நவம்பர் மாத ராசி பலன் 2023: அள்ளித்தரப்போகும் குரு பகவான்.. விபரீத ராஜயோகம் பெறும் மேஷம்
சென்னை: நவ கிரகங்களின் தலைவன் சூரிய பகவான் துலாம் மற்றும் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் நவம்பர் மாதம் சில ராசிக்காரர்களுக்கு அற்புத யோகத்தை தரப்போகிறது. ஆங்கில மாதத்தில் 11வது மாதம் மேஷ ராசியில் குரு, கன்னி ராசியில் சுக்கிரன்,கேது, துலாம் ராசியில் சூரியன், புதன், செவ்வாய், கும்ப ராசியில் சனி, மீன ராசியில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த கிரகங்களின் பயணத்தால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: குரு ஜென்ம ராசியில் சுபமான நிலையில் இருக்கிறார். சக்தியான நிலையில் இருக்கிறார். குரு பகவானின் பார்வை அற்புதமான யோகத்தை தரப்போகிறது. தனித்த குரு கோடிகளை தரப்போகிறது. தெளிவான மனநிலையில் முக்கியமான நிலையில் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் சூரியன், செவ்வாய், புதன் கூட்டணி அமைத்திருக்க குருபகவானின் பார்வை ராசிநாதன் செவ்வாய்க்கு கிடைக்கிறது குரு மங்கல யோகம் கைகூடி வந்துள்ளது. 15 நாட்களுக்கு பலம் அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.

சுறுசுறுப்பு கூடும்: தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புரமோசன் கிடைக்கும். வேலை மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த மன குழப்பங்கள் நீங்கும். வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள். செயல்களில் நெருப்பாக இருப்பீர்கள். புத்திர பாக்கியம் கைகூடி வரப்போகிறது. காதல் மணியடிக்கும் என்றாலும் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் வெற்றிகள் தேடி வரப்போகிறது. குருவின் பார்வை புதன் பகவானின் மீது விழுவதால் பேச்சு சிறக்கும். மதிப்பு மரியாதை கூடும்.
பாசிட்டிவ் எனர்ஜி: நல்ல வேலை கிடைக்கும். கடந்த ஓராண்டு காலமாக இருந்த மனவேதனைகள் முடிவுக்கு வரப்போகிறது. நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். 17ஆம் தேதி சூரியன் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு சென்று பயணம் செய்கின்றனர். ஆட்சி பெற்ற செவ்வாய் அற்புத யோகத்தை தரப்போகின்றனர். விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. ராகு கேது விலகி விட்டது. வெளிநாடு செல்லும் யோகம் வரும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் நீச்சமடைந்து கேது உடன் பயணம் செய்யப்போகிறார்.

கவனம் தேவை: கணவன் மனைவி உறவில் கவனம் தேவை. சண்டை சச்சரவுகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாழ்க்கைத்துணையால் சில செலவுகள் தேடி வரும். ஆலய வழிபாடு செல்வது நல்லது. ஆன்மீக பயணங்கள் செல்வது நல்லது. அன்னதானம், ஆடைதானம் செய்யலாம். விபரீத ராஜயோகம் வந்தாலும் பண விசயங்களில் கவனம் தேவை. வாகன பயணங்களில் கவனம் தேவை. காதல் கவனம் தேவை. விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கடன் வாங்கலாம் அதே நேரத்தில் யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்க வேண்டாம்.
ஆரோக்கியத்தில் அக்கறை: வெளிநாடு சென்று படிக்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. குடும்ப உறவுகளால் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வயிறு பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். மறைவிடங்களில் நோய்கள் எட்டிப்பார்க்கும். நோய் தொற்றுகள் வரலாம் கவனமாக இருப்பது நல்லது. வெளியிடங்களில் சாப்பிடும் உணவு விசயங்களில் கவனமாக இருக்கவும். அற்புதமான மாதம் நவம்பர் மாதத்தை நல்லவிதமாக கடத்தி விடுங்கள்.












Click it and Unblock the Notifications