புத்தாண்டு ராசி பலன் 2024: யார் வீட்டில் பண மழை.. 6 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றம்!
சென்னை: புத்தாண்டு புது முயற்சிகளை உருவாக்கும்.2024 ஆம் ஆண்டு பிறந்து விட்டது. எத்தனையோ எதிர்பார்ப்புகள் பலருக்கும் இருக்கும். நல்ல வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், பொருளாதார வளர்ச்சி என பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். துலாம், விருச்சிகம்,தனுசு, மகரம்,கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது. யாருடைய வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டில் ராஜ யோகம் தேடி வரப்போகிறது. கெட்டவன் கொட்டிடில் கிட்டிடிடும் ராஜயோகம் என்பது போல 2024ஆண்டில் விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. ராகு பகவான் அள்ளித்தரப்போகிறது. உங்களின் பொருளாதார நிலை உயரும். பண வருமானம் அதிகரிக்கும். சேமிப்புகள் கூடும் குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். பணம் கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்கள் மறையும். வரவேண்டிய பணவருமானம் கைக்கு வரும். பூர்வீக சொத்துக்களை நல்ல விலைக்கு விற்பதால் லாபம் வரும். பணத்தால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனகசப்புகள் அகலும். கணவன் மனைவி உறவு பலப்படும். வியாழக்கிழமை திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானையும் குருபகவானயும் வணங்கலாம். நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு உங்களுடைய வாழ்க்கையில் 2024ஆம் ஆண்டு முதல் அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகிறது. உங்களுக்கு நல்ல நேரம் வந்து விட்டது. குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீரும். குரு பலத்தால் உங்களுக்கு அற்புதமான மாற்றம் ஏற்படப்போகிறது. வேலை தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஆண்டு முழுவதும் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பீர்கள். சொத்துக்கள் சேர்ப்பீர்கள். வசதி வாய்ப்பு பெருக்கும். 2024 ஜனவரி முதல்
உங்கள் வாழ்க்கையில் திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. பிரதோஷ காலங்களில் நந்திக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
தனுசு: 2024ஆண்டின் துவக்கத்தில் இருந்த கோடி பலன்கள் கிடைக்கப்போகிறது. காரணம் குரு பகவானின் பார்வை கிடைக்கப்போகிறது. சுபகிரகம் ஆறில் வந்தால் அசுப பலன்கள் குறையும் என்பது ஜோதிட விதி. மே மாதம் முதல் குரு பகவானின் உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மாற்றம் முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீடு மனை,வாங்கும் வாய்ப்பும் யோகமும் கைகூடி வரும். இது வரை தடைப்பட்ட கிரகபிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். குரு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்ய நன்மைகள் நடைபெறும்.
மகரம்: 2024ஆம் ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. குரு பகவான் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறார். குருவின் பார்வை 9 ஆம் இடத்தை பார்ப்பதால் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும். கடைசி நேரத்தில் நின்று போன திருமணம்,திருமணத்தடை உண்டான ஜாதகருக்கு எல்லாம் திருமணம் நடக்கும். புத்தாண்டில் உங்கள் வீட்டில் புது வரவு நிச்சயம். வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புது வீடு கட்டி குடி போகலாம். பாதியிலே நின்று போன வீட்டு வேலைகள் பூர்த்தியாகி சுபகாரியம் நடக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும்.
கும்பம்: 2024ஆம் ஆண்டு முதல் கும்ப ராசிக்காரர்களுக்கு வளர்ச்சி நிறைந்த ஆண்டாக அமையப்பபோகிறது. நலிவுற்ற தொழில் வளர்ச்சி அடையும். தொழில் வியாபாரத்தில் இதுவரை முடங்கிய லாபம் எல்லாம் உங்களை தேடி வரப்போகிறது. பதவியில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் விட்டு வெகுதூரம் சொல்லப்போகிறீர்கள். வெளிநாட்டு வேலை கிடைக்கும். மாற்றமும் முன்னேற்றமும் வரப்போகிறது. இதுவரை தடைப்பட்ட சுபகாரியம் வெற்றிகரமாக நடைபெறும். வேலை காரணமாக சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
மீனம்: பல ஆண்டுகாலமாக திருமணம் தடைபட்டு நிற்பவர்களுக்கு இனிதே திருமணம் நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் மதிபு தேடி வரும். பதவி உயர்வுகள் தேடி வரும். புது முயற்சிகள் கைகூடும். பணம் பல வழிகளில் இருந்தும் தேடி வரும். உங்களின் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். மகிழ்ச்சியும் மன நிம்மதியும் நிறைந்த ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமைந்துள்ளது. உங்கள் வாழ்க்கையில் மே மாதத்திற்குப் பிறகு அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகிறது. எந்த காரணத்திற்காகவும் யாருக்கும் பணத்தை கடனாக தர வேண்டாம்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications