Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2018 புத்தாண்டு பலன்கள்: கடகம் ராசிக்காரர்களே... இனி ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்தான்!

2018ஆம் புத்தாண்டு பிறக்கப் போகிறது. கிரகங்களின் இருப்பு சூழ்நிலையால் கடகம் ராசிக்காரர்களுக்கு களைகட்டும் புத்தாண்டாக அமையப்போகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சிம்மம்,தனுசு... ஆங்ரி பேட்ஸ்... 12 ராசிக்காரர்களும் ஏன் கோபப்படுவாங்க தெரியுமா?- வீடியோ

    சென்னை: 2017ஆம் ஆண்டு முடியப்போகிறது. 2018ஆம் ஆண்டில் நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகவே இந்த புத்தாண்டு ராசி பலன். கற்பனை திறன் அதிகம் கொண்ட கடகம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையப்போகிறது.

    கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட ராகு கேது பெயர்ச்சி, செப்டம்பர் மாதம் ஏற்பட்ட குருப்பெயர்ச்சி, டிசம்பரில் சனிப்பெயர்ச்சி என கிரக சூழ்நிலைகள் கடகம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

    கடகம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 6ஆம் வீட்டில் சனி, 4ஆம் வீட்டில் குரு பகவான், ஜென்மத்தில் ராகு மற்றும் 7ஆம் வீட்டில் கேது சஞ்சரிக்கிறார்கள். 2018 ஆம் ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும்.

    செல்வாக்கு அதிகரிக்கும்

    செல்வாக்கு அதிகரிக்கும்

    உங்கள் ராசிக்கு கேந்திர ஸ்தானமான 4ல் குரு இருந்தாலும் உங்களுக்கு படி அளவுக்கும் கடவுளினால் வரும் புத்தாண்டில் வசதி வாய்ப்பு, செல்வம், செல்வாக்கு, அசையா சொத்து யோகம் அமையும். 2018 அக்டோபர் 11ல் ஏற்படவுள்ள குரு இடம் மாறுகிறார். இதனால் பொருளாதார ரீதியாக வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும்.

    பணவரவு தாராளம்

    பணவரவு தாராளம்

    4 ஆம் இட குரு பஞ்சம ஸ்தானமாகிய 5 ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பது சிறப்பான அம்சமாகும்.

    திருமண வயதை அடைந்தவர்களுக்கு ஆண்டின் இறுதியில் திருமண சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் எல்லாத் தேவைகளும் நிறைவாகப் பூர்த்தியாகும். தம்பதியரிடையை ஒற்றுமை நிலவும்.

    புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியமும் கிட்டும்.

    கவுரவம் தேடி வரும்

    கவுரவம் தேடி வரும்

    6 ஆம் இடத்து சனியால் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழில் வியாபார உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகளும் கவுரவமும் தேடி வரும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் தேடி வரும். பணம் கொடுக்கல், வாங்கலில் நல்ல லாபத்தைப் பெற முடியும்.

    டென்சன் வந்தாலும் கூலா சமாளிங்க

    டென்சன் வந்தாலும் கூலா சமாளிங்க

    ஜென்ம ராசியில் இராகு, 7 ல் கேது, 4 ல் குரு சஞ்சரிப்பதால் கணவன், மனைவியிடையே சின்னச்சின்ன சண்டைகள் அலைச்சல் அதனால் டென்ஷன் அதிகரிக்கும். என்ன டென்சன் வந்தாலும் கூலாக சமாளிங்க பாஸ். ஜென்ம ராசியில் இராகு 7 ல் கேது சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் படிப்படியாக உடல் ஆரோக்கியம் மேம்படும்.

    உத்யோக உயர்வு

    உத்யோக உயர்வு

    சனி 6 ல் சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும் தேடி வரும். உங்களிடமுள்ள திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அமையும். உங்களுடன் வேலை செய்பவர்கள் தேடி வந்து ஆதரவு தருவார்கள். உயரதிகாரிகள், உங்கள் பாஸ் தேடி வந்து பாராட்டுவார்கள். இந்த ஆண்டு புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் சிறப்பாக அமையும்.

    தொல்லை ஒழியும்

    தொல்லை ஒழியும்

    4 ல் குரு இருந்தாலும் சனி சாதகமாக இருப்பதால் பணவரவு தாரளமாக இருக்கும். பணம், கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். அக்டோபருக்கு மேல் அதிக அளவு பணம் கிடைத்து தொழில் முதலீடுகளை அதிகரிக்கலாம்.

    தொழில் வியாபாரத்தில் இரு மடங்கு லாபம் கிடைக்கும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இருக்க மாட்டார்கள்.

    கணவன் மனைவி ஒற்றுமை

    கணவன் மனைவி ஒற்றுமை

    கடக ராசி இல்லத்தரசிகளே... பெண்களே வேலை வேலை என்று உற்சாகமாக செய்தாலும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. சின்ன பிரச்சனைகள் தோன்றினாலும் உடனே கவனிங்க. உங்க குடும்பத்தில் ஒற்றுமை, திருமண சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பு ஏற்படும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். 2018ல் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் அதிகரிக்கும்.

    மாணவர்கள் உற்சாகம்

    மாணவர்கள் உற்சாகம்

    மாணவ மாணவியர்களின் கல்வித் திறன் மேலோங்கும். நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உங்களின் செயல்பாடுகளால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் பெருமை அடைவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். இந்த வருடம் முழுவதும் ஒரு புது விதமான உணர்வு பாய்வதை உடலிலும் உள்ளத்திலும் பாய்வதை உணர்வீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தாலும், உண்ணும் உணவில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

    விநாயகர், தட்சிணாமூர்த்தி

    விநாயகர், தட்சிணாமூர்த்தி

    ராகு ஜென்மத்தில் இருப்பதால் துர்க்கை வழிபாடு அவசியம் , 7ல் கேது பகவான் அமர்ந்திருப்பதால் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. அதே போல தட்சிணாமூர்த்தி கொண்டைக்கடலை மாலை போட்டு வழிபடுங்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+