நவம்பர் மாத ராசி பலன் 2023: நீச்சமடையும் சுக்கிரன்.. ரிஷபத்திற்கு காதல் கசக்குமா? இனிக்குமா?
சென்னை: நவம்பர் மாதத்தில் நவகிரகங்களின் இடம்மாற்றத்தால் ரிஷப ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையை புரட்டிப்போடப்போகிறது. காதல் கிரகமான சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சமடையும் மாதம் நவம்பர் மாதம். அதுவும் கேது உடன் சுக்கிரன் இணைந்திருப்பதால் சொல்லிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும். ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாதத்தில் எது சாதகம்? எது பாதகம் என்று பார்க்கலாம்.
ரிஷபம்: நவம்பர் மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். காரணம் லாப ராகு வருமானத்தை கொடுப்பார். தொழில் ஸ்தானத்தில் சனி, விரைய ஸ்தானத்தில் குரு பயணம் செய்வதால் தொழில், வியாபாரம் வளர்ச்சியடையும். வேலை மாறலாம். அரசு வேலைக்காக தேர்வு எழுதலாம். ஆறாம் வீட்டில் சூரியன், செவ்வாய் மாத முற்பகுதியில் இணைந்துள்ளதால் முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். ஆட்சி பெற்ற செவ்வாய் அற்புத மாற்றங்களை தரும்.

கோபம் வேண்டாம்: சூரியன் முதல் பாதி நாட்கள் ஆறாம் வீட்டில் நீச்சம் பெற்று பயணம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, உணவு விசயத்தில் நிதானம் தேவை. தொழில் ஸ்தானத்தில் சனி பயணம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். மனதில் விரக்தி, உடல் ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் உண்டாகும். அதிகமாக கோபப்பட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் அதிகம் பேசாமல் மென்மையான போக்கை கடைபிடிப்பது நல்லது.
சுக்கிரன் நீச்சம்: ராசிநாதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்சமடைந்து கேது உடன் இருப்பதால் அன்னதானம் செய்வது ஆரோக்கியத்தை அதிகரிக்கும். பொருளாதார இழப்பு ஏற்படாமல் தடுக்கும். சுக்கிர பகவான் கன்னி ராசியில் நீச்சம் பெற்று கேது உடன் பயணம் செய்கிறார். மாத இறுதியில் ஆறாம் வீட்டில் ஆட்சி உச்சம் பெற்று அமரப்போகிறார். தொழில் வளர்ச்சி உண்டாகும். ஐந்தாம் வீட்டு அதிபதி ஆறாம் வீட்டில் பரிவர்த்தனை பெற்று அமர்ந்துள்ளதால் வேலை மாற்றம் ஏற்படும். சிலருக்கு புரமோசனுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். சம்பள உயர்வும் கிடைக்கும்.
காதல் கசக்கும்: உங்கள் ராசிநாதன் சுக்கிரன் நீச்சமடைந்து 5ஆம் வீட்டில் கேது உடன் இணைந்து பயணம் செய்வார். குடும்ப வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும். பற்றற்ற நிலையை ஏற்படுத்தும். உறவுகள் மீது வெறுப்பு ஏற்படும். எதை பற்றியும் யோசிக்காதீர்கள். காதல் விசயங்களில் கவனம் தேவை. பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. காதலில் நம்பிக்கை துரோகத்தை சந்திப்பீர்கள் கவனம்.
திடீர் பண வரவு: 12ஆம் வீட்டில் குரு உடன் இருந்த ராகு விலகி லாப வீட்டில் பலமான நிலையில் பயணம் செய்வதால் தொழில் முதலீடுகள் பெருகும். இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பிரிந்தவர்கள் ஒன்றிணைவார்கள். மேன்மையான நாட்களாக அமையப்போகிறது. திடீர் பண வரவு வரும் செல்வ வளர்ச்சி அதிகரிக்கும். விரைய குருவின் உண்மையான பலத்தை பார்க்கப்போகிறீர்கள். மாணவர்களுக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் கைகூடி வரப்போகிறது.
கடன் நீங்கும்: கடன் பட்டு கலங்கிப்போனவர்கள் இந்த மாதம் மன நிம்மதி அடைவீர்கள். தொழில்ரீதியான முன்னேற்றம் உண்டாகும். மாத பிற்பகுதியில் புதன், சூரியன் ஏழாம் வீடான விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி உங்கள் ராசியை பார்வையிடுவார்கள். செவ்வாய் பகவானும் 7 ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் உங்களுக்கு ருச்சிக யோகம் கைகூடி வரப்போகிறது. நவம்பர் மாதத்தில் சின்னச் சின்ன சலசலப்புகள் ஏற்பட்டாலும் சந்தோஷம் அதிகரிக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications