Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்டோபர் மாத ராசி பலன்கள் 2019: சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான மாதம்

அக்டோபர் மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பாதி நாட்களும், துலாம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். கன்னி ராசியில் உள்ள சுக்கிரன் மாத முற்பகுதியிலேயே தனது ராசியான துலாமில் ஆட்சி பெற்று அமர்வதால் ச

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    26-09-2019 இன்றைய ராசி பலன் | Astrology | Rasipalan | Oneindia Tamil

    சென்னை: அக்டோபர் மாதம் அற்புதமான மாதம் கன்னி மாதம் பாதி நாட்களும், துலாம் மாதம் பாதி நாட்களும் இணைந்தது. புரட்டாசி மாதம் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் ஐப்பசியில் துலாம் ராசிக்கு மாறுகிறார். மாத துவக்கத்தில் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சுக்கிரன், பிற்பகுதியில் துலாம் ராசிக்கு நகர்கின்றனர். துலாம் ராசியில் சஞ்சரிக்கும் புதன் மாத இறுதியில் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகின்றார். கூடவே சுக்கிரனும் விருச்சிகத்தில் உள்ள குரு உடன் இணைகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள் எப்படி என்று பார்க்கலாம்.

    அக்டோபர் மாதத்தில் 18ஆம் தேதிக்கு மேல் சூரியன் துலாம் ராசியில் நீசம் பெறுகிறார். ஆனால் சூரியன் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் மாத இறுதி வரை இணைவதால் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். சூரியன் தவிர மிதுனம் ராசியில் ராகு, தனுசு ராசியில் கேது, சனி, விருச்சிகத்தில் குரு என ஆண்டு கோள்கள் சஞ்சரிக்கின்றன.

    மாத கோள்களின் இடப்பெயர்ச்சியைப் பார்த்தால் அக்டோபர் மாத முற்பகுதியில் கன்னி ராசியில் இருந்த கிரகங்கள் மாத பிற்பகுதியில் துலாம் ராசியில் இணைகின்றன. துலாமில் இருந்து புதன் விருச்சிகத்திற்கு நகர சுக்கிரன் 28ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார் இணைகின்றனர். புதன் சுக்கிரன் குருவோடு கூட்டணி சேர்ந்து ராசிகளை பார்வையிடுவதால் அதிக நன்மைகள் நடக்கும். அக்டோபர் மாதம் வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டோம் என்று பாடப்போகிறீர்கள்.

     கொண்டாட்டமான மாதம்

    கொண்டாட்டமான மாதம்

    சிம்ம ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரப்போகிறது. சூரியன் 15 நாட்கள் இரண்டாவது வீட்டிலும் பிற்பகுதி 15 நாட்கள் மூன்றாவது வீட்டிற்கு நகர்கிறார். தைரிய ஸ்தானத்தில் புதன் அமர்ந்திருக்கிறார். நான்காம் வீட்டில் இருக்க ஐந்தாம் வீட்டில் சனி கேது சஞ்சரிக்கின்றனர். பண்டிகைகள் நிறைந்த மாதம் அக்டோபர் உங்களுக்கு கொண்டாட்டமாக இருக்கப் போகிறது. பணவரவு அதிகம் இருக்கும். சூரியன் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருக்கிறார். அரசு துறை வேலையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகமாகும்.

     நாக்கில் நெருப்பு கிரகங்கள்

    நாக்கில் நெருப்பு கிரகங்கள்

    சூரியனுடன் சுக்கிரன் செவ்வாய் இணைகின்றனர். கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்க்கவும். பாக பிரிவினை தொடர்பான பேச்சுக்கள் சுபமாக முடியும். சுக்கிரன் சூரியன் ஒன்றாக இருப்பதால் வேலை தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் மனைவி உறவில் மூன்றாம் நபரை தலையிட விட வேண்டாம். மவுனமே ரொம்ப நல்லது.

     முயற்சிகளில் வெற்றி

    முயற்சிகளில் வெற்றி

    வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் மாத முழுவதும் இருப்பதால் குடும்பத்தில் சகோதர, சகோதரிக்காக நீங்க செய்யும் முயற்சிகள் வெற்றியில் முடியும்.
    ராசிக்கு மூன்றாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சிபெற்று அமர்வதால் கலைத்துறையில் இருப்பவர்கள் பிரபலமடைவீர்கள். கிரகங்கள் வலுவாக இருந்தால் செயல்படுத்தும். தூண்டும். நான்காம் வீட்டில் உள்ள குரு உங்க தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் நன்மைகள் நடக்கும். தைரியமாக முடிவு பண்ணுங்க.

     தங்கம் வாங்கலாம்

    தங்கம் வாங்கலாம்

    பெண்களுக்கு வருமானம் கிடைக்கும். தங்கம் வெள்ளி நகைகள் வாங்க நல்ல மாதம். புதிய ஆடைகள் வாங்குவீர்கள். திருமண பேச்சுவார்த்களை சிலர் தொடங்கலாம். வரன் பார்க்கத் தொடங்குக்கள். சின்னச் சின்ன தடைகள் ஏற்படலாம். குழந்தை பாக்கியத்திற்கு சில தடைகள் தாமதங்கள் ஏற்படும். இறுதியில் வெற்றியில் முடியும்.

     அக்டோபர் ஜம் ஜம்

    அக்டோபர் ஜம் ஜம்

    அரசு வேலை தேர்வு எழுத இது சிறப்பான மாதம். ஏழுகோள்கள் சாதகமான நகர்வை தருகிறது. ராகு லாப வீட்டில் இருந்தாலும் அமைதியாக இருக்கிறது.
    சூரியன் மூன்றாவது வீட்டிற்கு போகும் காலத்தில் அப்பாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. மனைவியின் உடல் நலத்திலும் கவனம் செலுத்துங்கள். மிகச்சிறந்த மாதம். உசுப்பேத்துறவன் கிட்ட உம்முன்னும் கடுப்பேத்துறவன் கிட்ட கம்முன்னும் இருங்க. அக்டோபர் மாசத்தை ஜம்முன்னு கடந்திடலாம்.

     பணவரவு

    பணவரவு

    அக்டோபர் மாத துவக்கத்தில் கன்னி ராசிக்குள் சூரியன், சுக்கிரன் செவ்வாய் இருக்கின்றனர். இரண்டாம் வீட்டில் ராசி அதிபதி புதன் இருக்கின்றனர். சூரியன் மாத பிற்பகுதியில் இரண்டாம் வீட்டிற்கு போகிறார். இந்த மாதம் பணவரவு அதிகரிக்கும். பெற்றோர்கள் மூத்தவர்களின் ஆசி கிடைக்கும். கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க மகிழ்ச்சி பிறக்கும்.

     முயற்சிக்கு வெற்றி

    முயற்சிக்கு வெற்றி

    ராசி நாதன் புதன் இரண்டாம் வீட்டில் இருப்பதால் இருக்கிற வேலையை பத்திரமாக பார்த்துக்கங்க. சுக்கிரன் நான்காம் தேதி இடப்பெயர்ச்சி அடைந்து துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். கூடவே புதனுடம் இருப்பதால் வேகத்தை அதிகரிக்கும். குரு மூன்றாவது வீட்டில் இருப்பதால் அதிக பலன் கொடுக்காது. நம்முடைய முயற்சியை நாம சரியாக செய்யணும். உங்க தசாபுத்தி எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

     புதன் சுக்கிரன் கூட்டணி

    புதன் சுக்கிரன் கூட்டணி

    வாக்கு ஸ்தானத்தில் புதன் சுக்கிரன் இணைவதால் படிப்பில் நல்ல நிலையில் இருக்கும் புத்தியும் அறிவும் நன்றாக வேலை செய்யும். நான்காம் வீட்டில் சனி கேது சில பிரச்சினைகளை கொடுத்தாலும் படிப்பில் பிரச்சினை வராது. குரு புதனின் நட்சத்திரமான கேட்டையில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு சில நன்மைகளை தருவார். உங்க புத்தியை தூண்டி லட்சிய வெறியை ஏற்படுத்துவார். மாணவர்கள் கல்வி நலம் சிறப்பாக இருக்கும்.

     உடல் நலத்தில் அக்கறை

    உடல் நலத்தில் அக்கறை

    கன்னி ராசிக்கு இருந்த சோர்வு நீங்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். பிள்ளைகள் விசயத்தில் கவனமாக இருங்க. வியாபாரத்தில் வளர்ச்சி வருமானமும் கூடும். பெண்களுக்கு தன லாபம் கிடைக்கும். பிறந்த வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். செவ்வாய் உங்க ராசியில் இருப்பதால் உங்கள் உடல் நலத்தில் அக்கறை தேவை சிலருக்கு சிறிய கொப்புளங்கள் வரும். சகோதரர் உடல் நலத்திலும் அக்கறை தேவை. சிறுதூர பயணங்களால் நன்மை ஏற்படும். அக்டோபர் மாதம் வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டோம் என்று பாடப்போகிறீர்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+