நவம்பர் மாத ராசி பலன்.. உங்கள் வீட்டில் பண மழை..அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 3 ராசிக்காரர்கள்
சென்னை: நவம்பர் மாதம் மழைக்காலம்..அடை மழை விடாது பெய்யும். காடுகளில் பச்சைப் பசேல் என பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கும். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை அடை மழையாக கொட்டப்போகிறது. துலாம் ராசியில் நான்கு கிரகங்கள் சேர்ந்திருக்க குரு பகவானும், சனி பகவானும் நேர்கதியில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் பண மழையும் கொட்டப்போகிறது. மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாதத்தில் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
நவம்பர் மாதத்தில் சூரிய பகவான் துலாம், விருச்சிகம் ராசிகளில் பயணம் செய்வார். துலாம் ராசியில் பயணிக்கும் புதனும், சுக்கிரனும் விருச்சிக ராசிக்கு இடம் மாறுவார்கள். மகரம் ராசியில் சனி, மீன ராசியில் குரு, மேஷ ராசியில் ராகு, மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
நவ கிரகங்களின் இடப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளை செய்யும். சில ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சிலருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும். நவம்பர் மாதத்தில் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசியில் ராகு, மூன்றாம் வீட்டில் செவ்வாய் பகவான், ஏழாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், புதன், கேது, பத்தாம் வீட்டில் சனி, 12ஆம் வீட்டில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. உங்களுக்கு இந்த மாதம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பயணங்கள் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு சிறப்படையும். குடும்ப வாழ்க்கை சிறப்படையும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

திருமண வாழ்க்கை
திருமணத்திற்காக வரன் தேடுபவர்களுக்கு மிகவும் நல்ல மாதம். மனதிற்குப் பிடித்த வாழ்க்கைத்துணை தேடி வரும். புதன் பகவான் கேது உடன் இணைந்திருப்பதால் சிலருக்கு சின்னச் சின்ன பாதிப்புகள் வந்து சேரும். மாத பிற்பகுதியில் புதனும், சுக்கிரனும் எட்டாம் வீட்டிற்கு செல்வதால் வெளி வட்டார தொடர்பு அதிகரிக்கும். வெளிநாடு யோகம் கை கூடி வரப்போகிறது. மாணவர்களுக்கு கல்வி யோகம் கை கூடி வரப்போகிறது. ஆன் லைன் கல்வி பயில அப்ளை செய்யலாம். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கை கூடி வரும்.

தொழிலில் லாபம்
தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளிநாடு வேலை வாய்ப்பு கிடைக்கும். மாத பிற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனங்களில் கவனமும் நிதானமும் தேவை. ருசியான உணவு கிடைக்கிறதே என்று காரமான உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள். எண்ணெய் பலகாரங்களை குறைவாக சாப்பிடுங்கள். வேலையில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது யாரை நம்பியும் பொறுப்பை ஒப்படைக்காதீர்கள். புதிய வேலைக்கு மாற முயற்சி செய்யலாம். நவம்பர் மாதத்தில் நீங்கள் பைரவர் வழிபாடு செய்வது அவசியம். கால பைரவ அஷ்டகம் படிப்பது அவசியம். காரிய வெற்றி உண்டாகும். பஞ்சமி நாளில் வாரகி அன்னையை கிழங்கு, வாழைப்பழம் நைவேத்தியம் செய்து வழிபட நன்மைகள் உண்டாகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம். இந்த மாதம் ராசிநாதனும் ஆறாம் வீட்டு அதிபதியுமான சுக்கிரபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் கூடவே சம்பள உயர்வும் கிடைக்கும். சுக்கிரன் 12ஆம் தேதிக்கு மேல் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். குடும்பத்தில் உற்சாகமும் குதூகலமும் உண்டாகும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண செய்தி, சுப காரிய செய்தி தேடி வரும்.

சுப செலவுகள் வரும்
குரு பகவான் நிறைய லாபத்தை தரப்போகிறார். வேலையில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். செவ்வாய் இரண்டாவது வீட்டில் பயணம் செய்வதால் கணவன் மனைவி இடையே சண்டை போடுவதை விட சமாதானமாக போவதே நல்லது. நிறைய சுப செலவுகள் வரும். கார்த்திகை மாதத்தில் கல்யாண யோகம் கைகூடி வரப்போகிறது. மகனுக்கோ மகளுக்கோ நல்ல வேலை கிடைக்கும். புது வாய்ப்புகள் தேடி வரும்.

காதல் திருமணம்
இளைய தலைமுறையினர் காதல் திருமணத்திற்கு தயாராவீர்கள். வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும், மன குழப்பங்களும், குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் நீங்கும். ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வாகன பயணங்களில் கவனம் தேவை. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மன மகிழ்ச்சி அதிகரிக்க லட்சுமி நரசிம்மரை வணங்கவும் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்
புதன்பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி தேடி வரும். அஷ்டமத்து சனி ஆட்டி படைக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். எத்தனையோ கஷ்டங்களை சந்தித்து இருப்பீர்கள். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். புது வேலை கிடைக்கும். குபேர யோகம் தேடி வரப்போகிறது. நிறைய நற்காரியங்கள் உங்கள் வாழ்க்கையில் நடைபெறப்போகிறது.

சண்டை வரும் கவனம்
சூரியன் இந்த மாதம் ஐந்து மற்றும் ஆறாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு போட்டி தேர்வுகளில் வெற்றி செய்தி தேடி வரும். மாத பிற்பகுதிகளில் கணவன் மனைவி இடையே சில பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை.எத்தனையோ நல்ல விசயங்கள் நடந்தாலும் மனதை ஏதோ பாரம் அழுத்திக்கொண்டு இருக்கிறது.

ஆரோக்கியத்தில் அக்கறை
ராசியில் செவ்வாய் பயணம் செய்கிறார் கோபத்தை கட்டுப்படுத்தவும். மாத பிற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். சரியான நேரத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். குடும்பத்தின் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து நீங்கும். பெற்றோரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. மாத பிற்பகுதியில் நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்திலும் படிக்கும் இடத்திலும் நிறைய பேர் உங்களை உசுப்பேற்றுவார்கள். அப்படி வம்பு செய்பவர்களிடம் அமைதியாக கடந்து விடுங்கள். இந்த மாதம் பொறுமையும் நிதானமும் தேவைப்படும். சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications