அக்டோபர் மாத ராசி பலன்கள் 2019: துலாம், விருச்சிகம் ராசிக்கு ராஜயோக காலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்டோபர் மாதம் அற்புதமான மாதம் கன்னி மாதம் பாதி நாட்களும், துலாம் மாதம் பாதி நாட்களும் இணைந்தது. புரட்டாசி மாதம் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் ஐப்பசியில் துலாம் ராசிக்கு மாறுகிறார். மாத துவக்கத்தில் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சுக்கிரன், பிற்பகுதியில் துலாம் ராசிக்கு நகர்கின்றனர். துலாம் ராசியில் சஞ்சரிக்கும் புதன் மாத இறுதியில் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகின்றார். கூடவே சுக்கிரனும் விருச்சிகத்தில் உள்ள குரு உடன் இணைகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் துலாம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள் எப்படி என்று பார்க்கலாம்.

அக்டோபர் மாதத்தில் 18ஆம் தேதிக்கு மேல் சூரியன் துலாம் ராசியில் நீசம் பெறுகிறார். ஆனால் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் மாத இறுதி வரை சூரியன் இணைவதால் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். சூரியன் தவிர மிதுனம் ராசியில் ராகு, தனுசு ராசியில் கேது, சனி, விருச்சிகத்தில் குரு என ஆண்டு கோள்கள் இந்த மாதம் சஞ்சரிக்கின்றன.

மாத கோள்களின் இடப்பெயர்ச்சியைப் பார்த்தால் அக்டோபர் மாத முற்பகுதியில் கன்னி ராசியில் இருந்த கிரகங்கள் மாத பிற்பகுதியில் துலாம் ராசியில் இணைகின்றன. துலாமில் இருந்து புதன் விருச்சிகத்திற்கு நகர சுக்கிரன் 28ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார். புதன் சுக்கிரன் குருவோடு கூட்டணி சேர்ந்து ராசிகளை பார்வையிடுவதால் அதிக நன்மைகள் நடக்கும். அக்டோபர் மாதம் அற்புதமான சந்தோஷங்கள் நிறைந்த மாதம் என்று துலாம், விருச்சிகம் ராசிக்காரர்கள் பாடப்போகிறீர்கள்.

யோகமான மாதம்

யோகமான மாதம்

மிக அற்புதமான கால கட்டம் மாபெரும் அதிர்ஷ்டங்கள் தேடி வரும் மாதம் இது. குருவினால் தன வரவு அதிகரிக்கும். வெற்றியை தேடித்தரும் மாதம் இதுவாகும். சூரியன் உங்க ராசியில் நீசபங்கம் கிடைக்கப் போகிறது. சுக்கிரனால் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு வரும். புதன் ராசியில் அமர்ந்திருக்கிறார். உங்க ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று புதனோடு சேருவது யோகத்தை கொடுக்கும். காரியங்களில் வெற்றி கிடைக்கும். சனி பகவான் உங்க யோகாதிபதி. புதன் உங்க யோகாதிபதி. ராசிக்கு இரண்டில் குரு, மூன்றில் சனி கேது ஒன்பதாம் வீட்டில் ராகு என ஆண்டு கோள்கள் சஞ்சரிப்பது சாதகம்.

விரையத்தில் கிரகங்கள்

விரையத்தில் கிரகங்கள்

விரைய ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன். ராசியில் புதன் நான்காம் தேதி ராசி நாதன் சுக்கிரன் ஆட்சி பெற்று அமரப்போகிறார். உடல்நல பாதிப்பு ஏற்படும். சனி மூன்றாம் வீட்டில் கேது உடன் இருக்கிறார். வாக்கு ஸ்தானத்தில் குரு இருக்கிறார். வருமானம் அதிகம் வந்தாலும் அதிகம் கடனை கொடுப்பார். செவ்வாய் சனி பார்வை இருப்பதால் வேலை மாற நினைக்க வேண்டாம். உங்க ராசிக்கு 12ஆம் வீட்டில் பாதகாதிபதி சூரியன் உள்ளிட்ட கிரகங்கள் இருப்பதால் உடல் நலத்தில் கவனம் தேவை.

பயணங்களில் வெற்றி

பயணங்களில் வெற்றி

சூரியன் 18ஆம் தேதி துலாம் ராசியில் நீசம் பெற்று அமர்கிறார் என்றாலும் கூடவே ஆட்சி பெற்ற சுக்கிரன் இருப்பது சிறப்பம்சம் . உங்களுக்கு பொற்காலம். வெளிநாடு வாய்ப்பு கூடி வரும். நன்றாக பரிசோதித்து ஏற்றுக்கொள்வது நல்லது. பெண்களுக்கு நல்ல மாதம். பயணங்கள் வெற்றியை தேடி தரும்.
ராசியில் புதன் சுக்கிரன் இணைவதால் படிப்பில் சிறப்பாக இருக்கும்.

மின் சாதனங்களில் கவனம்

மின் சாதனங்களில் கவனம்

விரைய ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்து உள்ளதால் இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. காரணம் இந்த நேரத்தில் உடல் நல பாதிப்புகளை தருவார். நெருப்பு விசயங்கள், மின்சாதனங்களில் கவனம் தேவை. உறவினர்களிடம் சரியான பேச்சுவார்த்தை அவசியம். ஆட்சியில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வது காதல் மலரும் காலம், ஆனால் சிலருக்கு தடை ஏற்படும் காரணம் மூன்றாம் வீட்டில் சனி கேது பிரச்சினையை தருவார்.

அவசர முடிவுகள் வேண்டாம்

அவசர முடிவுகள் வேண்டாம்

முக்கியமான முடிவு செய்யும் போது கவனம் தேவை. திருமணத்திற்கு பார்க்கும் போது ஒருமுறைக்கு இருமுறை எதையும் யோசித்து முடிவு பண்ணுங்க. அவசர முடிவுகள் எடுத்து விட்டு அவதிப்படாதீர்கள். வாக்கு சாதுர்யம் அதிகரிக்கும் கணவன் மனைவி இடையை சின்னச் சின்ன சண்டைகள் ஏற்பட்டாலும் பிரச்சினை தீரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விபரீத ராஜயோகம்

விபரீத ராஜயோகம்

குரு உங்க ராசியில் இருக்கிறார். குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. செவ்வாய் சூரியன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் புதிய வேலை கிடைக்கும். 12ஆம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து இருப்பதால் விபரீத ராஜயோக அமைப்பை தருகிறார். உயர்கல்விக்காக வெளிநாடு செல்வீர்கள். காரணம் புதன் 12ஆம் வீட்டில் இருக்கிறார். சுப விரையங்கள் அதிகம் நடக்கும். காரணம் விரைய ஸ்தான அதிபதி விரைய ஸ்தானத்தில் இருக்கிறார்.

தடைகள் பிரச்சினைகள்

தடைகள் பிரச்சினைகள்

சனி மற்றும் கேது இரண்டாம் வீட்டில் இருப்பதால் தேவையில்லாமல் பேசாதீங்க. குடும்பத்தில் பிரிவினை வரும் காரணம் குடும்ப ஸ்தானத்தில் சனி. பணப்பிரச்சினை வரும். தடைகள் தடங்கல் வந்து கொண்டே இருக்கும். உடம்பில் பிரச்சினைகள் வரும். வேலையில் சில மாற்றங்களும் முன்னேற்றங்களும் நடக்கும். வீடு வாகன வசதிகள் நடைபெறும்.

பெண்கள் ஜாக்கிரதை

பெண்கள் ஜாக்கிரதை

லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய் சஞ்சரிக்கின்றனர். விரைய ஸ்தானத்தில் புதன் சஞ்சரிக்கிறார். ஜென்மத்தில் குரு தன ஸ்தானத்தில் சனி கேது எட்டாம் வீட்டில் ராகு கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. பணவரவு அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தாலும் முக்கிய முடிவுகள் வேண்டாம். பெண்கள் பிறரிடம் பழகும் போது ஜாக்கிரதையாக இருங்க. காரணம் செவ்வாய் நீசம் பெற்ற சுக்கிரன் உடன் சேர்க்கை பெற்றிருப்பது பாதகத்தை ஏற்படுத்தும்.

குருவினால் நன்மை

குருவினால் நன்மை

திருமண முயற்சிகள் தடைகளாகவே இருக்கும். பொறுமையாக இருந்தால் நன்மையாகவே இருக்கும். ஜென்ம குரு குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை சரி செய்வார். ஏழாம் வீட்டை குரு பார்ப்பதால் வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். நல்ல தகவல்கள் வரப்போகிறது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். விருச்சிகத்திற்கு நல்ல காலம் நெருங்கி வருகிறது. காரணம் வாக்கிய பஞ்சாங்கப்படி குரு இந்த மாத இறுதியில் பெயர்ச்சி அடைகிறார். இந்த மாத தொடக்கத்தில் கஷ்டங்கள் இருந்தாலும் இறுதியில் நன்மைகள் அதிகம் நடைபெறும். சந்தோஷமாக இருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+