அட்சய திருதியை நாளில் வாலாஜபேட்டை லட்சுமி குபேரருக்கு ஒரு லட்சம் காசுகள் அபிஷேகம்
அட்சய திருதியை நாளை முன்னிட்டு லக்ஷ்மி குபேரருக்கு ஒரு லட்சம் காசுகள், வில்வ இலைகள், தாமரை மலர்கள்,தாழம்பூ குங்குமம், மஞ்சள் கிழங்கு, தாமரை மணிகள் கொண்டு சிறப்பு வழிபாடுகள் அரசு வழிகாட்டுதல் படி நடைபெற்றது.
சென்னை: அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு வாலாஜா சாலையில் கிழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி குபேரன் கோவிலில் ஒரு லட்சம் காசுகள், வில்வ இலைகள், தாமரை மலர்கள்,தாழம்பூ குங்குமம், மஞ்சள் கிழங்கு, தாமரை மணிகள் கொண்டு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றன.
அழகாபுரி, குபேரபுரி, ஐஸ்வர்யபுரி, ஆரோக்கியபுரி சம்பத்துபுரி, ஸ்வர்ணபுரி, சௌபாக்யபுரி என்று பல்வேறு வகையான பெயர்களில் பக்தர்கள் அழைத்து மகிழும் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி குபேர கோவிலில் வெள்ளிக்கிழமை அட்சய திருதியை முன்னிட்டு சாம்ராஜ்ய லட்சுமி ஹோமம்,ஸ்வர்ண ஆகர்ஷ்ண பைரவர் ஹோமம், ஸ்ரீ மஹா லக்ஷ்மி ஹோமம் மற்றும் லக்ஷம் காசுகள் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சோளிங்கர் வாலாஜா சாலையில் கிழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி குபேரன் கோவிலில், அட்சய திருதியை தினத்தை யொட்டி, வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு மகா சங்கல்பம், லக்ஷ்மி குபேரர் குங்கும அர்ச்சனை ஸ்வர்ண பைரவர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இன்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, 7.30 மணிக்கு புண்ணியாவாகனம். மேலும் நோய்கள் நீங்கவும், ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி அருள் பெறவும் , சுப நிகழ்ச்சிகள் பெறவும் மஹாலக்ஷ்மி, ஸ்வர்ண பைரவர் சாம்ராஜ்ய லக்ஷ்மி மூலமந்திர ஹோமம் நடைபெற்று 10 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 10.30 மணிக்கு லக்ஷ்மி குபேரருக்கு மஹா திருமஞ்சனம் சிறப்பு அலங்கார மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து லக்ஷ்மி குபேரருக்கு ஒரு லட்சம் காசுகள், வில்வ இலைகள், தாமரை மலர்கள்,தாழம்பூ குங்குமம், மஞ்சள் கிழங்கு, தாமரை மணிகள் கொண்டு சிறப்பு வழிபாடுகள் அரசு வழிகாட்டுதல் படி நடைபெற்றது. இந்த நாளில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ராஜ தேவியாக விளங்கும் சாம்ராஜ்ய லக்ஷ்மியை வணங்கினால், வறுமை நீங்கும், குறையாத செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.
ஹோமத்தில் பங்கேற்றவர்களுக்கு, குபேர யந்திரம், குபேர காசு, குபேர ரக்ஷை,குபேர குங்குமம்,அட்சதை பிரசாதங்கள் கூரியர் மூலம் அனுப்பி வைக்கபட்டன.

அட்சய திருதியை முன்னிட்டு லட்சுமி குபேரர் சந்நிதியில் வைத்து பூஜித்த ஒரு லட்சம் 1.ருபாய் நாணயம் லட்சம் பேருக்கு குபேர ஹோம பிரசாதத்துடன் இலவசமாக அனுப்பி வைக்க உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் முழு முகவரியுடன் ரூபாய் 100 தபால்,/கூரியர் செலவுக்கு அனுப்பி பெற்று கொள்ளலாம் தொடர்புக்கு 94433 30203.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications