பங்குனி மாத ராசிபலன்
கிரகங்களின் ராசி மாற்றம்
சூரியன் : ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் : 09ம் தேதி மேஷம் ராசிக்கு மாறுகிறார்
புதன் : 13ம் தேதி மீனம் ராசிக்கு மாறுகிறார்
குரு : ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் : 23ம் தேதி ரிஷபம் ராசிக்கு மாறுகிறார்
சனி : ராசி மாற்றம் இல்லை
ராகு : ராசி மாற்றம் இல்லை
கேது : ராசி மாற்றம் இல்லை

மேஷம்:
அரசு வகைகளில் செலவுகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் பிரச்சினை உருவாகி மாதத்தின் பின் பகுதியில் தீர்வு கிடைக்கும். மாத ஆரம்பத்தில் கல்வியில் மேன்மை உண்டாகும்.
மாதத்தின் பின் பகுதியில் படிப்பில் கவனம் செல்லாது. தாய்மாமனுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பெண்களால் நன்மை உண்டாகும். கலைகளில் திறன் அதிகரிக்கும். அறிமுகம் இல்லாத புதிய நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். விருந்து கேளிக்கை உல்லாசம் போன்ற விஷயங்களில் கவனம் செல்லும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரம் சுமாராக இருக்கும். தொழில் ரீதியாக உருவாகும் எதிரிகளை வெல்லும் திறன் உண்டாகும். சகோதரர்களின் வகையில் பிரச்சினை உருவாகும். நிலம் வீடு வகைகளில் முதலீடு செய்வீர்கள் ஆனால் அது லாபம் தராது.
09ம் தேதிக்கு பிறகு மனதில் கோபம் அகங்காரம் அதிகரிக்கும். தன்னிலை இழக்கும் நிலை உருவாகும்.
வேல்முருகனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.
ரிஷபம்:
கல்வி கேள்விகளில் மேன்மை உருவாகும். கமிஷன் வியாபாரம் லாபத்தை அள்ளித்தரும். தொழிலுக்காக வெளியூர் செல்லும் நிலை உருவாகும்.
அரசாங்க ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆசிரியர்களுக்கு தொழில் உத்தியோகம் சிறப்படையும். பெண்களால் யோகம் உண்டாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.
வாகன வகைகளில் செலவுகள் அதிகரிக்கும். குழந்தைகளால் மனக் கஷ்டம் உருவாகும். வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். விருந்தினர்கள் வருகை அதிகரிக்கும். மனக் குழப்பம் அதிகரிக்கும். புத்தி சரியாக வேலை செய்ய்யாது. ஒப்பந்தத் தொழில் சிறப்பாக இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் கூட்டாளிகளுடன் சச்சரவு உண்டாகும். அவர்களால் நஷ்டம் அடையும் சூழ்நிலை உருவாகும்.
மஹாலட்சுமியை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.
மிதுனம்:
குடும்பத்தில் மங்கலகரமான நிகழ்வுகள் நடைபெறும். பெண்களால் யோகம் உருவாகும். விலையுயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.
அனைவரையும் வெல்லும் திறன் உண்டாகும். பதவி உயர்வு தேடி வரும். தொழிலில் இடமாற்றம் உண்டாகும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.
அரசாங்க அதிகாரிகளின் உதவி கிடைக்கும். மாதத்தின் பிற்பகுதியில் மனக்குழப்பம் அதிகரிக்கும். தாய்மாமனுடன் பகைமை உண்டாகும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வாகனங்களைக் கையாளுவதில் கவனம் தேவை.
லட்சுமி ஹயக்கிரீவரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.
கடகம்:
மனதில் தைரியம் அதிகரிக்கும். மனதில் சாந்தம் நிலவும். மாத ஆரம்பத்தில் தகவல் தொடர்பில் மேன்மை நிலை உருவாகும். பண வரவு அவ்வளவாக திருப்தியாக இருக்காது.
குழந்தைகளின் செயல்பாடுகள் மகிழ்ச்சியைத் தரும். குருமார்கள் மற்றும் குடும்பத்தின் பெரியவர்களின் ஆசி கிடைக்கும். கணவன் மனைவியிடையே சச்சரவு உண்டாகும்.
மாதக் கடைசியில் தீர்வு கிடைக்கும். சகோதரர்கள் எல்லாவற்றிலும் உதவுவார்கள். ஆடம்பரப் பொருட்களின் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் அரசு வகையில்
பிரச்சினை உருவாகலாம். அரசாங்கத்திற்க்கு செலுத்த வேண்டிய வரி வகைகளை காலம் தாழ்த்தாமல் செலுத்துவது பிரச்சினைகளிலுருந்து பாதுகாப்பு தரும்.
சிம்மம்:
செலவுகள் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு மருத்துவ செய்யும் நிலை உருவாகலாம். வீண் விரயங்களைத் தவிர்க்க வேண்டும். மாத இறுதியில் பெண்களால் கஷ்டம் உண்டாகும். பொன்நகைகள் தொலைந்து போவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
சிந்தனை தடுமாறும். படிப்பில் மந்த நிலை உண்டாகும். ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நஷ்டத்தைத் தரும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.
தாத்தாவின் சொத்தில் பங்கு கிடைக்கும். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் பிரச்சினை உண்டாகும். பாட்டிக்கு கண்டம் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். அதிர்ஷ்டம் குறையும். கடவுளின் அனுகிரகம் பெற்று எல்லா காரியங்களையும் தொடங்க வேண்டும்.
ஆஞ்சனேயரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.
கன்னி:
பெரும்பாலான முக்கிய கிரகங்கள் நல்ல பலன் தரும் நிலையில் உலவுகின்றன. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும்.
பணவரவு அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டம் உண்டாகும். அரசாங்க விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களைக் கையாளுவதில் கவனம் தேவை.
வாகன விபத்துகளுக்கு வாய்ப்புகள் அதிகம். மனச் சலனம் அதிகரிக்கும். மாதத்தின் முற்பகுதியில் வியாபாரம் மிகவும் செழிப்பாக இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் தொழில் கூட்டாளிகளுடன் சச்சரவு உண்டாகும்.
ரியல் எஸ்டேட் தொழில் நஷ்டத்தைத் தரும். நிலம் வீடு வகைகளில் முதலீடுகளைத் தவிர்க்கவும்.
லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.
துலாம்:
மன நிலையில் கவனம் தேவை. கோபமும் ஆங்காரமும் அதிகரிக்கும் அனைவரிடமும் பகைமை நிலை உருவாகும். மனைவியும் எதிரிபோல் செயல் படுவார். பெண்களால் பிரச்சினை உருவாகும்.
ஆடம்பரப் பொருட்களை வாங்க வேண்டாம். இவற்றில் தொழில் நுட்ப பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி குறையும். பெண்களுக்கு கற்பப் பை பிரச்சினைகள் உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
தொழிலில் இடமாற்றம் உண்டாகும். அடிக்கடி அலைச்சல் உண்டாகும். பெரியவர்களுடன் விவாதத்தை தவிர்க்கவும். மாத இறுதியில் வியாபாரம் சிறப்படையும்.
சிவ பெருமானை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.
விருச்சிகம்:
குடும்பத்தில் சந்தோஷம் நிம்மதி அதிகரிக்கும். மனக் குழப்பம் தீரும். பொருளாதர நிலை மேலோங்கும். உடல் அசதி அதிகரிக்கும். வாகன வகைகளில் செலவுகள் அதிகரிக்கும்.
பெண்களால் ஏமாற்றப்படுவீர்கள். மாத இறுதியில் கல்வியில் கவனம் தேவை. வயிறு, பாதம் போன்ற பாகங்களில் நோய் உண்டாகும். தொழிலில் இருந்துவந்த தேக்க நிலை மாறும்.
மனதில் நிம்மதி அதிகரிக்கும். வெளிநாட்டு தொழில் தொடர்புகள் லாபத்தைத் தரும்.
தனுசு:
மனைவியால் அதிஷ்டம் அதிகரிக்கும். உல்லாச பயணம் செல்வீர்கள். எதிர் பாராத பணவரவு உண்டாகும். படிப்பில் கவனம் தேவை. தகவல் தொடர்பில் தடை உண்டாகும்.
குடும்பத்திற்க்காக செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் கவனம் தேவை. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணிச்சுமை அதிகரிக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.
மாதத்தின் பிற்பகுதியில் அரசாங்க வகைகளில் தொல்லை உருவாகும். பெரியவர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது சிறப்பைத்தரும்.
அம்பாளை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.
மகரம்:
தொழில் வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். பணவரவு அதிகரிக்கும். பணியில் உத்தியோக உயர்வு கிடைக்கும். வங்கி சேமிப்பு உயரும். குடும்ப வாழ்க்கை சுமுகமாக இருக்கும்.
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சமூகத்தில் கௌரவம் அந்தஸ்த்து அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் ஆலோசனை உத்தியோக உயர்வுக்கு உதவியாக இருக்கும்.
ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் உண்டாகும். வீட்டை அழகுபடுத்தும் பணி தொடங்கும். மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் கவனம் தேவை.
அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.
கும்பம்:
பெண்களால் யோகம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொன் நகைகள் ஆடை ஆபரணங்களின் சேர்க்கை அதிகரிக்கும். புதிய நிலம் வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில்கள் முன்னேற்றம் காணும். தொழில் உத்தியோகத்தில் மாற்றம் உண்டாகும். தொழில் மேலும் சிறப்படையும். கடன் வாங்கும் நிலை உருவாகும். பொருளாதார விஷயத்தில் கவனம் தேவை.
மாதத்தின் பிற்பகுதியில் ஒப்பந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பிறரை தரக்குறைவாகப் பேசுவதை தவிர்க்கவும். எதிர்பாராத கஷ்டங்கள் உருவாகும். கடவுள் அனுகிரகத்தினால் அனைத்தும் சுபமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஐயப்பனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.
மீனம்:
குடும்ப உருப்பினர்களிடையே அமைதி நிலவும். சந்தோஷம் அதிகரிக்கும். கோபமும் குரோதமும் அதிகரிக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.
மாத ஆரம்பத்தில் சமயோதமாக செயல்பட்டு அனைத்திலும் வெற்றி பெருவீர்கள். குதற்கமான வார்த்தைகளைத் தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு உருவாகும்.
எல்லோரையும் பகைத்துக் கொள்ளும் நிலை உருவாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வங்கி சேமிப்பும் உயரும். நிலம் வீடு வகைகளில் நற்பலன் உண்டாகும். வீட்டிற்க்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை உண்டாகும்.
காலபைரவரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.












Click it and Unblock the Notifications