Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நவம்பர் மாத ராசி பலன் 2023: ஆட்டிப்படைக்கும் சனி பகவான்.. அஞ்சாத ராசிக்காரர்கள் யார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவம்பர் மாதத்தில் நவகிரகங்களின் இடம் மாற்றத்தாலும் சனி பகவானின் சஞ்சாரத்தாலும் கடகம், சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு சில சோதனைகள் வரத்தான் செய்யும். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் எளிதில் சமாளிக்கக் கூடிய தெம்பு கொண்டவர்கள். ராகு கேது பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. தனித்த குரு பொன்னான பார்வையால் பலன்களை அதிகரிக்கப்போகிறார். என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று விரிவாக பார்க்கலாம்.

கடகம்: பத்தாம் வீட்டில் தனித்த குரு பதற்றத்தை தருவார். அஷ்டமத்து சனி ஆட்டம் காண வைக்கிறார். குடும்ப வாழ்க்கையில் குழப்பங்கள் வந்து கொண்டிருக்கும். சண்டை சச்சரவு வேண்டாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கிரகங்கள் எதுவுமே சாதகமாக இல்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். ராகு கேது அற்புதமான பலன்களை தரப்போகிறது. குரு பகவானின் பார்வையில் செவ்வாய் இருக்கிறார். 15 நாட்களில் செவ்வாய் இடம் மாறி 5ஆம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்வது சிறப்பு.

November month Rasi Palan 2023: November matha Rasi Palan Tamil prediction for Kadagam and Simmam Rasi

ஆரோக்கியத்தில் அக்கறை: சூரியன், செவ்வாய், புதன் பயணம் உற்சாகத்தை தரும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. துன்பங்கள் வந்தாலும் பொறுமையுடன் எதையும் கையாளுங்கள். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமும் நிதானமும் அவசியம். எதையும் நேர்மறையோடு எதிர்கொள்ளுங்கள். உணவு விசயத்தில் கவனம் தேவை. கண்டதையும் சாப்பிட்டு விட்டு குத்துதே குடையுதே என்று கஷ்டப்படாதீர்கள். எதையும் விழிப்புணர்வோடு எதிர்கொள்ளுங்கள்.

வீடு வாங்கும் யோகம்: வேலை செய்யும் இடத்தில் பொறுமையும் நிதானமும் அவசியம். அவசரப்பட்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து விட்டு அவதிப்படாதீர்கள். நான்காம் வீட்டில் கிரகங்கள் இணைந்துள்ளதால் சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. நிலம், வீடு வாங்கும் யோகம் வந்து விட்டது. சுக்கிரன் நீச்சமடைந்து கேது உடன் இணைந்திருப்பதால் வேலையில் மாற்றம் வர வாய்ப்பு உள்ளது. மாத பிற்பகுதியில் சூரியன், செவ்வாய் இடப்பெயர்ச்சி ஆன பின்னர் யோகங்கள் கைகூடி வரப்போகிறது.

சிம்மம்: ராசிக்கு இரண்டாம் வீட்டில் கேது சுக்கிரன், ராசிநாதன் சூரியன் மூன்றாம் வீட்டில் நீச்சமடைந்து செவ்வாய், புதனுடன் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். சனி பகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. அதே நேரத்தில் குருவின் பார்வையும் குதூகலத்தை கொடுத்தும். மாத பிற்பகுதியில் நான்காம் வீட்டிற்கு கிரகங்கள் இடப்பெயர்ச்சி அடைகின்றன. ருச்சிக யோகம் கைகூடி வரப்போகிறது. வீடு, வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. சொத்துக்கள் வாங்கலாம்.

விழிப்புணர்வு தேவை: சுக்கிரன் சூரியன் நீச்சமடைந்து பயணம் செய்யும் மாதம். முதல் 15 நாட்கள் உங்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு அவசியம். யாரை நம்பியும் வேலை, பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களின் காலை வாரி விட நினைப்பார்கள். எத்தனையோ சோதனைகள் வந்தாலும் அதை எல்லாம் சாதனைகளாக மாற்றிக்காட்டுவீர்கள். குழந்தைகள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் வரப்போகிறது.

கண்டக சனி: கண்டக சனியின் பார்வையில் இருக்கிறீர்கள். பெர்சனல் வாழ்க்கையில் கவனம் செலுத்துவது அவசியம். காதலிப்பவர்களுக்கு கவனம் தேவை. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அதிக அக்கறை செலுத்துவது நல்லது. புதுவிதமான யோசனைகளை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். திருமண தடைகள் நீங்கப்போகிறது என்றாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.

கவனம் தேவை: குரு பார்வை இருப்பதால் மாணவர்களுக்கு நல்ல நேரம். அவசரப்பட வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாரை நம்பியும் பணத்தை கடனாக கொடுக்க வேண்டாம். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து அடி எடுத்து வைப்பது நல்லது. மொத்தத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் கவனமாக கடக்க வேண்டிய மாதமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+