அக்டோபர் மாத ராசி பலன் 2023.. வேலையில் புரமோசன்.. திடீர் ஜாக்பாட் யாருக்கு கிடைக்கும்?
சென்னை: அக்டோபர் மாதத்தில் சூரியன் கன்னி மற்றும் துலாம் ராசியில் பயணம் செய்வார். இந்த மாதத்தில் திடீர் யோகங்களும் பண வருமானமும் ராஜயோகமும் சிலருக்கு கைகூடி வரப்போகிறது. அக்டோபர் மாதத்தில் நவ கிரகங்களின் கூட்டணி, பார்வை சஞ்சாரத்தினால் மேஷம் ராசிக்காரர்களுக்கு வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்குமா? நிதி நிலைமை எப்படி இருக்கும்? பொருளாதார வளம் அதிகரிக்கும் வகையில் ஜாக்பாட் கிடைக்குமா? என்று பார்க்கலாம்.
கிரக நிலை: மேஷத்தில் குரு ராகு, சுக்கிரன் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். கன்னி ராசியில் சூரியன், புதன், செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்பம் ராசியில் சனி என இந்த மாதம் ஆரம்பத்தில் கிரக நிலைகள் இருந்தாலும் செவ்வாய் பெயர்ச்சி இன்னும் சில நாட்களில் நிகழ உள்ளது. ராகு கேது பெயர்ச்சியும் நிகழப்போகிறது. சூரியன் 18ஆம் தேதி ஐப்பசி மாதம் துலாம் ராசிக்கு பெயர்ச்சியடைகிறார். இந்த கிரக நிலைகள், கிரகங்களின் பார்வையால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: அக்டோபர் மாதத்தில் மேஷ ராசிக்கு தன வருமானம் அதிகமாகவே இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. குரு பகவான் உங்கள் ராசியில் இருப்பதால் பண வரவு அபரிமிதமாகவே இருக்கும். இந்த மாதம் ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளதால் மீன ராசிக்கு ராகு செல்லப்போவதால் குரு சண்டாள யோகம் மாறப்போகிறது. குரு பகவான் தனித்து தனது பலன்களை அள்ளித்தரப்போகிறார். வேலையில் சிக்கலை சந்தித்தவர்களுக்கு நன்மைகள் ஏற்படப்போகிறது. திருமண தடைகள் நீங்கும். திருமணம் முடிந்தும் இன்னும் நல்ல காரியம் இல்லையா என்று குழந்தையை பற்றி கேட்டவர்களுக்கு சுப செய்திகள் தேடி வரும். வீடுகளில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சுக்கிரன்: சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் காதல் திருமணம் கைகூடி வரும். குரு பகவானின் பார்வை சுக்கிரன் மீது விழுகிறது அற்புதமான அம்சம். சுவையான உணவுகளை தேடி தேடி சாப்பிடுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதன் பகவான் ஆறாம் வீட்டில் உச்சம் பெற்று பயணம் செய்வதால் உங்களுக்கு விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது.
செவ்வாய் பகவான்: ராசி நாதன் செவ்வாய் ஏழாம் வீட்டில் கேது உடன் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடப்போகிறார். எதையும் பெரிதாக எதிர்பார்க்காதீர்கள். நிறைய நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களின் ராசி அதிபதி செவ்வாய் கேது, சூரியன், புதனோடு இணைந்து மாத பிற்பகுதியில் பயணம் செய்வார். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள் ஆலய தரிசனங்கள் செல்வதால் உற்சாமான மனநிலைக்கு மாறுவீர்கள். மன நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். உடலிலும் மனதிலும் சக்தி அதிகரிக்கும். மன குழப்பம் நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். எந்த சூழ்நிலையிலும் யாரை பற்றியும் குறை கூறி பேசாதீர்கள்.

கேது பகவான்: கேது உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டிற்கு செல்லப்போவதால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் சிக்கல்கள் நீங்கும். பெண்களுக்கு நகை சேர்க்கை ஏற்படும். மகிழ்ச்சியான மன நிலையில் இருப்பீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகளால் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. வெளிநாடு வேலை வாய்ப்புகள் கைகூடி வரப்போகிறது. இருப்பதை விட்டு விட்டு பறக்க ஆசைப்பட வேண்டாம். பொறுமையும் நிதானமும் தேவைப்படும்.
புதன் உச்சம்: ஆறாம் வீட்டில் புதன் உச்சம் பெற்று அமர்ந்து புதனோடு இணைந்து புதாத்திய யோகத்தை தரப்போகிறார். உங்களின் புத்தி தெளிவடையும். மாணவர்களுக்கு அற்புதமான மாதம். உயர்கல்வி தேர்வுகளை அற்புதமாக எழுதி முடிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் லாபங்கள் செழிக்கும். நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வாகன பயணங்களில் கவனம் தேவைப்படும். மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களையும் அதிர்ஷ்டகரமான மாற்றங்களைத் தரப்போகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications