அக்டோபர் மாத ராசிபலன்கள் 2019: மேஷம் ராசிக்காரர்களுக்கு லாபமான மாதம்

அக்டோபர் மாதம் பிறக்கப்போகிறது. இந்த அக்டோபர் மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பாதி நாட்களும், துலாம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்டோபர் மாதம் அற்புதமான மாதம் கன்னி மாதம் பாதி நாட்களும், துலாம் மாதம் பாதிநாட்களும் இணைந்தது. புரட்டாசி மாதம் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் ஐப்பசியில் துலாம் ராசிக்கு மாறுகிறார். மாத துவக்கத்தில் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சுக்கிரன், செவ்வாய் மாத பிற்பகுதியில் துலாம் ராசிக்கு நகர்கின்றனர். மாத இறுதியில் விருச்சிக ராசிக்கு புதனும் சுக்கிரனும் பெயர்ச்சியடைகின்றனர். இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் மேஷம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள் எப்படி என்று பார்க்கலாம்.

இந்த மாதம் நவகிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராகு, ஆறாம் வீட்டில் சூரியன், செவ்வாய் சுக்கிரன், ஏழாம் வீட்டில் புதன் எட்டில் குரு, ஒன்பதில் சனி கேது என அமைந்து உள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி முதல் நீசம் பெற்றிருந்த சுக்கிரன் உங்க ராசிக்கு ஆறாம் விட்டில் இருந்து ஏழாம் வீட்டில் துலாம் ராசியில் ஆட்சி பெற்று புதனோடு சேருகின்றார்.. 18ஆம் தேதிக்கு மேல் சூரியன் துலாம் ராசியில் நீசம் பெறுகிறார். ஆனால் சூரியன் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் மாத இறுதி வரை இணைவதால் நீசபங்க ராஜயோகம் பெற்று உங்க ராசியை புதன் சூரியன், சுக்கிரன் பார்வையிடுவது யோகம்.

அக்டோபர் மாத முற்பகுதியில் ஆறாம் வீட்டில் இருந்த கிரகங்கள் மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டில் இணைவது நன்மை. அக்டோபர் 23ஆம் தேதி துலாமில் இருந்து புதன் எட்டாம் வீடான விருச்சிகத்திற்கு நகர்கிறார். மறைந்த புதன் நிறைந்த கல்வி செல்வம். சுக்கிரன் 28ஆம் தேதி ஏழாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டில் மறைகிறார். எட்டாம் வீட்டில் இரண்டு கிரகங்கள் மறைந்தாலும் குருவோடு இணைவதால் நன்மைதான். காரணம் இரண்டாம் வீட்டை புதன் குரு சுக்கிரன் பார்வையிடுவதால் தன லாபத்தை தருகின்றனர்.

கணவன் மனைவி உறவு

கணவன் மனைவி உறவு

சூரியன், செவ்வாய் கூட்டணி ஆறாம் வீட்டில் பாதி நாட்கள் இருப்பதால் தொழில் வியாபாரத்தில் நன்மைகள் நடக்கும். ஆறாம் வீட்டில் உள்ள கிரகங்கள் துணிச்சலையும் அபிவிருத்தியையும் தருவார்கள். உப ஜெய ஸ்தானத்தில் அமரும் கிரகங்கள் உதவி செய்யும். கடன்கள் அடையும் எதிர்ப்புகள் தீர இது நன்மை தரும் கூட்டணி. மாத முற்பகுதியில் கணவன் மனைவி உறவில் வாக்குவாதம் சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு காதல் முறிவுகள் கூட ஏற்படும். நான்காம் தேதிக்கு மேல் திருப்புமுனை ஏற்படும்.

நோய்கள் குணமாகும்

நோய்கள் குணமாகும்

மாத முற்பகுதியில் ஆறாவது வீட்டில் உள்ள கோள்களால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவரை சந்திக்க சரியான நேரம். வயிறு பிரச்சினை தீர மருத்துவரை சந்தியுங்கள். 8ல் குரு மருத்துவரை நாட வைப்பார். நோய்களை குணப்படுத்துவார் ஏழில் புதன் ஆறில் சுக்கிரன் பரிவர்த்தனை. குழப்பம் உருவாகி தெளிவு ஏற்படும். ஆறு எட்டில் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் தரும் கிரகங்கள் மறைந்திருக்கின்றன.

தனலாபம் கிடைக்கும்

தனலாபம் கிடைக்கும்

அக்டோபர் 4 சுக்கிரன் இடம் மாறி மாளவியா யோகத்தை தருகிறார். 4ஆம் தேதிக்கு பிறகு நிறைய நல்ல விசயங்கள் நடக்கும். காரணம் உங்க ராசியை புதன், சுக்கிரன் பார்ப்பதால் வெற்றிகளும் நன்மைகளும் கிடைக்கும், தனலாபத்தை தரும். வேலையில் இருப்பவர்களுக்கு உற்சாகமும் வெற்றியும் கிடைக்கும். காரணம் மாத பிற்பகுதியில் சுக்கிரன், புதன் எட்டாம் வீட்டிற்குப் போகின்றன. இதனால் இடைஞ்சல்கள் அதிகமாகும். திருமணம், காதல் வாழ்க்கையில் கவனம் தேவை. உடல் நலத்திலும் கவனம் தேவை. பொறுமை தேவை. மாத இறுதியில் புது வேலைகள் எதையும் தேர்வு செய்ய வேண்டாம். இருக்கிற வேலையை விட வேண்டாம். இந்த மாதம் பொறுமையாக இருந்தால் நல்லது நடக்கும். கிரகங்களின் மாற்றம் வரும் வரை கவனமாக இருக்கவும்.

தைரியம் தன்னம்பிக்கை

தைரியம் தன்னம்பிக்கை

அக்டோபர் மாதம் நிறைய சுப செலவுகள் ஏற்படும். செவ்வாய் ஆறாம் வீட்டில் இருப்பதால் செலவுகள் கூடும். சனி வக்ர நிவர்த்தியடைந்து கேதுஉடன் இணைவது சிறப்பு. உங்க ராசிக்கு 12ஆம் வீட்டை சனியும் செவ்வாயும் பார்வையிடுவதால் சுப விரயங்கள் ஏற்படும். சனி செவ்வாய் பார்வை உடல் நலத்தில் எச்சரிக்கை தேவை. செவ்வாய் எட்டாம் பார்வையாக உங்க ராசியை பார்ப்பதால் பலம் கிடைக்கும் தைரியத்தை தரும். மூன்றாம் வீட்டில் உள்ள ராகு தனது நட்சத்திரமான திருவாதிரையில் பயணிக்கிறார். துணிச்சல், தன்னம்பிக்கையை தரும்.

பலன்தரும் பரிகாரங்கள்

பலன்தரும் பரிகாரங்கள்

சுக்கிரன் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு இடம் மாறுவதால் தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. நன்மையும் தீமையும் கலந்த பலன்களை தரும். மாத இறுதியில் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி உறவில் உற்சாகமாக இருப்பீர்கள். வீட்டில் அன்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு இந்த மாதம் ராசியை பார்க்கிறார். படிப்பிற்கு சரியான நேரம் நினைவாற்றல் அதிகரிக்கும். எட்டாம் வீட்டில் மறைந்து இரண்டாம் வீட்டினை பார்ப்பதால் கல்வியில் உயர்வு ஏற்படும். தட்சிணாமூர்த்தியை வழிப நன்மைகள் ஏற்படும்.

எச்சரிக்கையான நாட்கள்

எச்சரிக்கையான நாட்கள்

அக்டோபர் 2 முதல் 4 வரை சந்திராஷ்டமம் வரை உள்ளது. அக்டோபர் 29 மாலை முதல் 31 வரை சந்திராஷ்டம நாட்களாக இருப்பதால் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் வேண்டாம் சொத்துக்கள் வாங்க வேண்டாம். கவனமாக இருக்கவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+