பங்குனி மாதத்தில் மீன ராசியில் குரு உடன் சேரும் சூரியன்..யாருக்கு அஷ்டலட்சுமி அருள் தேடி வரும்

நவகிரகங்களின் தலைவனான சூரியன் குருபகவானின் ராசியான சூரியன் மீனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம். 12 ராசிகாரர்களில் அதிர்ஷ்டசாலிகள் யார் என பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவகிரகங்களின் தலைவனான சூரியன், ஆசிரியராகிய குரு பகவானின் வீட்டில் அதாவது, மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம் இது. அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனைவரும் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மாதமாக குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பங்குனி மாதம் விளங்குகிறது. ஆட்சி பெற்று அமர்ந்துள்ள குரு உடன் கூட்டணி சேரும் சூரியன் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோகத்தை தரப்போகிறார். யார் அந்த அதிர்ஷ்டசாலிகள் என்று பார்க்கலாம்.

Panguni matha rasi palan 2023 Tamil: Panguni month Prediction for Mesham to Kanni

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே.. விபரீத ராஜயோகம் கைகூடி வரும். உடலும் மனமும் உற்சாகமாக இருக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். எல்லா செயல்களும் சிறப்படையும், வேலையில் சுறுசுறுப்பு உண்டாகும். எதிலுமே வெற்றி கிடைக்கும். அஷ்டலட்சுமி கடாட்சம் தேடி வரப்போகிறது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும், காரியங்கள் எல்லாம் சிறப்படையும். எதிர்பாராத பண வரவினால் வங்கியில் சேமிப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். அரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அதிகரிக்கும், செய்யும் செயல்கள் யாவும் வெற்றி பெறும், அலுவலகத்தில் பதவி உயர்வு தேடிவரும் அதன் மூலமாக வருமானம் அதிகரிக்கும். தொழிலுக்காக வெளிநாடு செல்லும் அதிர்ஷ்டம் உண்டாகும். உடலும் மனமும் உற்சாகமடையும்.

மிதுனம்

அற்புதமான மாதம் உங்களுக்கு செல்வம், செல்வாக்கு புகழ் கூடும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பயணங்களிலும் வாகன போக்குவரத்திலும் மிகவும் கவனமாக இருக்கவும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் அதிர்ஷ்டம் தேடி வரும். சுப செலவுகள் தேடி வரும். வீடு பூமி யோகம் உண்டாகும் தானம் தர்மம் செய்யவும் ஏழைக் குழந்தைகளுக்கு உணவு உடை வாங்கித் தரவும்

கடகம்

உங்களுக்கு இந்த மாதத்தில் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும், தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் நிலை உண்டாகும். செய்யும் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும், புதிதாக வீடு நிலம் வாங்குவீர்கள். பொன் நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். அரசாங்க பதவி உயர்வு தேடி வரும். வருமானம் வருவதை யாரிடமும் சொல்லக்கூடாது. இந்த மாதம் யாருக்கும் பணம் கடன் கொடுக்கக் கூடாது. ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. வாகன பயணங்களில் கவனம் தேவை. குல தெய்வக் கோயிலுக்கு சென்று வர பாதிப்புகள் குறையும்.

சிம்மம்

அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். தொல்லை உண்டாகும். வேலையில் கவனத்தோடு இருந்தால் எதிலும் வெற்றி கிடைக்கும். தாய் மாமனின் உதவி கிடைக்கும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவார்கள். வேலை வாய்ப்பில் பதவி உயர்வு கிடைக்கும். எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். மாணவர்களின் படிப்பில் அக்கறையும் கவனமும் அதிகரிக்கும்.

கன்னி

அரசு வேலைக்காக வெளியூர் செல்லும் நிலை உண்டாகும், அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும். சிறு உல்லாசப் பயணம் செல்வீர்கள். ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை, வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். மாணவர்கள் கல்வித்தரம் உயரும். படித்து வேலை செய்யும் இளம் வயதினருக்கு திருமண யோகம் கிடைக்கும். தம்பதியரிடையே நெருக்கம் கூடும். குழந்தைகளுக்காக ஏங்கி தவித்தவர்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+