Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட்டகாசமான அக்டோபர் மாதம்... யாருக்கு பணவரவு? ரொமான்ஸ் எந்த ராசிக்கு?

அக்டோபர் மாதம் பிறந்து விட்டது. இந்த மாதம் புரட்டாசி, ஐப்பசி தமிழ் மாதங்கள் கொண்டது. கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் சஞ்சரிப்பார். இந்த மாதம் எந்த ராசிக்கார

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்டோபர் மாதத்தில் சூரியன் நீச்ச நிலையில் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலமாகும். இந்த மாதம் குரு பெயர்ச்சி நிகழ உள்ளது குறிப்பிடத்தக்க அமைப்பாகும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இந்த மாதம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் மாதத்தின் நடுவில் அக்டோபர் 18ஆம் தேதி துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். புத்தி நாயகன் புதன் அக்டோபர் 6ஆம் தேதியன்று துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஏற்கனவே சுக்கிரன் அங்கே குடித்தனம் செய்கிறார்.

கடந்த ஓராண்டு காலமாக துலாம் ராசியில் சஞ்சரித்த குரு இம்மாதம் விருச்சிகத்திற்கு இடம் பெயர்கிறார். துலாம் ராசியில் சூரியன்,சுக்கிரன், புதன் சஞ்சரிப்பது சிலருக்கு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.

மேஷம்

மேஷம்

மாத துவக்கத்தில் சூரியன் உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் இருந்து 7 ஆம் வீட்டிற்கு நகர்கிறார். சனி பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் நீடிப்பதால் வெளி உலக தொடர்புகள் அதிகரிக்கும். குரு பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு இடம் பெயர்வதால் பெரிதாக நற்பலன்களை எதிர் பார்க்க முடியாது. செவ்வாய் உங்கள் ராசியின் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் அதிக வேலை சுமை

ஏற்படும். எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செயல்படவும். நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டு. ரொமான்ஸ் உணர்வு அதிகமாகவே இருக்கும். குரு பெயர்ச்சிக்கு பின்னர் காதல், திருமண வாழ்க்கையில் குழப்பம் ஏற்படும்.

ரிஷபம்

ரிஷபம்

சூரியன் உங்கள் ராசியில் 5ஆம் வீட்டிலும் மாத பிற்பகுதியில் 6ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். அப்பாவுடன் சின்னச் சின்ன சச்சரவுகள் வந்து செல்லும். குரு பெயர்ச்சியினால் நிரறய நன்மைகள் நடக்கும். மன அழுத்தம் பதற்றம் குறையும். பிரிந்திருந்த கணவன் மனைவி இணைவார்கள். இது சிறப்பான மாதம் ரொமான்ஸ் அதிகம் நிறைந்த மாதமாகும். நீங்கள் மகிழ்ச்சியோடு முன்னேறி செல்லலாம்.

மிதுனம்

மிதுனம்

சூரியன் சஞ்சாரத்தால் நன்மையும், தீமையும் கலந்த கலவையான பலன்கள் கிடைக்கும். புதன் இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்களை தருவார். வீட்டில் நீங்கள் சுப காரியங்கள் நடத்துவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் திருமணத்திற்கு ஒப்புதல் பெறுவது அவ்வளவு எளிதானதல்ல. குரு பெயர்ச்சிக்குப் பின்னர் நிறைய நன்மைகள் நடக்கும். விருந்தினர்கள் வருகையினால் செலவுகள் அதிகரிக்கும்.

கடகம்

கடகம்

சூரியன் சஞ்சாரம் நல்ல பலன்களை தரும். ராகு, கேது மற்றும் செவ்வாய் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. குரு மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். குரு பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டுவருவார். பணவருவாய் அதிகரிக்கும். செலவுகள் குறையும். உங்கள் பெற்றோர்கள் உங்கள் காதல் திருமணத்திற்கு பச்சை கோடி காட்டுவார்கள்.

சிம்மம்

சிம்மம்

சூரியனின் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தரும். குரு பகவான் பெயர்ச்சி நன்மை ஏற்படும். உங்கள் சோதனைக் காலம் முடிவுக்கு வருகிறது. மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண எற்பாடுகள் நடக்கும். திருமணம் செய்தவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். கூடவே செலவுகளும் தேடி வரும். சமாளித்து வெற்றி பெருவீர்கள்.

கன்னி

கன்னி

சூரியன் சஞ்சாரம் சிறப்பானதாக இல்லை. இரண்டாம் வீட்டில் உள்ள குரு 3வது வீட்டிற்கு நகர்வது சிறப்பானதல்ல. இந்த மாதம் வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்கும். இதனால் கையிருப்பு கரையும். காதல் திருமணம் செய்ய இது ஏற்ற காலமல்ல. தம்பதியரிடையே சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும்.

துலாம்

துலாம்

சூரியன் சஞ்சாரம் சிறப்பாக உள்ளது. ஜென்ம குருவின் தாக்கம் இந்த மாதத்தின் முதல் சில நாட்கள் இருக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் உச்சம் வேற்று உங்களுக்கு நல்ல பலன்களை தருவார். குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்கள் நிதி நிலையில் முன்னேற்றத்தை தருவார். சோதனை காலம் முடிவுக்கு வந்து பொற்காலம் பிறக்கப் போகிறது. பண வரவு அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்கள். வங்கி கடன் மற்றும் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க இது ஏற்ற காலகட்டமாகும்.

விருச்சிகம்

விருச்சிகம்

லாப ஸ்தானத்தில் உள்ள சூரியன் பிற்பகுதியில் விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். குரு பெயர்ச்சியால் ஜென்ம குருவும் சாதகமாக இல்லை. எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் நீங்கள் யோசிப்பது நல்லது. உங்கள் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.

குரு பகவான் அதிக சண்டைகளை ஏற்படுத்தக் கூடும். எனினும் செவ்வாய், கேது மற்றும் சுக்கிரன் உங்களது பிரச்சனைகளை உடனடியாக சரி செய்ய உதவுவார்கள். நீங்கள் பொறுமையாக இருந்து அத்தகைய சூழலை சமாளிக்க வேண்டும். உங்கள் செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். கவனம் தேவை.

தனுசு

தனுசு

சூரியன் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் இருந்து 11ஆம் வீட்டிற்கு பெயருவது உங்களுக்கு சாதகமான பலனை தரும். குரு மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு சிறப்பாக உள்ளது. குரு பெயர்ச்சிக்குப் பின்னர் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அதிக செலவுகளை ஏற்படுத்தும். ஜென்ம சனியால் அலர்ஜி, சளி, இருமல் ஏற்படும். ராகு உங்களுக்கு அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.

 மகரம்

மகரம்


சூரியன் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். செவ்வாய் மற்றும் கேது இணைத்து உள்ளதால் தம்பதியரிடையே தேவையற்ற வாக்குவாதம் மற்றும் பிரச்சனைகளை உருவாக்கும். சனி பகவான் உங்களுக்கு தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவார். குரு உங்கள் ராசியின் லாப ஸ்தானத்திற்கு அக்டோபர் 11, 2018 அன்று பெயருவது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.

உங்கள் வருமானம் அதிகரிக்கும். நீங்கள் புது வீடு வாங்க இது ஏற்ற சமயம். நல்லதே நடக்கும்.

கும்பம்

கும்பம்

சூரியன் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தராது. செவ்வாய் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அதிக தடைகளையும் ஏமாற்றங்களையும் தரக் கூடும். குரு மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது நன்மை தரும். உங்கள் ராசி நாதன் சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு நல்ல வளர்ச்சியையும் வெற்றியையும் தருவார். குரு பெயர்ச்சியால் நன்மைதான் நடக்கும். ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யலாம்.

இந்த மாதம் நீங்கள் காதலில் விழும் வாய்ப்பு உள்ளது. மேலும் உங்கள் காதல் விருப்பத்தை நீங்கள் விரும்புபவரிடம் கூற இது ஏற்ற மாதமாகும்.

மீனம்

மீனம்

சூரியன் சஞ்சாரம் அவ்வளவு சிறப்பாக இல்லை. செவ்வாய் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது நல்ல பலன்களை தரும். சனி பகவான் சஞ்சாரம் இந்த மாதத்தின் இறுதி பகுதியில் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பதிப்புகளை குறைக்க உதவுவார். குரு பெயர்ச்சியால் நன்மையே நடக்கும். குரு உங்கள் ஜென்ம ராசியை பார்வை இடுவதால் இந்த மாதம் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். நீங்கள் இதுவரை கடந்து வந்த சோதனை காலம் ஒரு முடிவுக்கு வர உள்ளது. உங்களின் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை கிரகங்கள் ஏற்படுத்துவார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+