பிலவ வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2021: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகத்திற்கு எப்படி?
பிலவ தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கப்போகிறது. இந்த தமிழ் புத்தாண்டில் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
சென்னை: மங்களகரமான பிலவ புது வருடம் பிறக்கப் போகிறது. பிலவ ஆண்டு சித்திரை 1ஆம் தேதி புதன்கிழமை சுக்கிலபட்சம் துவிதியைத் திதி பரணி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் பிறக்கிறது. பிலவ ஆண்டு பிறக்கும் போது மேஷ ராசியில் ராஜ கிரகமான சூரியன் உச்சம் பெற்றிருக்க கூடவே சுக்கிரன், சந்திரன் இணைந்துள்ளனர். ரிஷபத்தில் செவ்வாய் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, கும்ப ராசியில் குரு, மீன ராசியில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிலவ வருடத்தில் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
சார்வரி வருடம் பலருக்கும் கொரோனா அச்சத்துடன் கடந்து விட்டது. இந்த பிலவ ஆண்டிலாவது மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சி கிடைக்குமா என்று பலரும் நினைக்கலாம். நல்ல வேலை கிடைக்க வேண்டும், திருமண யோகம் அமைய வேண்டும் என்றும் பலரும் இறைவனை வேண்டிக்கொண்டிருக்கின்றனர்.
நவ கிரகங்களின் சஞ்சாரம், கிரகங்களின் கூட்டணி, பார்வையால் பிலவ ஆண்டில் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் வேலையில் முன்னேற்றம் கிடைக்கப்போகிறது. யோகங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு பிலவ தமிழ் வருடம் அற்புதமாக ஆண்டாக அமைந்துள்ளது. குரு பகவான் தன்னுடைய ஏழாம் பார்வையால் உங்கள் ராசியை பார்வையிடுகிறார். தலைமை தாங்கும் பண்பு கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு புதிய தொழில் முன்னேற்றம் தேடி வரும். புத்தாண்டு பிறக்கும் போது உங்கள் ராசிக்கு பத்தாம் அதிபதி சுக்கிரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தான அதிபதியுடனும் இணைந்து சஞ்சரிப்பது உங்களுக்கு புதுவிதமான யோகத்தை தரப்போகிறது. முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய வெற்றிகளும் பதவிகளும் கிடைக்கப்போகிறது. கலைத்துறையினருக்கு புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். பங்கு சந்தை முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். கணவன் மனைவி உறவில் இருந்த சிக்கல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புரமோசன் சம்பள உயர்வுடன் கூடிய நல்ல வேலை வாய்ப்பு அமையும். திருமண சுப காரியங்கள் நடைபெறும். பிலவ தமிழ் வருடத்தில் நீங்கள் சாதனையாளர்களாக மாறப்போகிறீர்கள். இந்த ஆண்டு தொட்டது துலங்கும் பொற்கால ஆண்டாக இருக்கப்போகிறது.

கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, பிலவ தமிழ் வருடம் பிறக்கும் போது உங்கள் ராசி அதிபதி உங்களுடைய வீட்டிற்கு ஏழாம் வீட்டில் நீச்சம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசி அதிபதியின் பார்வை உங்களுக்கு கிடைக்கிறது. முயற்சிகளுக்கும் உழைப்புக்கும் ஏற்ற பலன்களை அறுவடை செய்வார். ஐந்தாம் அதிபதி சனி ஆசி பெற்று சஞ்சரிக்கிறார். நிலையான வருமானம் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்பு அமையும். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். ஆசிரியர்கள், வங்கித்துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமையும். உங்களின் திறமைக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். காதல் திருமணம் கை கூடி வரும். கணவன் மனைவி உறவில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பெண்களுக்கு பொன், பொருள் ஆபரண சேர்க்கை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கவலைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும் ஆண்டாக பிலவ புத்தாண்டு அமையப்போகிறது.

துலாம்
சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, இந்த பிலவ வருடத்தில் உங்களுக்கு சாதகமான நிலையில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த ஆண்டு பிறக்கும் போதே குருவின் பொன்னான பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. குரு பகவான் 5ஆம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுவது சிறப்பு. நான்காம் வீட்டில் உள்ள அர்த்தாஷ்டம சனி பகவான் உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்வையிடுவதால் கவனமும் விழிப்புணர்வும் தேவை. இந்த ஆண்டில் தொழில், வியாபாரம், வேலை சிறப்பாக அமையும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். வழக்கு விவகாரங்கள் சமாதானத்தில் முடியும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராஜயோகத்தை தரக்கூடிய சனிபகவான் சச மகா யோகத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் கடன் பிரச்சினைகள் தீரும் அளவிற்கு வருமானம் வரும். மொத்தத்தில் இந்த பிலவ புத்தாண்டு மாற்றங்களைத் தரப்போகிற ஆண்டாக அமையப்போகிறது.
வியாழக்கிழமைகளில் சித்தர்கள் ஜீவ சமாதிகளுக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு தர்மகர்மாதிபதி யோகம் கிடைக்கிறது. தமிழ் புத்தாண்டு பிறக்கும் போது சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணைந்து ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். பத்தாம் அதிபதி உச்சம் பெற்றிருப்பது பலமான யோகத்தை தரும். குருவின் சஞ்சாரமும் நான்காம் வீட்டில் அமர்ந்து அவரது பார்வை உங்கள் ராசிக்கு 8,10,12 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. கடந்த காலங்களில் பட்ட துன்பங்களுக்கு எல்லாம் விடிவு காலம் பிறக்கப்போகிறது. ஏழரைச்சனி முடிவுக்கு வந்து விட்டாலும் கேது உங்கள் ராசியில் சஞ்சரிக்கிறார். சுப கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உறக்கம் தொலைத்தவர்கள் இனி சுகமாக உறங்குவீர்கள். பங்கு மார்க்கெட் முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். திருமண சுப காரியங்கள் கை கூடி வரும். வேலையில் புரமோசனும் திருமணமும் கை கூடி வரும். ஆலய வழிபாடுகள் மேலும் பல அற்புதங்களை நிகழ்த்தும்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications