நவம்பர் மாத ராசி பலன் 2023: நினைத்த காரியம் நிறைவேறும்.. மிதுன ராசிக்காரர்களுக்கு தலைகீழ் மாற்றம்
சென்னை: நவம்பர் மாதத்தில் நவகிரகங்களின் இடம்மாற்றத்தால் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகிறது. உங்கள் வாழ்க்கையே நவம்பர் மாதம் முதல் தலைகீழாக மாறப்போகிறது. சூரியன் துலாம் ராசியில் நீச்ச நிலையில் இருந்து விடுதலை பெற்று செவ்வாய் பகவானின் வீடான விருச்சிக ராசிக்கு இடம் மாறும் மாதத்தில் கிரகங்களின் கூட்டணியால் மிதுன ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மிதுனம்: லாப குரு லாபத்தை அள்ளித்தரப்போகிறார். குரு பலன் அற்புதமாக செயல்படப்போகிறது. திருமண சுப காரியம் நடைபெறும். சூரியன், புதன், செவ்வாய் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பயணம் செய்வதால் பிள்ளைகள் வாழ்க்கையில் சுப காரியம் நடைபெறும். ஆறாம் வீட்டிற்கு கிரகங்கள் இடம் மாறினாலும் கவலைப்பட வேண்டாம். நவம்பர் மாதத்தில் நிறைய லாபங்கள் கிடைக்கும். பாக்ய ஸ்தானத்தில் உள்ள சனி பகவானும் லாப ஸ்தானத்தில் உள்ள குரு பகவானும் இந்த மாதத்தில் இருந்து மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றனர்.

வேலை மாற்றம் கிடைக்கும். திடீர் மாற்றங்கள் ஏற்படும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துவது நல்லது. வேலை தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும் வேகமான முன்னேற்றமும் வரும். சனிபகவான் உங்களுக்கு நல்ல யோகத்தை தரப்போகிறார். குரு பகவான் லாப ஸ்தானத்தில் தனித்து பயணம் செய்கிறார். இனி லாபங்களையும் வருமானத்தையும் தரப்போகிறார். வண்டி வாகனங்களில் சில பராமரிப்பு செலவுகள் வரும். வீடு பராமரிப்பு செலவு செய்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
நான்காம் வீட்டில் சுக்கிரன் கேது கூட்டணி உள்ளதால் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்க்காதீர்கள். கார், பைக் வாங்குவதை இந்த மாதம் தவிர்ப்பது நல்லது. உணவு விசயத்தில் கவனம் தேவை. வயிறு பிரச்சினை அல்சர் எட்டிப்பார்க்கும் எனவே இரவு நேர பயணங்களில் வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு வெற்றிகரமான மாதமாக அமைந்துள்ளது. தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெற்று வெற்றி பெறுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
பாதுகாப்புடன் கவனமாக பொறுமையுடன் பயணம் செய்வது நல்லது. பிள்ளைகள் வாழ்க்கையில் சுப காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்காக கடன் வாங்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். முன்னேற்றம் உண்டாகும். சூரியன் நீச்ச நிலையில் செவ்வாயுடன் பயணம் செய்வதால் தினசரி சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. ஆதித்ய ஹிருதயம் படிக்கவும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும் மருத்துவ செலவுகள் வந்து போகும். நிதி நெருக்கடிகள் நீங்கும் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications