Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நவம்பர் மாத ராசி பலன் 2022: சுபிட்சமும் சந்தோஷமும் இந்த ராசிக்காரர்களுக்கு தேடி வரும்..என்ஜாய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவம்பர் மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களுக்கு சுபிட்சங்கள் கிடைக்கப்போகின்றன. மன மகிழ்ச்சியும் நிம்மதியும் தேடி வரப்போகிறது. சிலருடைய வாழ்க்கையில் எதிர்பாராத நற்காரியங்கள் நடைபெறப்போகிறது. நவம்பர் மாதத்தில் துலாம் ராசியில் நான்கு கிரகங்கள் சேர்ந்திருக்க குரு பகவானும், சனி பகவானும் நேர்கதியில் ஆட்சி பெற்று பயணம் செய்கின்றனர். நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நவம்பர் மாதத்தில் சூரிய பகவான் துலாம், விருச்சிகம் ராசிகளில் பயணம் செய்வார். துலாம் ராசியில் பயணிக்கும் புதனும், சுக்கிரனும் விருச்சிக ராசிக்கு இடம் மாறுவார்கள். மகரம் ராசியில் சனி, மீன ராசியில் குரு, மேஷ ராசியில் ராகு, மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன.

நவ கிரகங்களின் இடப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளை செய்யும். சில ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சிலருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும். நவம்பர் மாதத்தில் யாருக்கெல்லாம் சாதகமான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கப்போகிறது. ஏழரை சனியில் ஜென்ம சனி உங்களுக்கு ஆட்டி வைத்தது. விரைவில் ஜென்ம சனி முடிவுக்கு வரப்போகிறது. வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கப்போகிறது. நல்ல வேலை கிடைக்கும். தடை தாமதங்கள் நீங்கும். ஆறாம் வீட்டில் இருக்கும் செவ்வாய் பகவான் வக்ரமடைந்து ஐந்தாம் வீட்டிற்கு வருவதால் கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

சொத்து சேர்க்கை ஏற்படும். சுக்கிரன் சூரியன், புதன் இணைந்து லாப ஸ்தானத்தில் மாத பிற்பகுதியில் பயணம் செய்வதால் உங்களின் மனநிலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியம் தொடர்பாக பேசலாம். கணவன் மனைவி பிரச்சினை சுமூகமாக முடிவுக்கு வரும். உங்களுடைய பிரச்சினைகள் அனைத்து மாத பிற்பகுதியில் முடிவுக்கு வரப்போகிறது. மகிழ்ச்சியாக நவம்பர் மாதத்தை கடந்து விடுவீர்கள்.

கும்பம்

கும்பம்

ஏழரை சனி உங்களுக்கு அதிக விரைய செலவுகளை கொடுக்கிறது. அதிக கடன் உங்களை அல்லாட வைக்கும். பணம் வரவில்லை என்ற கவலை ஒரு பக்கம் வாட்டினாலும் குரு பகவான் கொஞ்சம் கருணை காட்டுவார். பத்தில் சூரியன், சுக்கிரன்,புதன் பதவி உயர்வை தருவார். நிறைய நற்காரியங்கள் நடைபெறும். வேலையில் மாற்றங்கள் கிடைக்கும் வெற்றிகள் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரப்போகிறது. நோய்கள் நிவர்த்தியாகி மாற்று வழி கிடைக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும்.

ஆரோக்கியம் அற்புதம்

ஆரோக்கியம் அற்புதம்

சுபகாரியங்கள் தடைகளை தாண்டி நடைபெறும். கடந்த சில மாதங்களாகவே உடல் ஆரோக்கிய குறைபாடு செயல்பட விடாமல் செய்தது. இனி உங்களுக்கு கிரகங்கள் சாதகமாக இருப்பதால் நோய்கள் நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். சுறுசுறுப்போடும் உற்சாகமாகவும் இருப்பீர்கள். மாணவர்களுக்கு இதுநாள் வரை இருந்த குழப்பங்கள் நீங்கப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். புரமோசன் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி முன்னேறுவீர்கள். இல்லத்தரசிகளுக்கு இந்த மாதம் மன மகிழ்ச்சி அதிகரிக்கும் மாதமாக நவம்பர் மாதம் அமைந்துள்ளது.

மீனம்

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. உங்களுக்கு அற்புதமான மாதமாக அமைந்துள்ளது. மாத முற்பகுதியில் முக்கியமான கிரகங்கள் எட்டாம் வீட்டில் இணைந்துள்ளன. குடும்பத்தில் சின்னச் சின்ன குழப்பங்கள் வந்து நீங்கும். பண விவகாரங்களில் கவனம் தேவை. ராஜயோகம் வருவதற்கான கால சூழ்நிலை மாறப்போகிறது. மாத பிற்பகுதியில் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன் இணைகின்றன. உங்கள் ராசிநாதன் குருவின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மனநிலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

பண வருமானம் அதிகரிக்கும்

பண வருமானம் அதிகரிக்கும்

லாப சனி உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் லாபத்தை தருவார். செவ்வாய் பகவான் வக்ரமடைந்துள்ளதால் பின்னோக்கி மூன்றாம் வீட்டிற்கு வருகிறார். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். புதிய பிரச்சினைகள் எதுவும் இந்த மாதம் வரப்போவதில்லை. குடும்ப விசயங்களைப் பற்றி அடுத்தவரிடம் பேச வேண்டாம். புதிய முடிவுகளை தைரியமாக எடுக்கலாம். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். பண வருமானம் அதிகரிப்பதால் சேமிப்பும் அதிகரிக்கும். திருமண சுபகாரியம் கைகூடப்போகிறது. குருபலன் வந்திருப்பதால் காதல் திருமணம் சிலருக்கு கை கூடி வரும். பங்குச்சந்தை முதலீடுகள் மூலம் பண வருமானம் வரப்போகிறது. மொத்தத்தில் நவம்பர் மாதம் சுபிட்சம் நிறைந்த மகிழ்ச்சியான மாதமாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+