2019 புத்தாண்டு பலன்கள் - மேஷத்திற்கு மோசமில்லை - என்ஜாய் மக்களே

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    2019 புத்தாண்டு பலன்கள் -மேஷம் ராசி-வீடியோ

    மதுரை: வீரமும் செய்யும் செயலில் வெற்றியை குவிக்கும் மேஷ ராசிக்காரர்களே... 2019 புத்தாண்டு பொதுவாக உங்களுக்கு நல்லவிதமான பலன்களை அள்ளி அள்ளி கொடுக்கப்போகிறது. ஆண்டின் முற்பகுதியில் குரு சஞ்சாரம் சாதகமாக இல்லை என்றாலும் குரு பார்வையினால் கடன் பிரச்சினைகள் தீரும். இந்த ஆண்டு சனியின் சஞ்சாரம், ராகு கேது பெயர்ச்சி, ஆண்டு இறுதியில் வரப்போகும் குருப்பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது.

    இந்த புத்தாண்டின் தொடக்கத்திலிருந்தே தொழில் உத்தியோகம் சிறப்படையும் இது வரை தடைபட்டிருந்த தொழில் கொஞ்சம் கொஞ்சமாக விறுவிறுப்படையும். பரம்பரை தொழில் நல்லபடியாக செழித்து வளரும். ஆண்டின் இறுதியில் குரு பாக்கிய ஸ்தானமான ஒன்பதால் வீட்டிற்கு மாறுவது சாதகமான அம்சம். கிரகங்களின் கூட்டணி, பார்வை, சஞ்சாரம் அனைத்துமே உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரப்போகிறது.

    இந்த ஆண்டு ஒன்பதாம் வீட்டில் உள்ள சனியோடு குரு, கேது இணைகின்றனர். நான்காம் வீட்டில் உள்ள ராகு மூன்றாம் வீட்டிற்கு மாறுகிறார். தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 2019 ஜனவரி முதல் டிசம்பர் 2019 வரை மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.

    New year rasi palangal 2019 - Mesham Rasi prediction

    ஜனவரி - ஆரோக்கியத்தில் அக்கறை

    செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே... அக்டோபர் இறுதி வரை குருபகவான் சஞ்சாரம் எட்டாம் இடத்தில் மறைந்திருக்கிறார். மார்ச் மாதம் வரை நான்கு, பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு கேது கிரகங்கள் மார்ச் மாதத்திற்குப் பிறகு 3 மற்றும் 9ஆம் இடத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இந்த ஆண்டு உங்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஜனவரி மாதம் துவக்கத்தில் தனுசு ராசியில் ஒன்பதாம் இடத்தில் சூரியன் சனி புதன் கூட்டணி எட்டாம் இடத்தில் சுக்கிரன் குரு கூட்டணி உங்கள் உடல் நலனில் அசதியை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருக்கவும். யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். சிக்கனமாக செலவு செய்தால் பணத்தை சேமிக்கலாம். மாணவர்கள் நன்றாக படித்து தேர்வு எழுதலாம். தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம். பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தை அக்கறை காட்டினால் மட்டுமே மருத்துவ செலவுகளை தவிர்க்க முடியும்.

    பிப்ரவரி - பணவரவு

    மகரம், கும்பம் ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் காலகட்டமாகும். ராசிக்கு 10,11ஆமிடங்களில் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பதால் பணவரவுகளில் இருந்த தடைகள் சற்று விலகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் பணிகள் சிறப்படையும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். தொழிலில் ஏற்படும் போட்டிகளை சமாளிப்பீர்கள். மேலதிகாரிகளோடு அனுசரித்து செல்ல வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் வராமல் தவிர்க்க முடியும். இந்த மாதம் செவ்வாய் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பான அம்சம் வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடுவீர்கள். சுக்கிரன் பெயர்ச்சியும் மனதில் நிம்மதியை ஏற்படுத்தும். விரைய ஸ்தானத்தில் புதன் நீசம் பெற்று அமர்வதால் மாணவர்கள் நன்றாக படித்தால் மட்டுமே தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற முடியும். பெண்களின் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

    மார்ச் - பணம் விரையம்

    சூரியன் இம்மாதம் லாப ஸ்தானத்திலும் விரைய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். எனவே பணவிரையம் எற்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ராகு கேது பெயர்ச்சி நிகழும் மாதம் இது. ராகு ராசிக்கு மூன்றாம் வீட்டிலும் கேது ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சனியோடு இணைகிறார். சுக்கிரன் இம்மாதம் பத்தாம் வீட்டிலும் நீச்ச புதன் வக்ரம் அடைகிறார். தாராள பணவரவு செலவுகளை ஏற்படுத்தும். அலுவலகத்தில் உடன் பணி செய்பவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். குருபகவான் எட்டில் இருந்து பன்னிரண்டாம் வீட்டை பார்ப்பதாலும் சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வந்து அமையும்.

    மாணவர்கள் நன்றாக படித்து தேர்வுகளை எழுதுவீர்கள்.

    ஏப்ரல் - எல்லாம் ஜெயமே

    குருபகவான் இரண்டாம் இடத்தை பார்வையிடுவதால் தனவரவுகளும் நன்றாக இருக்கும். குருபகவான் சுபக்கிரகம் என்பதால் வருமானத்தை கொடுத்து விரையங்களை தருவார். குருபகவான் இரண்டை பார்ப்பதால் திருமணம் ஆகாத ஆண்,பெண் இருபாலருக்கும் திருமணம் நடந்து விடும். அவருடைய பார்வை நாலாம் இடத்திற்கு விழுவதால் ஜனன ஜாதகத்தில் நான்காம் அதிபதி, சுக்கிரனுடைய தசாபுக்திகள் நடைமுறையில் இருந்தால் சொந்த வீடு அமைந்து விடும். தாயார் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தாயாருக்கு நன்மைகள் உண்டாகும். தாயாரின் ஆதரவுகள் கிடைக்க பெறும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். முடிந்தவரை பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

    மே - நன்மைகள் நடைபெறும் காலம்

    இரண்டாம் வீட்டில் உள்ள சூரியன், சுக்கிரனால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். மூன்றாம் இடத்தில் உள்ள ராகு, ஒன்பதாம் இடத்தில் உள்ள கேதுவால் நன்மைகள் நடைபெறும். ராகு அந்நிய கிரகம் என்பதால் அந்நியர்களால் நன்மைகள், குறிப்பாக வேற்று மதம் வேற்று இனத்தவர்களால் நன்மைகள் நிச்சயமாக இருக்கும். கடந்த ஒன்றே கால் வருடமாக ராகு நான்காம் இடத்தில் இருந்து கொண்டு அலைச்சல்களை கொடுத்து வந்தார்.அலைக்கழிப்புகளை கொடுத்து வந்தார். அதெல்லாம் இனி இருக்காது. ராகு மூன்றில் தன்னுடைய நட்பு கிரகமான புதன் வீட்டில் இருப்பது பல வெற்றிகளை தரும் எடுத்த காரியங்களை ஈசியாக முடிப்பீர்கள். செவ்வாய் இரண்டாம் வீட்டில் இருப்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. கோபத்தை தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

    ஜூன் - பொன், பொருள் வாங்கலாம்

    சூரியன் சஞ்சாரம் ராசிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் வீட்டில் அமைந்துள்ளது. ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராகு, சூரியன், புதன் செவ்வாய் என கிரகங்களின் கூட்டணி உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நன்மைகள் நடைபெறும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்படையும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

    ராகுவாலும்,குருவாலும் வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்று ,அடிக்கடி விமான பயணங்கள் உண்டாகும்.

    ஜூலை - ஆன்மீகப்பயணம்

    வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம்.திரைகடல் ஓடியும் திரவியங்கள் தேடி நிறைய சம்பாதித்து ,பேரும் புகழும் கிடைக்கப்பெற்று உங்கள் சமுதாய அந்தஸ்தும் ,மதிப்பும் மரியாதையும், உங்கள் பொருளாதாரமும் முன்னேற்றமடையும். கடன்கள் குறையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பத்தில் இருந்து வேலையில் அலைச்சல்களை, அடிக்கடி தொழில் மாற்றங்களை தொழில் நஷ்டங்களை தந்து வந்த கேது,இந்த வருடம் ஒன்பதாம் பாவத்தில் சனியோடு சேர்ந்து நன்மைகளைத் அள்ளித்தரப்போகிறார். ஒன்பதாம் பாவகம் கேதுவுக்கு மிகவும் பிடித்த இடமாகும். பாக்கிய ஸ்தானத்தில் இருப்பது ஆன்மீக விஷயங்களுக்கு நல்லது. பக்தி மார்க்கத்தில் கேது ஈடுபடுத்துவார். ஆன்மீகப்பயணங்களை அதிகம் மேற்கொள்வீர்கள்.

    ஆகஸ்ட் - மனஅமைதி

    சூரியன் சஞ்சாரம் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமைந்துள்ளது. கூடவே சுக்கிரன் செவ்வாய் கூட்டணி நன்மைகளை அள்ளித்தரும் மாதம்.

    கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஓத்துழைப்புகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

    செப்டம்பர் - பயணங்கள் சிறக்கும்

    ராசிக்கு ஐந்தாம் வீட்டில் கூட்டணி அமைத்திருந்த கிரகங்கள் ஆறாம் வீட்டிற்கு மாறும் காலம். சூரியன், புதன் சுக்கிரன் ஆறாம் இட கூட்டணியால் சின்னச் சின்ன பயணங்கள் ஏற்படும். கடன் தொல்லைகள் நீங்கும். மாணவர்கள் தங்களின் கல்வியில் கவனம் செலுத்துவ நல்லது. திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் சற்றே தள்ளிப்போடுங்கள் காரணம் கன்னி ராசியில் களத்திரகாரகன் சுக்கிரன் நீசம் பெற்று அமர்ந்துள்ளார்.

    அக்டோபர் - அருமையான மாதம்

    சூரியன் மாதத்தின் பிற்பகுதி வரை ஆறாம் இடத்தில் அமர்ந்திருந்தாலும் பின்னர் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். எட்டாம் வீட்டில் சுக்கிரன், புதன், குரு சஞ்சரிப்பது சாதகமான அம்சமல்ல. வீண் செலவுகள் வந்து செல்லும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும்.

    வாக்கியப்படி மாத இறுதியில் குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. ஒன்பதாம் இடத்தில் சனி, கேது உடன் குரு அமர உள்ளது சிறப்பான அம்சம்.

    அலுவலகத்தில் உயர்பதவிகள் தேடி வரும்.

    நவம்பர் - குரு அருளால் நன்மை

    ஜென்ம ராசிக்கு 7ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு. குரு குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9ஆம் வீட்டில் சனி, கேது உடன் சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவி இடையே ரொமான்ஸ் உணர்வு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும். 3ல் ராகு 6ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கடன்கள் நிவர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். கேது, குரு, சனி, சுக்கிரன் கிரகங்களின் கூட்டணி ஒன்பதாம் இடத்தில் உள்ளதால் வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்பும் அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

    டிசம்பர் - காதலில் வெற்றி

    ராசிக்கு எட்டு மற்றும் ஒன்பதாம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் உள்ளது. மாதத்தின் முற்பாதியில் ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன், குரு, சனி, கேது கிரகங்கள் கூட்டணி அமைத்து சஞ்சரிக்கின்றன. மாதத்தின் பிற்பகுதியில் சூரியன், குரு, சனி, கேது கூட்டணியால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப வேலை வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து காதல் உணர்வுகள் அதிகரிக்கும். அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை.

    2019ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த ஆண்டாக,மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையப்போகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+