போகிறது. திடீர் திருப்பங்களும் அதிர்ஷ்டமும் சில ராசிக்காரர்களுக்கு தேடி வரப்போகிறது. சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டு எப்படி இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சிம்மம்: வீரமும் வெற்றியை இலக்காகக் கொண்டு செயல்படும் சிம்ம ராசிக்காரர்களே. இந்த புத்தாண்டு உங்களுக்கு யோகமான ஆண்டாக அமையப் போகிறது. கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. கிரக பெயர்ச்சிகளும் நன்மை தரக்கூடியதாக உள்ளது. குருவின் பயணம் குதூகலத்தை ஏற்படுத்தும். ஆண்டின் முற்பகுதியில் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நல்ல வேலை கிடைக்கும். பாக்ய ஸ்தானத்தில் குரு இருப்பதால் யோகங்கள் கூடி வரும். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகள் கூட தேடி வரும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. 2024ஆம் ஆண்டு மே மாதம் குரு பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். செய்யும் தொழிலில் கவனமும் நிதானமும் தேவைப்படும். ஆண்டு முழுவதும் ராகு எட்டாம் வீட்டிலும் கேது இரண்டாம் வீட்டிலும் பயணம் செய்வதால் விபரீத ராஜயோகம் தேடி வரப்போகிறது. சனி பகவான் கண்டச்சனியாக பயணம் செய்தாலும் சச மகா யோகம் தேடி வரப்போகிறது 2024ஆம் ஆண்டினை சந்தோஷமாக அனுபவியுங்கள்.
கன்னி: அறிவாற்றலும் அதை செயல்படுத்தும் திறமையும் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. சுப கிரகமான குருபகவான் எட்டாம் வீட்டில் இருந்தால் அவர் பார்க்கும் வீடுகள் உங்களுக்கு பணவரவையும் லாபத்தையும் தரும். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி ஏற்படும். ஆண்டின் பிற்பகுதியில் நிகழ உள்ள குருப்பெயர்ச்சி அதி அற்புதமான யோகங்களை தரப்போகிறது. பாக்கிய ஸ்தானத்தில் உள்ள கிரகங்களின் சஞ்சாரத்தினால் நீங்கள் வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது. பொருளாதார நிலை படு சூப்பராக இருக்கும். குரு பகவானின் பார்வை உங்களுக்கு கிடைக்கப்போகிறது. ஆறில் சனி அமர்ந்திருக்க எதிரிகள் தொல்லை ஒழியும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. கேது ராசியிலும் ராகு ஏழாம் வீட்டிலும் பயணம் செய்வதால் ஏதாவது ஒரு வழியில் பண வருமானம் வந்து கொண்டே இருக்கும்.
துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே. இந்த ஆண்டு உங்களுக்கு யோகமான ஆண்டாக அமையப்போகிறது. ஆண்டின் துவக்கத்தில் குரு பகவான் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிகழும். ஆண்டின் பிற்பகுதியில் குரு பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாவது வீட்டிற்கு செல்லப்போகிறார். குருவின் சஞ்சாரம் பண வருமானத்தை கொடுத்தாலும் சிலருக்கு மருத்துவ செலவுகளைத் தரும். சிக்கனமாக செலவு செய்யவும். யாருக்கு உதவி செய்யும் முன்பு யோசித்து செய்யவும். சொந்த பந்தங்களுடன் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. 6ஆம் பாவத்தில் ராகுவும் 12 ஆம் பாவத்தில் கேதுவும் பயணம் செய்வதால் எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன் அடைப்படும் தீராத நோய் தீரும்.போட்டி பொறாமை பொடி பொடியாகும். தொழில் முயற்சிகள் கை கூடும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். வெளிநாட்டு வேலைகள் அமையும். செல்வாக்கு சொத்து சுகத்தை கொடுக்கும். சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பண வருமானம் அதிகரிக்கும்.
விருச்சிகம்: வெற்றியை இலக்காகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே இந்த ஆண்டு உங்களுக்கு நன்மைகள் அதிகம் நிகழப்போகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ளார். பணவரவு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். மனைவி, கணவன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மே மாதம் நிகழ உள்ள குரு பெயர்ச்சியினால் திடீர் பயணங்கள் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். குரு பகவான் உங்கள் ராசிக்கு நேர் எதிரே அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். தொட்டதெல்லாம் துலங்கும் 2024ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக அமையப்போகிறது. ராகு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் கேது பகவான் லாப ஸ்தானத்திலும் பயணம் செய்யப்போவதால் உங்களுக்கு அற்புத யோகங்கள் தேடி வரப்போகிறது. 2024ஆம் ஆண்டில் பெண்களுக்கு மனம் போல மாங்கல்யம் அமையப்போகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications