2024 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்: தொட்டதெல்லாம் பொன்னாகும்.. இந்த ராசிக்காரருக்கு ஜாக்பாட் நிச்சயம்
சென்னை: 2023ஆம் ஆண்டு முடிந்து 2024ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. வேலைக்காக எத்தனையோ பேர் காத்திருக்கின்றனர். திருமணம், குழந்தை பாக்கியத்திற்காகவும் காத்திருப்பவர்களுக்கு பிறக்கப்போகும் புத்தாண்டில் நல்ல செய்தி தேடி வரப்போகிறது. விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டில் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, லாப ஸ்தானத்தில் கேது நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சனி பகவான், குரு பகவான் 6ஆம் வீடு என வருட ஆரம்பத்தில் ஆண்டு கிரகங்களின் பயணம் உள்ளது. ராசிநாதன் செவ்வாய் ஆண்டின் துவக்கத்தில் வலிமையான நிலையில் பயணம் செய்வது சிறப்பான நிலையில் உள்ளது. அர்த்தாஷ்டம சனி, ருண ரோக சத்ரு ஸ்தான குரு நோய்களை வெளிப்படுத்தி குணமடைய வைக்கும்.

சனி தரும் சசயோகம்: சுக ஸ்தானத்தில் சனி பகவான் ஆட்சி பெற்ற நிலையில் பயணம் செய்கிறார். சுக ஸ்தான அதிபதி ஆட்சி பெற்று நான்காம் வீட்டில் பயணம் செய்வது சிறப்பு. சனி பகவான் சச யோகத்தை தரப்போகிறார். அதே போல 5ஆம் வீட்டில் உள்ள ராகு பகவான் ஆட்சி பெற்ற குரு பகவானைப் போலவே செயல்படுவார். பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் அதிகரிக்கும். வேலைக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் சிக்கித்தவிப்பவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும்.
குரு பெயர்ச்சி 2024: ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியை பார்வையிடுகிறார். களத்திர ஸ்தானத்தில் தனித்த குரு அமர்ந்து இருந்தாலும் குருவின் சுபத்துவமான பார்வையால் பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். எதையும் சாதிப்பீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும், திருமணம் சுப காரியம் நடைபெறும். திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு தொட்டில்கள் ஆடும்.
தொழிலில் லாபம்: 2024ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு குரு பகவானின் பயணமும் பார்வையும் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. புதிய தொழில் வியாபாரம் தொடங்கலாம். செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள், லாட்டரியில் ஜாக்பாட் கிடைக்கும். 2024ஆம் ஆண்டில் சோதனைகளை சாதனைகளாக மாற்றப்போகிறீர்கள். வயதானவர்களுக்கு நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். மருத்து செலவுகள் முடிவுக்கு வரப்போகிறது.
ஜாக்பாட்: கடந்த பல ஆண்டு காலமாகவே கஷ்டத்தில் தவிக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு முதல் தொட்டதெல்லாம் பொன்னாகும் திடீர் ஜாக்பாட் வந்து திக்குமுக்காட வைக்கும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். வாகன பயணங்களில் கவனமாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது. மனதளவில் உற்சாகமாகவும், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மொத்தத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் தரக்கூடிய ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications