அக்டோபர் மாத ராசிபலன்கள் 2019: மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு உற்சாகம்
அக்டோபர் மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பாதி நாட்களும், துலாம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார்.
Recommended Video
சென்னை: அக்டோபர் மாதம் அற்புதமான மாதம் கன்னி மாதம் பாதி நாட்களும், துலாம் மாதம் பாதி நாட்களும் இணைந்தது. புரட்டாசி மாதம் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் ஐப்பசியில் துலாம் ராசிக்கு மாறுகிறார். மாத துவக்கத்தில் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சுக்கிரன், பிற்பகுதியில் துலாம் ராசிக்கு நகர்கின்றனர். துலாம் ராசியில் சஞ்சரிக்கும் புதன் மாத இறுதியில் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகின்றார். கூடவே சுக்கிரனும் விருச்சிகத்தில் உள்ள குரு உடன் இணைகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள் எப்படி என்று பார்க்கலாம்.
மிதுனம் ராசியில் ராகு, தனுசு ராசியில் கேது, சனி, விருச்சிகத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. 18ஆம் தேதிக்கு மேல் சூரியன் துலாம் ராசியில் நீசம் பெறுகிறார். ஆனால் சூரியன் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் மாத இறுதி வரை இணைவதால் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார்.
மாத கோள்களின் இடப்பெயர்ச்சியைப் பார்த்தால் கன்னி ராசியில் உள்ள சூரியன் 18ஆம் தேதிக்கு மேல் துலாம் ராசியில் நீசம் பெறுகிறார். ஆனால் சூரியன் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் மாத இறுதி வரை இணைவதால் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். அக்டோபர் மாத முற்பகுதியில் கன்னி ராசியில் இருந்த கிரகங்கள் மாத பிற்பகுதியில் துலாம் ராசியில் இணைகின்றன. துலாமில் இருந்து புதன் விருச்சிகத்திற்கு நகர சுக்கிரன் 28ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார் இணைகின்றனர். புதன் சுக்கிரன் குருவோடு கூட்டணி சேர்ந்து ராசிகளை பார்வையிடுவதால் அதிக நன்மைகள் நடக்கும்.

சொத்துக்கள் வாங்கலாம்
உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் கிரகங்கள் கூட்டணியால் சுகமான பலன்கள் கிடைக்கும். காரணம் சுக ஸ்தானத்தில் சேர்ந்துள்ள சூரியன் செவ்வாய் சுக்கிரன் கூட்டணியால் வீடு சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உங்க ராசிநாதன் புதன் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். புதன் சுக்கிரன் பரிவர்த்தனை யோகம் பெற்றுள்ளது.

ஆசைகள் நிறைவேறும்
அக்டோபர் நான்காம் தேதி சுக்கிரன் உடன் இணைகிறார். இதனால் நிறைய யோகங்கள் வரும் ஆசைகள் நிறைவேறும். சனி பார்வையால் தடங்கள் ஏற்பட்டாலும். சுக்கிரன் ஆட்சி பெற்று அமரும் போது புதன் இணைகிறார். இது ஆசையை நிறைவேற்றித் தருவார். இந்த மாதம் புதன் சுக்கிரன் கூட்டணி நினைத்ததை நிறைவேற்றுவார். புதன் வலிமையாக இருந்து சுக்கிரன் உடன் சேருவது சுகமான கல்வியை படிக்க உதவும். ஜாலியான கலைத்திறனுடன் கூடிய படிப்பை மாணவர்கள் தேர்வு செய்யலாம். வெளிநாடு செல்லும் யோகத்தையும் புதன் தருவார்.

முதலீடு வேண்டாம்
செவ்வாய் சூரியன் உடன் இணைந்து நான்கில் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குரு உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் இருக்கிறார். தடைகளை ஏற்படுத்துவார் என்றாலும் சுக்கிரன் வலுவாக இருப்பதால் பிரச்சினை இல்லை. குரு ஆறாவது வீட்டில் இருப்பதால் இந்தமாதம் பெரிதாக எதுவும் ஆசைப்பட வேண்டாம். மாத இறுதியில் ஆறாவது வீட்டில் குரு உடன் புதன் சுக்கிரன் இணைவதால் முதலீடு செய்யும் முன்பாக யோசனை அவசியம். அப்பாவிற்கு உதவி செய்யலாம். வேலையில் புதிய மாற்றங்கள் வேண்டாம். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.

பயணங்களில் கவனம்
சனி பார்வை உங்க ராசி மீது விழுவது பாதிப்பை தரும். சனியும் கேதுவும் இணைந்து உங்களை பார்வையிடுவதால் உங்க வார்த்தையில் கவனம் தேவை. பயணங்களில் கவனம் தேவை. விழிப்புணர்வோடு இருந்தால் பிரச்சினை வராது. செவ்வாய்க்கு நான்காம் பார்வை சனி மீதும் சனிக்கு பத்தாவது பார்வை செவ்வாய் மீதும் விழுகிறது. செவ்வாய் கன்னி ராசியில் இருந்து நான்காம் வீட்டில் உள்ள சனியை பார்வையிடுகிறார். இது சின்னச் சின்ன தடைகளை ஏற்படுத்துவார்.

கல்வியில் சிறப்பு
முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் உள்ள கிரகங்களால் நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். கடக ராசிக்காரர்களுக்கு நான்கில் புதன் ஐந்தில் குரு இருப்பது சிறப்பு. குரு பார்வை கடகத்தின் மீது விழுவது கூடுதல் சிறப்பு. கல்வி நிலை சிறப்படையும் காரணம் புதன் நான்கில் அமர்ந்துள்ளார். புதன் பார்வை பத்தாம் வீட்டின் மீது விழுவதால் பயணங்கள் சிறப்பாக இருக்கும். பயணங்களில் வெற்றி கிடைக்கும்.

வெளிநாடு யோகம்
சூரியன் மூன்றாம் வீட்டில் இருப்பதால் அமைதியாக இருந்து முயற்சி பண்ணுங்க நல்லது நடக்கும். நீங்கள் செய்யும் செயல்கள் சுபமாக முடியும். கல்வி வேலை வாய்ப்புகள் சுபமாக இருக்கும். செவ்வாயின் எட்டாம் பார்வை உங்க பத்தாம் வீட்டின் மீது விழுவதால் வேலை தொழில் உற்சாகத்தை தரும். வெளிநாடு செல்லும் யோகம் வெற்றியைத்தரும்.

சுபமான மாதம்
சுக்கிரன் ஆட்சி பெற்று மாளவியா யோகத்தை தரப்போகிறார். இந்த மாதம் நிறைய நல்லது நடக்கும். சனி ஆறில் இருப்பதால் பிரச்சினைகள் சங்கடங்கள் எதுவும் இல்லை. சின்னச் சின்ன வலிகள் வரும். ஆறாம் வீட்டில் சனி கேது சஞ்சாரம் நோய்களை வெளிப்படுத்துவார். திருமணம் முயற்சிகள் சுபத்தை தரும். வேலையில் மாற்றம் செய்ய முயற்சி செய்யலாம். கடகத்திற்க உற்சாகமான மாதம் இது ஜாலியாக இருங்க.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications