அக்டோபர் மாத ராசி பலன்2021:துலாம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சோதனைகளும் சாதனைகளும் நிறைந்த மாதம்
சோதனைகள் வந்தாலும் அதை சவாலாக ஏற்றுக்கொண்டு சாதனைகளாக மாற்றுவதே சாமர்த்தியசாலிக்கு அழகு. துலாம், விருச்சிக ராசிகளில் பிறந்தவர்கள் அக்டோபர் மாதத்தில் நிறைய சவால்களை சந்திக்கப் போகிறீர்கள்.
சென்னை: அக்டோபர் மாதத்தில் துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்த மாதமாக இருக்கப்போகிறது. சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றி பெறப்போகிறீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி சாதிக்கப்போகிறீர்கள். இந்த மாதத்தில் கிடைக்கப் போகும் பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.
அக்டோபர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷப ராசியில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,செவ்வாய், துலாம் ராசியில் புதன், சுக்கிரன்,விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் சனி,குரு என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. அக்டோபர் 1ல் புதன் கன்னி ராசிக்கு மாறுகிறார். அக்டோபர் 2ஆம் தேதியன்று சுக்கிரன் விருச்சிக ராசிக்கு மாறுகிறார். சனிபகவானின் வக்ர சஞ்சாரம் முடிவுக்கு வருகிறது.
சூரியன் 17ஆம் தேதி துலாம் ராசியில் நீசமடைகிறார். மாத பிற்பகுதிகளில் குருபகவான் வக்ர கதியில் இருந்து நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். அக்டோபர் 21ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். மாத இறுதியில் புதன் துலாம் ராசியில் செவ்வாயுடன் இணைந்து பயணம் செய்யப்போகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் துலாம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

முன்னேற்றம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. அதிர்ஷ்டமும் நல் வாய்ப்புகளும் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்குச் செல்கிறார். கேது உடன் சுக்கிரன் கூட்டணி சேருகிறார். ராசியில் புதன், நான்காம் வீட்டில் குரு, சனி, எட்டாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் குருவும் சனியும் கூட்டணி சேர்ந்துள்ளதால் சுப காரியங்கள் நடைபெறுவதில் சிறு தடைகளும் தாமதங்களும் ஏற்படும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

வேலையில் கவனம்
அர்த்தாஷ்டம சனியால் உங்கள் திட்டங்கள் முழு வெற்றியடைவதில் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மாத முற்பகுதியில் வேலை செய்யும் இடத்தில் திடீர் பிரச்சினைகள் வரலாம். உயரதிகாரிகளிடம் திடீர் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். வேலையில் கவனமும் நிதானமும் தேவை. வேலையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும். வெளியூர், வெளிநாடு பயணம் செல்வதற்கு முயற்சி செய்யலாம். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நான்காம் வீட்டில் உள்ள சனியால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பெண்கள் கவனம்
திருமண சுப காரிய முயற்சிகளில் சில தடைகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே திடீர் சண்டை சச்சரவுகள், வீண் விவாதங்களினால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது விட்டுக்கொடுத்து செல்லவும். மருத்துவ செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. மாணவர்களுக்கு இந்த மாதம் சின்னச் சின்ன கவனக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பெற்றோர்கள் அக்கறை காட்டுவது நல்லது. பெண்கள், இல்லத்தரசிகளுக்கு வேலைப்பளு ஏற்படலாம். முக்கியமான முடிவுகளை எடுப்பது தொடர்பாக பெரியவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு அக்டோபர் மாதம் பெரிய அளவில் சந்தோஷங்கள் எதுவும் இல்லை. சங்கடங்கள் நீங்க வெள்ளிக்கிழமை பெருமாள் கோவில் சென்று தாயாரையும், பெருமாளையும் நெய் தீபம் ஏற்றி வணங்கலாம்.

திடீர் தடைகள்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் இணைந்திருக்கிறார். மாத பிற்பகுதியில் சூரியன் 12ஆம் வீட்டில் நீசபங்கமடைகிறார். ராசியில் சுக்கிரன் கேது, மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சனி, குரு, ஏழாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
லாப ஸ்தானத்தில் உள்ள கிரகங்களின் மீது குருவின் பார்வை கிடைப்பதால் வேலையில் முன்னேற்றமும், கேட்ட இடத்திற்கு மாற்றங்களும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ராசியில் கேது உடன் இணைந்திருப்பதால் சுப காரியங்கள் நடைபெறுவதில் திடீர் தடைகள் ஏற்படும்.

குடும்பத்தில் குதூகலம்
திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் சில கசப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் விசயங்கள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். இல்லத்தரசிகளின் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் வீட்டிற்கு வருவதால் சந்தோஷமும் குதூகலமும் உண்டாகும். திடீர் வருமானம் வரும். வங்கி கடனுக்கு முயற்சி செய்பவர்களுக்கு இந்த மாதம் கிடைக்கும்.

ஆரோக்கியத்தில் அக்கறை
சுபகாரியங்களில் பங்கேற்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பிள்ளைகளால் செலவு கிடைக்கும். மாத பிற்பகுதியில் வேலை செய்யும் இடத்தில் கவனமும் விழிப்புணர்வும் தேவை. அலுவலகத்தில் வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஜாமீன் கையெழுத்துப் போட்டு பணம் வாங்கி கொடுத்து விட்டு தவிக்க வேண்டாம். மொத்தத்தில் அக்டோபர் மாதம் சாதனைகளும் சோதனைகளும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications