2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்: மேஷம் ராசிக்கு பலன்கள் - பரிகாரங்கள்
2019ஆம் ஆண்டு முடியப்போகிறது. 2020ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: 2020ஆம் ஆண்டில் நமக்கு புதிய நல்ல வேலை கிடைக்குமா என்று சிலர் யோசிக்கலாம். சில ராசிக்காரர்களோ, திருமணத்திற்கு பெண் பார்க்கலாமா இந்த ஆண்டாவது திருமணம் முடியுமா என்றும் யோசிப்பார்கள். அதே போல இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு போகலாமா என்றும் யோசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்காகவே இந்த புத்தாண்டு பலன்களை தருகிறோம். உங்களின் பல கேள்விகளுக்கும் இந்த புத்தாண்டு பலன்களில் விடை கிடைக்கும். மேஷம் ராசிக்காரர்களுக்கு பலன்களை பார்க்கலாம்.
2020ஆம் புத்தாண்டில் பொருளாதாரம், புதிய வேலை, திருமணம், தொழில் வளர்ச்சி, லாபம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். புத்தாண்டு பிறக்கும் போதே கிரகங்கள் மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் தனுசு லக்னம் லக்னத்தில் கேது, குரு, சூரியன், சனி, புதன், மகரத்தில் சுக்கிரன் கும்பத்தில் சந்திரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
2020 ஆம் புத்தாண்டில் முக்கியமான கிரகப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சிதான் ஆண்டின் துவக்கமான ஜனவரியிலேயே தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பகவான் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். அதிசாரமாக மகரத்திற்கு சென்று சில மாதம் சஞ்சரிக்கிறார். பின்னர் தனுசுக்கு வந்து மீண்டும் ஆண்டு இறுதியில் மகரத்திற்கு இடம்பெயர்கிறார். செப்டம்பர் மாதம் 2020ஆம் ஆண்டு ராகு பகவான் மிதுனம் ராசியிலிருந்து கால புருஷனுக்கு இரண்டாவது ராசியான நில ராசி மற்றும் சுக்கிரனின் ராசியில் பெயரும் காலம் அயல்நாட்டு வேலை வாய்ப்புகள் பெருகும். கேது பகவான் கால புருஷனுக்கு 8வது ராசியான விருச்சிகத்திற்கு பெயரும் காலம் திடீர் அரசியல் மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் மந்த நிலை மறையும். திடீரென முன்னேற்றம் ஏற்படும்.

மேஷம்
செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்களே. பிறக்கப்போகும் 2020ஆம் புத்தாண்டு அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. சனிபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கு வரப்போகிறார். பத்தாம் அதிபதி பத்தில் அமரப்போகிறார். குருபகவான் பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு அமரப்போகிறார். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். உங்களின் தன்னம்பிக்கை கூடும். நீங்கள் பட்ட கடன்கள் அடைபடும். திருமணம் கைகூடி வரும் அரசு துறைகளில் வேலை செய்பவர்களுக்கு அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது.

யோகமான ஆண்டு
தொழில் செய்வர்களுக்கு லாபம் கூடும். பேச்சிலராக இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும் 90 கிட்ஸ் கவலைப்பட வேண்டாம் 2020ல் பலருக்கு கெட்டிமேளம் கொட்டும். திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக தவம் இருப்பவர்களுக்கு கை மேல் பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மொத்தத்தில் 2020ஆம் புத்தாண்டு யோகமான ஆண்டாக அமையப்போகிறது. மலைமேல் இருக்கும் முருகனை தரிசனம் செய்யுங்கள்.

பணவரவு
கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து பார்க்கும் போது 2020ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே நன்மைகள் அதிகம் நடக்கும். அதிர்ஷ்டங்கள் தேடி வரும். திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நட்புகள் மூலம் நன்மைகள் நடைபெறும். கடன்கள் அடைபடும் அளவிற்கு பணவரவு அதிகரிக்கும். பயணங்கள் அதிகம் நடக்கும்.

கிரகங்கள் சாதகம்
சனியும் குருவும் சாதகமாக உள்ளது. அரசியல் அரசு துறைகளில் வேலை செய்பவர்களுக்கு நல்லது நடக்கும். ராணுவம், காவல்துறையில் உள்ளவர்களுக்கு வளர்ச்சிகள் அதிகம் நடக்கும். தொழில் துறையினருக்கு முன்னேற்றங்கள் அதிகரிக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். முதல் ஒன்பது மாதங்களில் அதிகம் நன்மைகள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. மூன்றாம் வீட்டில் உள்ள ராகு செப்டம்பர் மாதம் இரண்டாம் வீடான ரிஷபத்திற்கு நகர்கிறார். கேது எட்டாம் வீடான விருச்சிகத்திற்கு நகர்கிறார்.

அரசு வேலைகள் கிடைக்கும்
மாணவர்கள் கல்விக்காக வெளியூர் வெளிநாடு பயணங்கள் செல்வீர்கள். பட்டங்கள் வாங்குவீர்கள். மந்தநிலை மாறி உடல் சுறுசுறுப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பாக்யம், தொழில் ஸ்தானத்தில் கிரகங்கள் வலுவடைந்து நன்மையை செய்யப்போகிறது. அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சனியின் சஞ்சாரத்தினால் வளர்ச்சிகள் அதிகம் கிடைக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications