சனி பெயர்ச்சி: ஆர்.கே. நகர் தேர்தல் பிசியிலும் சனிபகவானை தரிசித்த ஓபிஎஸ்
சனி பெயர்ச்சி நாளில் குச்சனூர் சனிபகவானை வழிபட்டு பூஜைகள் செய்துள்ளார் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்.
சென்னை: சனி பெயர்ச்சியை முன்னிட்டு அரசியல் பரபரப்புக்கு மத்தியிலும் ஆன்மீக தரிசனம் செய்துள்ளார்
துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்.
தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார் சனிபகவான்.
விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார். குச்சனூர் சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி நிகழ்வு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.

வருகை தந்த ஓபிஎஸ்
தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குச்சனூருக்கு வந்து வழிபட்டனர். நேற்றைய தினம் ஆர்.கே. நகரில் பிரசார பிசியில் இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இரவு 8 மணி அளவில் குச்சனூர் வருகை தந்தார். சனீஸ்வர பகவான் ஆலயத்திற்கு துணை முதல்வர் வருவது யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

ராசி, நட்சத்திரம்
இந்த நிலையில் திடீரென வருகை தந்த ஓபிஎஸ்ஐ முறைப்படி வரவேற்றனர். அப்போது தனது ராசி, நட்சத்திரத்தை கூறி சுவாமிக்கு அர்ச்சனை செய்தார் பன்னீர்செல்வம். எள், நல்லெண்ணை வி ளக்கு ஏற்றிவிட்டு சிறிது நேரம் கோயிலில் அமர்ந்துவிட்டு பின்னர் புறப்பட்டுச் சென்றார்.

ஓபிஎஸ் ராசிக்கு எப்படி?
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ரேவதி நட்சத்திரம் மீனம் ராசி, சிம்ம லக்னம். இவரது ராசிப்படி சனி பெயர்ச்சி அதிக சாதகமாக இல்லை. காரணம் 10ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார் சனிபகவான். 10ஆம் இடம் உத்தியோகஸ்தானம், கர்ம ஸ்தானம்,

பிரச்சினையில்லை
காரியவன் காரியத்தில் அமர காரிய பங்கம் என்று சொல்லப்படும். காரியவன் என்பது சனி. காரிய ஸ்தானம் 10. சனி 10ஆம் இடத்தில் அமர்ந்தாலும் வேலை பிரச்சினைக்குள்ளாகும். அந்த 10ஆம் வீடு கடகம், சிம்மமாக இருந்தாலோ மேஷம், விருச்சிகமாக இருந்தாலோதான் இந்த பிரச்சினைகள். மற்றவையாக இருந்தால் நிரந்தரப் பணியை அந்த நேரத்தில் சனி கொடுக்கும் என்பது விதி.

சனிபகவான் தரிசனம்
எது எப்படியோ கடந்த காலங்களில் சனிபகவானால் நன்மையும் தீமையும் கலந்த பலன்களை கிடைத்தன. இம்முறை எந்த பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வதற்காகவே ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும் சொந்த ஊருக்கு வந்து குச்சனூர் சனிபகவானை கும்பிட்டு சென்றுள்ளார் ஒபிஎஸ்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications