Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Palli Vilum Palan in Tamil: பல்லி நம் உடம்பில் எங்கு விழுந்தால் என்ன பலன் - பரிகாரங்கள்

பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷம் ஒரு நபரை படாதபாடு படுத்தும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். பல்லி நமது உடலின் மீது விழுவது தோஷமாக கருதப்படுகிறது. பல்லி நம்முடைய உடம்பில் எங்கு விழுந்தால் என்ன பலன் என

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்லிகள் நம்முடைய வீடுகளில் சர்வ சாதாரணமாக உலா வரும். பலருக்கு பல்லியை பார்த்தாலே பயம் வரும். திடீரென்று உடம்பில் விழுந்து விட்டால் ஏதாவது கெடுதல் நடந்து விடுமோ என்று பயப்படுவார்கள். பல்லி நம்முடைய உடம்பில் எந்த பாகத்தில் விழுகிறதோ அதற்கேற்ப முன்னோர்கள் பலன்களை சொல்லி வைத்திருக்கிறார்கள். பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் என்பதையும் அப்படி பல்லி விழுவதால் என்ன பலன், அதற்கான பரிகாரம் என்ன என்பதையும் பார்க்கலாம்.

நம்முடைய வீட்டிற்குள் விஷ பூச்சிகள், வண்டுகள், கொசு போன்றவை நுழையும் போது அவற்றை சாப்பிட்டு நம்மை காப்பாற்றுகிறது பல்லி. எனவே பல்லிகள் நம்முடைய வீட்டில் இருப்பது நன்மைதான். பல்லிகளால் பாதிப்பு எதுவும் இல்லை நன்மைதான் அதிகம். நமது வீட்டில் சில இடங்களில் பல்லி கத்தினால் நல்லது நடக்கும், சில இடங்களில் கத்தினால் தீயவை நடக்கும் என்று கூறுவார்கள்.

பண்டைய காலங்களில் பல்லியைப் பற்றி கௌளி சாஸ்திரம் என்று படித்திருக்கிறார்கள்.மனிதர்களுக்கு நல்ல சகுனங்களையும் கெட்ட சகுனங்களையும் பல்லிகள் மூலம் உணர்த்துவதற்கு கடவுள் அனுப்பிய ஒரு உயிரினம்தான் என்று புராணங்கள் சொல்கின்றன. வட இந்தியாவில் தீபாவளி பண்டிகை நாளில் வீட்டிற்குள் பல்லியை பார்த்தால் அந்த குடும்பத்திற்கு செல்வமும் வளமும் வந்து சேரும் என்கிற நம்பிக்கை அதிகம் உண்டு. பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷம் ஒரு நபரை படாதபாடு படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. அத்தகைய பல்லி நமது உடலின் மீது விழுவது தோஷமாக கருதப்படுகிறது.

 தலையில் பல்லி விழுந்தால் பலன் - லட்சுமி கடாட்சம்

தலையில் பல்லி விழுந்தால் பலன் - லட்சுமி கடாட்சம்

பல்லி நம்முடைய தலையில் விழுந்தால் கலகம் நடக்கும் என்று சொல்வார்கள். தலையில் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம், வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் நடக்கும். நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி, வலது பக்கம் பல்லி விழுந்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் என்று சொல்வார்கள்.

கண்ணில் பல்லி விழுந்தால் பலன் - பயமும் கவலையும் வரும்

கண்ணில் பல்லி விழுந்தால் பலன் - பயமும் கவலையும் வரும்

கண்ணின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் வரும். வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகம். மூக்கின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் கவலை அதிகரிக்கும். மூக்கின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நோய்கள் வரும். காதின் இடது பக்கம் பல்லி விழுவது லாபம். வலது காதின் மீது பல்லி விழுந்தால் ஆயுள் கூடும்.

மார்பு, வயிற்றில் பல்லி விழும் பலன்

மார்பு, வயிற்றில் பல்லி விழும் பலன்

மார்பின் இடது பக்கம் பல்லி விழுந்தால் அது சுகம். வலது மார்பு பக்கம் பல்லி விழுந்தால் லாபம். கழுத்தின் வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை. தோளின் இடது, வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி தேடி வரும். வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி. வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம். முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் வரும். முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை.

மணிக்கட்டில் பல்லி விழுந்தால் பலன் - வரவு செலவு வரும்

மணிக்கட்டில் பல்லி விழுந்தால் பலன் - வரவு செலவு வரும்

கபாலத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு கபாலத்தின் வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு வரும். இடது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் கீர்த்தி வலது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் பீடை. கணுக்காலின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம். கணுக்காலின் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு வரும்.

பல்லி விழுவதும் பரிகாரமும்

பல்லி விழுவதும் பரிகாரமும்

தொடையில் பல்லி விழுந்தால் மன சஞ்சலம் ஏற்படும். பிருஷ்டத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் செல்வம் வரும். வலது பிருஷ்டத்தில் பல்லி விழுந்தால் சுகம் வரும். பல்லி நம்முடைய உடம்பில் ஏதாவது ஒரு பாகத்தில் விழுந்து விட்டால் உடனே பயப்பட வேண்டாம். முதலில் நன்றாக குளித்து விட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வணங்கலாம். கோவிலுக்கு போக முடியாவிட்டால் வீட்டின் பூஜை அறையில் தீபம் ஏற்றி குல தெய்வத்தை வணங்கலாம். தோஷங்கள் நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+