Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்க 1 ஆம் தேதி பிறந்தவரா? இந்த எண்ணில் பிறந்தவங்களை திரும்பிக் கூட பார்க்காதீங்க

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. இன்றைய கால கட்டத்தில் மேரேஜ் மேட்ரிமோனியல் சைட்களில் நிச்சயமாகின்றன, சிலருக்கு காதலிக்கத்தான் பெண் கிடைப்பதில்லை, கல்யாணத்திற்கும் ஏகப்பட்ட தடைகள் ஏற்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எண்கள் நம்மை ஆளுகின்றன. நாம் இந்த எண்ணில் பிறக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விடுகிறது. நமது பிறந்த தேதியை வைத்து நம்முடைய பெயரையும் அதிர்ஷ்ட எண்ணாக வருமாறு வைத்துக்கொள்வது வாழ்க்கை சிறப்பாக்கும் அதே போல திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது நமது பிறந்த தேதிக்கு எண்ணின் கூட்டுத்தொகைக்கு ஏற்ற நமக்கு ஒத்துவரக்கூடிய நபர்களைத்தான் திருமணம் செய்ய வேண்டும். ராசி பொருத்தம் நட்சத்திரப்பொருத்தம் பார்ப்பது போல எண் பொருத்தமும் பார்ப்பது அவசியம்.

எண்கள் அபரிமிதமான சக்திகளைக் கொண்டவை. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நவகிரகங்கள் எண்களை ஆள்கின்றன. எந்த எண்ணின் கூட்டுத்தொகையில் பிறக்கிறார்களே அந்த எண்ணிற்குரிய கிரகம் அவர்களை ஆட்சி செய்கிறது.

ராசிப்பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம், ஜாதகப்பொருத்தம், பத்துப்பெருத்தம் பார்ப்பது போல எண் பொருத்தமும் பார்ப்பது அவசியம் அப்போதுதான் இல்லற வாழ்க்கை இனிக்கும் நன்மைகள் நடக்கும். எந்த எண்ணில் பிறந்தவர்கள், எண்ணின் கூட்டுத்தொகையில் பிறந்தவர்கள் யாரை திருமணம் செய்யலாம் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

1 ஆம் எண்களின் கூட்டுத்தொகை

1 ஆம் எண்களின் கூட்டுத்தொகை

1,10,19,28 ம் தேதியில் பிறந்தவர்கள் 3, 5, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை மணந்து கொள்ளலாம். 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம். 1ம் எண்ணில் பிறந்த பெண்களை திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.எண் 1 சூரியன் அடுத்தவர்க்கும் தனது இணையும் சூரியன் அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப் பிரச்சினைகளும் குடும்ப அன்யோன்ய குறைவும் ஏற்படும். திருமண தேதி 1, 10, 19, 28 தேதிகளும், 6, 15, 24 தேதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளிலும் திருமணம் செய்வது சிறப்பு. 1 கூட்டுத்தொகை வருபவர்கள் 8 ஆம் கூட்டுத்தொகை வருபவர்களை ஏறெடுத்தும் பார்க்காதீங்க. வாழ்க்கையே நரகமாகிவிடும்.

2ஆம் எண் சந்திரன்

2ஆம் எண் சந்திரன்

2,11,20,29 ம் தேதியில் பிறந்த ஆண்களின் திருமணத்திற்கு 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் ஏற்றவர்கள். இருப்பினும் 7ஆம் தேதி பிறந்த பெண்ணே மிகவும் சிறந்தவள். ஆனால் 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் மணக்கவே கூடாது. பின்பு வாழ்க்கையே நரகமாகிவிடும்.
1ம் எண்ணில் பிறந்த பெண்ணும், இவர்களை அடக்கி ஆட்கொள்வாள். அதே நேரம் நல்ல வழித்துணையாக அமைவாள். எனவே மணம் புரிந்து கொள்ளலாம். இவர்கள் தங்களது திருமணங்களை 1, 10, 19, 28, 6, 15, 24, 7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளும், மற்றும் 1, 6, 7 எண் கூட்டு எண்களாக வரும் தினங்களிலும் செய்து கொள்ள வேண்டும்.

3ஆம் எண் கூட்டுத்தொகை

3ஆம் எண் கூட்டுத்தொகை

3,12,21,30 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கைப் பயணம், இனிமையாக இருக்கும். 2 எண்காரர்களையும் மணந்து கொள்ளலாம். இவர்களை அனுசரித்துப் போவார்கள்.

பொருளாதார வளர்ச்சி 4

பொருளாதார வளர்ச்சி 4

4,13,22,31 ம் தேதியில் பிறந்தவர்கள் 1, 8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். 5 அல்லது 6 எண்களின் பிறந்த பெண்களும் இவர்களுக்கு நன்மையே செய்வார்கள். 4ஆம் தேதி பிறந்த ஆண்கள், 6ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் திருமணம் செய்து கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும். இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1 அல்லது 6 எண்ணாக வரும் தேதிகளில் வைத்துக் கொண்டால், திருமண வாழ்வின் இன்பத்தை அடையலாம்.

திருமணம் நம்பர் 5

திருமணம் நம்பர் 5

5,14,23 ம் தேதியில் பிறந்தவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம். துணிந்து காதல் செய்வார்கள். 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். 1, 3, 6 பிறந்தவர்களையும் திருமணம் செய்யலாம். 9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும் கூட்டு எண் 1, 9 வரும் தேதிகளும் திருமணத்திற்கு உகந்தவை. மேலும் 6, 15, 24 தேதிகளும், கூட்டு எண் 6 வரும் தேதிகளும் ஓரளவுக்குச் சாதகமானவையே. குழந்தை பாக்கியம் இவர்களுக்குக் குறைவு. எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.

6க்கு எதிரி 3

6க்கு எதிரி 3

6,15,24 ம் தேதிகளில் பிறந்த ஆண்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். இவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியும்! 1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தவர்களை தவிர்த்துவிட வேண்டும். அதே போல 3ஆம் எண்காரர்களை மட்டும் மணக்கக்கூடாது.
காரணம் 6ஆம் எண் சுக்கிரன் ஆதிக்கம் பெற்றது. 3 குரு ஆதிக்கம் பெற்றது. குரு சுக்கிரனுக்கு ஆகவே ஆகாது. திருமண தேதியை 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் தேதிகளிலும் செய்து கொண்டால் நன்மை ஏற்படும்.

7ஆம் எண்ணிற்கு ஏற்ற ஜோடி

7ஆம் எண்ணிற்கு ஏற்ற ஜோடி

7,16,25 ம் தேதியில் பிறந்தவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் இனிய இல்லறம் அமையும். 8ஆம் தேதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், திருமண வாழ்க்கையே கசந்துவிடும். திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது! 9ம் எண் நடுத்தரமானதுதான்.

8க்கு பொருத்தமான எண்கள்

8க்கு பொருத்தமான எண்கள்

8,17,26 ம் தேதியில் பிறந்தவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை யோசித்து மணந்து கொள்ளலாம். 8ஆம் எண்வரும் பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது! 2, 7 வரும் பெண்களைத் தவிர்த்துவிட வேண்டும். 9ஆம் எண் பெண்கள் இவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள். திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் மிகவும் நல்லது.

9ஆம் எண்ணிற்கு ஏற்ற ஜோடி எண்

9ஆம் எண்ணிற்கு ஏற்ற ஜோடி எண்

9,18,27 ம் தேதியில் பிறந்தவர்கள் தாம்பத்தியத்தில் மிகுந்த விருப்பமும், வேகமும் உடையவர்கள். செவ்வாயின் ஆதிக்க பெற்ற இந்த எண்ணின் கூட்டுத்தொகையில் பிறந்தவர்கள் தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டு! ஆண் குழந்தை நிச்சயம் ஏற்படும்.2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது! திருமண வாழ்க்கையே கசந்து நொந்து நூலாகி விடுவீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+