Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பங்குனி மாத ராசி பலன்கள் 2022 : இந்த 6 ராசிக்காரர்களில் யார் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தெரியுமா?

நவகிரகங்களின் தலைவனான சூரியன் குருபகவானின் ராசியான சூரியன் மீனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் இது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பங்குனி மாதத்தில் துலாம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போக

Subscribe to Oneindia Tamil

சென்னை: பங்குனி மாதம் மீன மாதம். நவகிரகங்களின் தலைவனான சூரியன், ஆசிரியராகிய குரு பகவானின் வீடான மீன ராசியில் சஞ்சரிக்கும் மாதம் இது. இந்த மாதத்தில் துலாம், விருச்சிகம்,தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிகளில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கிறது என்ன பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனைவரும் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மாதமாக குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பங்குனி மாதம் விளங்குகிறது.

பங்குனி மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சியைப் பார்த்தால் 10ஆம் தேதி புதன் மீன ராசிக்கு செல்கிறார். 17ஆம் தேதி கும்பராசிக்கு சுக்கிரன் செல்கிறார். செவ்வாய் கும்ப ராசிக்கு 24ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். 29ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. குருபகவான் அதிசாரமாக மீன ராசிக்குச் செல்கிறார். இந்த கிரகப்பெயர்ச்சி கிரகங்களின் பார்வை பலத்தால் நவகிரகங்களின் கூட்டணியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கு.

துலாம்

துலாம்

அரசு கிரகமான சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் சிறு உல்லாசப் பயணம் செல்வீர்கள். கண் நோய்களை கவனமாக கையாளுங்கள். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வண்டி வாகனம் வாங்குவீர்கள், தொழிற்சாலைக்காக இயந்திரங்கள் வாங்குவீர்கள். 24ஆம் தேதிக்கு மேல் சுப செய்திகள் தேடி வரும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை, வியாபார வாடிக்கையாளர்களிடம் கடுமையாக நடந்துக் கொள்ளக் கூடாது. குருவின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். மாணவர்கள் கல்வித்தரம் உயரும். படித்து வேலை செய்யும் இளம் வயதினருக்கு திருமண யோகமும் குழந்தைகளுக்காக ஏங்கி தவித்தவர்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் 17ஆம் தேதிக்குப் பின்னர் ஆன்மீகப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும், மனதில் சஞ்சலம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் யாரிடமும் விதண்டா வாதம் செய்யாதீர்கள். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார் கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தேர்வில் மதிப்பெண் அதிகரிக்கும், நுண்கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும், அடிக்கடி வெளியூர் செல்வீர்கள். 24ஆம் தேதிக்கு மேல் புதிதாக வண்டி வாகனம் வாங்குவீர்கள். நிலம் வீடு வாங்கலாம் லாபம் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்கும் போது தாய் மனைவி பெயருக்கு பத்திரம் சேர்த்து எழுத வேண்டும்.

புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஊக வணிகம் சிறப்படையும், புத்திக் கூர்மை அதிகரிக்கும். மாணவர்கள் உயர்கல்விகாக எழுதும் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். அரசாங்க துறையிலும் வேலை வாய்ப்பில் பதவி உயர்வும் சிறப்பாக இருக்கும். திருமண யோகம் பூமி யோகம் கூடி வரும். குரு நான்காம் இடத்தில் இருக்கிறார் அதிசாரமாக ஐந்தாம் வீட்டிற்கு செல்வதால் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும், வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும். வேலைவாய்ப்பில் பதவி உயர்வு தருவதும் திருமண பற்றி பேசுவதும் கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும் முன்கோபத்தைத் தவிர்க்கவும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்கு வேண்டியதை வாங்கி கொடுப்பீர்கள் 17ஆம் தேதிக்குப் பின்னர் வண்டி வாகன யோகம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்வது அவசியம். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அக்கம்பக்கத்தினரால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதியும் சோம்பலும் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு

சூரியன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு நிலம் வாங்கும் யோகம் வரும். அப்பாவினால் நன்மை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும் திருமணப்பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சினை தவிர்க்கவும், வாயை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. 24ஆம் தேதிக்கு மேல் இளைய சகோதரர்களால் நன்மை உண்டாகும், அடிக்கடி வெளியூர் செல்வீர்கள்.

புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும், தாய் மாமனின் உதவி கிடைக்கும். குரு பகவான் மூன்றாம் வீட்டில் பயணம் செய்வதால் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும், மாத பிற்பகுதியில் வீடு நிலம் வாங்கலாம். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் புதிதாக பொன்னகைகளை வாங்குவீர்கள் 7ஆம் தேதிக்குப் பின்னர் இடம் மாறும் சூழல் உருவாகும். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும், கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்படும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி முதலீடுகள் அதிகரிக்கும்.

மகரம்

மகரம்

சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை ஏற்படும், அலுவலகத்திலிருந்து நல்ல தகவல் வரும். ஜென்ம ராசியில் உள்ள செவ்வாயினால் முன்கோபம் அதிகரிக்கும். 24ஆம் தேதிக்கு மேல் இரண்டாமிடத்திற்கு செல்வதால் வீண் பேச்சினை தவிர்க்கவும். பேச்சில் கவனம் தேவை. புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும், வியாபார வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் திருமணம் சுப காரிய முயற்சிகளில் யோகம் கை கூடி வரும். குருவின் சஞ்சாரத்தால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். எதிலும் தைரியமாக செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அழகு அதிகரிக்கும் 17ஆம் தேதிக்குப் பின்னர் பெண்கள் பொன் நகைகளை வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும், உடலில் அசதி உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று தாயார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

அரசு கிரகமான சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளால் நன்மை உண்டாகும், அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய பணம் கைக்கு கிடைத்து விடும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பழைய வீட்டை விற்றுவிட்டு புது வீட்டை வாங்குவீர்கள் அல்லது பழைய வீட்டை புதுப்பீர்கள். 24ஆம் தேதிக்குப் பின்னர் பேச்சில் கோபத்தை குறைத்துக்கொள்ளவும். வீண் வாக்குவாதம் தவிர்க்கவும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும், பேச்சில் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும் 17ஆம் தேதிக்குப் பின்னர் முக வசீகரம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்காக செய்யும் முதலீடுகள் அதிகரிக்கும், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் நினைத்த காரியங்கள் வெற்றியடையும். புதிய பதவி உயர்வு கிடைக்கும்.

மீனம்

மீனம்

சூரியன் உங்களுடைய ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும் அதிகாரம் மிக்க பதவி தேடி வரும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும், வங்கி சேமிப்பு உயரும். புதன் உங்களுடைய ஜென்ம ராசியில் இருக்கிறார் மதி நுட்பம் அதிகரிக்கும். ராசிநாதன் குரு பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் முதலீடு செய்யும் முன்பாக முன்யோசனை அவசியம். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் 17ஆம் தேதிக்குப் பின்னர் செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும், சுய தொழிலில் ஏற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+