புத்தாண்டு ராசிபலன் 2018: சிம்மராசிக்காரர்களுக்கு வெற்றிகரமான ஆண்டு
2018 ஆம் ஆண்டில் எதையும் சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள் சிம்ம ராசிக்காரர்களே!
Recommended Video

சென்னை: எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் வெற்றிகரமான ஆண்டாக அமையும்.
கடந்த ஆண்டு 4 ஆம் இடத்தில் இருந்து சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார்.
ராகு 12ஆம் வீட்டிலும் கேது பகவான் 6ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். குரு பகவான் 3ஆம் வீட்டிலும் வரும் 11.10.2018 முதல் 4ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது.

கவனம் தேவை
புத்தாண்டு பிறக்கும் போது உங்கள் ராசி நாதன் சூரியன் தனுசு ராசியில் சனியோடு கூடவே சுக்கிரனோடும் சேர்ந்திருக்கிறார். இது சாதகமற்ற அம்சம்தான். அரசு வேலைக்கான தேர்வுகள் எழுதுபவர்கள் அவசரப் படவேண்டாம். திருமணத்திற்காக முயற்சிகளை மேற்கொண்டால் தடைகளுக்குப் பின்பே வெற்றி கிடைக்கும். சூரியன் சனி சேர்க்கையினால் செலவுகள் சற்றே அதிகரிக்கும்.

பேச்சு சாமர்த்தியம்
சுக்கிரன், புதன் சாதகமாக இருப்பதால் பேச்சு சாமர்த்தியத்தினால் வருமானம் அதிகரிக்கும்.
மார்ச் மாதத்தில் செவ்வாய் இடப்பெயர்ச்சியடைந்து சனியோடு இணைகிறார். இதனால் உங்களுக்கு சின்னச் சின்ன செலவுகள் வந்து கொண்டே இருக்கும் தயாரின் உடல் நலனின் கவனம் தேவை.

இடமாற்றம் ஏற்படும்
12ஆம் வீட்டில் உள்ள ராகுவினால் வண்டி வாகனங்கள் மற்றும் வீடு, மனையை புதுப்பிப்பதற்காக செலவுகளைச் செய்ய நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகளும் சங்கடங்களும் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். பணவரவுகள் ஏற்ற இருக்கமாக இருப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் சில ஆதாயங்களைப் பெற முடியும்.

கொடுக்கல் வாங்கல் கவனம்
குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டும். 6ஆமிட கேதுவின் புண்ணியத்தால் அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.
எந்த வித போட்டிகளையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டில் உள்ள நண்பர்களினால் நல்லதே நடக்கும். பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் வம்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

படிப்பில் கவனம் தேவை
மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை இருக்கும் காரணம் சனிபகவானின் சஞ்சாரம், பார்வைதான். இதேபோல குருவும் சாதகமற்று இருக்கிறார். விடாமுயற்சியுடன் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். மொத்தத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு இது முயற்சிகளினால் வெற்றி கிடைக்கும் ஆண்டாக அமையும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications