2023 இயர் எண்டர் ஜோதிடம்: 2024ல் வேலையில் மாற்றம்.. வெற்றியை யாரெல்லாம் ருசிக்கப்போகிறீர்கள்?
சென்னை: சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த ஆண்டாக சிலருக்கு 2023ஆம் ஆண்டு முடிந்திருக்கிறது. பலர் வேலைக்காக காத்திருக்கின்றனர். இருக்கிற வேலையில் இருந்து வேறு வேலைக்கு மாறலாமா என்றும் யோசித்துக்கொண்டிருக்கின்றனர். வேலை மாறுவதற்கும் நேரம் காலம் இருக்கிறது. எந்த ராசிக்காரர்கள் 2024ஆம் ஆண்டில் புது வேலைக்கு மாறலாம் என்று பார்க்கலாம்.
துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு முதல் நான்கு மாதங்களுக்கு 7ஆம் வீட்டில் அமர்ந்து குரு பகவான் பார்வையிடுகிறார். நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. துலாம் ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். எத்தனையோ சோதனைகளை சந்தித்து இருப்பீர்கள் 2024ஆம் ஆண்டில் சாதனைகளை செய்யப்போகிறீர்கள். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு 2024ஆம் ஆண்டில் நல்ல வேலை கிடைக்கும். புது வேலையால் 2024ஆம் ஆண்டில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கப்போகிறது.

விருச்சிகம்: உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் சனி பகவான் ஆட்சி பெற்ற நிலையில் பயணம் செய்கிறார். சுக ஸ்தான அதிபதி ஆட்சி பெற்று நான்காம் வீட்டில் பயணம் செய்வது சிறப்பு. சனி பகவான் சச யோகத்தை தரப்போகிறார். வேலைக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணங்கள் நிறைவேறும். 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் எதையும் சாதிப்பீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும், புதிய தொழில் வியாபாரம் தொடங்கலாம். செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புது வேலை தேடுபவர்கள் 2024ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு வேறு வேலை தேடலாம்.
தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு பிறக்கப்போகும் 2024ஆம் ஆண்டு அற்புதமான மாற்றங்களைத் தரப்போகிறது. சனி பகவான் சாதகமாக இருப்பதால் வேலைக்காக நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் பார்வை கிடைப்பதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் பல மடங்காக உயரப்போகிறது. கடந்த காலங்களில் சோதனைகளை சந்தித்தவர்களுக்கு சாதனை புரியும் ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது.
மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு வெற்றிகளை தேடித்தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. நல்ல வேலை கிடைக்கப்போகிறது. வேலையில் இருந்தாலும் புரமோசனும் சம்பள உயர்வும் இல்லையே என்று ஏங்கித்தவித்தவர்களுக்கு புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கப்போகிறது. வருமானம் பல வழிகளிலும் அதிகரிக்கப்போகிறது. குரு பகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. கவலைப்பட்டுக்கொண்டிருந்த உங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப்போகிறது. தொட்டது துலங்கப்போகும் பொற்கால ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது.
கும்பம்: 2024ஆம் ஆண்டு உங்களுக்கு குபேர யோகம் கிடைக்கப்போகிறது. எதிர்பாராத அதிர்ஷ்டம் லாட்டரி மூலம் கிடைக்கப்போகிறது. இருக்கிறதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள். உண்மையான உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைக்கும். பல வழிகளில் இருந்தும் பணம் வரும். யாருக்கும் வாக்கு கொடுக்கக் கூடாது. மே மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு நல்லதொரு மாற்றம் ஏற்படப்போகிறது. குரு பகவானின் பார்வையால் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
மீனம்: 2024ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் நிகழப்போகிறது. நிறைய பண வருமானம் வரும். 2025ஆம் ஆண்டு மே மாதம் வரைக்குமே குரு பகவான் உங்களுக்கு மிகப்பெரிய ராஜயோகத்தை தரப்போகிறார் என்றாலும் இருக்கும் வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள். வேலையை விட்டு விட்டு மற்றொரு வேலைக்கு ஆசைப்படாதீர்கள் பாதியில் விட்டு விட்டு போய்விடுவார்கள். இருக்கிற தொழிலை விட்டு விட்டு புதிய தொழில் தொடங்காதீர்கள். மீன ராசிக்காரர்களுக்கு பிறக்கப்போகும் புத்தாண்டு நல்ல செய்தியை தரப்போகிறது.












Click it and Unblock the Notifications