மீன ராசியில் குரு உடன் கூட்டணி சேரும் சூரியன்..பங்குனியில் யாருக்கு நல்ல வேலை கிடைக்கும்

நவகிரகங்களின் தலைவனான சூரியன் குருபகவானின் ராசியான சூரியன் மீனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம். 12 ராசிகாரர்களில் அதிர்ஷ்டசாலிகள் யார் என பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவகிரகங்களின் தலைவனான சூரியன், ஆசிரியராகிய குரு பகவானின் வீட்டில் அதாவது, மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம் இது. அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனைவரும் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மாதமாக குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பங்குனி மாதம் விளங்குகிறது. ஆட்சி பெற்று அமர்ந்துள்ள குரு உடன் கூட்டணி சேரும் சூரியன் சில ராசிக்காரர்களுக்கு நல்ல வேலையையும் சிலருக்கு புரமோசனையும் தரப்போகிறார். யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

Panguni matha rasi palan 2023 Tamil: Panguni month Prediction for Thulam to Meenam

துலாம்

சூரியன் குரு உடன் இணைந்து ஆறாம் வீட்டில் பயணம் செய்யும் இந்த காலத்தில் சிறு உல்லாசப் பயணம் செல்வீர்கள். கண் நோய்களை கவனமாக கையாளுங்கள். சுப செய்திகள் தேடி வரும். அரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். திருமண யோகம் பூமி யோகம் கூடி வரும். வீடு மற்றும் இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும், பண வரவு அதிகரிக்கும். பேசும் வார்த்தைகளில் நிதானமும் கவனமும் தேவை.

விருச்சிகம்

உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் சந்தோஷ செய்திகள் தேடி வரும். சகோதரர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். அடிக்கடி வெளியூர் செல்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும், சிறு உல்லாச பயணம் செல்வீர்கள். வீடு, வேலை மாறும் சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். திருமண பற்றி பேசி முடிவு செய்யலாம். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. முன்கோபத்தைத் தவிர்க்கவும். உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

தனுசு

குரு சூரியன் சேர்க்கையால் வேலைவாய்ப்பில் பதவி உயர்வு தேடி வரும் திருமணப்பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற வீண் பேச்சினை தவிர்க்கவும், வாயை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சகோதரர்களால் சந்தோஷம் உண்டாகும், பெண்கள் புதிதாக பொன்னகைகளை வாங்குவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் தைரியம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும்.

மகரம்

குரு சூரியன் கூட்டணியால் நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீண் பேச்சினை தவிர்க்கவும். பேச்சில் கவனம் தேவை. விட்டுக்கொடுத்து செல்லவும். உங்களின் வாக்கு வன்மை அதிகரிக்கும், பேச்சில் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும். வீட்டில் லட்சுமி கடாட்ச யோகம் வந்து விட்டது. எதிலும் தைரியமாக செயல்படுவீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் உழைப்பு அதிகரிக்கும், உடலில் அசதி உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

கும்பம்

அரசு கிரகமான சூரியன் ஆட்சி பெற்ற குரு உடன் இணைவதால் அரசாங்க அதிகாரிகளால் நன்மை உண்டாகும், பண வருமானம் அதிகரிக்கும். வீடு, சொத்து வாங்குவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள் ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள் முக வசீகரம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.

மீனம்

ஆட்சி நாதன் குரு உடன் சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இணைவதால் பதவி உயர்வு கிடைக்கும் அதிகாரம் மிக்க பதவி தேடி வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும், வங்கி சேமிப்பு உயரும். தாய் மாமனுக்காக செலவுகள் அதிகரிக்கும், ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுய தொழிலில் ஏற்றம் உண்டாகும். சொந்த பந்தங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+