உலக நிமோனியா தினம்: கந்த சஷ்டி கவசம் படிங்க... காய்ச்சல் காணாம போகும்
நுரையீரல் அழற்சி எனும் நிமோனியா, நுரையீரல் கிருமி தொற்றால் ஏற்படும் ஒரு காய்ச்சல் நோயாகும். இதன் காரக கிரஹம் புதன் மற்றும் சனியாகும்.
சென்னை: வடகிழக்கு பருவ மழை காலமான இந்த குளிர்காலத்தில் நிமோனியா பரவும் சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது. மருத்துவமனையில் நீண்ட கியூ நிற்கிறது. கந்த சஷ்டி கவசம் படித்தால் காய்ச்சல், சளி, தலைவலி மாயமாக மறைந்து விடும் என்கிறது மருத்துவ ஜோதிடம். சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை... சுப்ரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்று இதனால்தான் கூறியுள்ளனர்.
நிமோனியா காய்ச்சலின் பாதிப்புகளையும் அதில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிகளையும் நமக்கு நினைவூட்டும் விதமாக 'நிமோனியா தினம்' நவம்பர் 12ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நிமோனியா பாதிப்புகள் அதற்கான பரிகாரங்களை ஜோதிட ரீதியாக பார்க்கலாம்.

மருத்துவ ஜோதிடத்தில் காய்ச்சலை மூன்று வகையாக பிரித்து கூறுகின்றனர். வாத காய்ச்சல் - உடல் வலியுடன் கூடிய காய்ச்சல், பித்த காய்ச்சல் - தலைவலி மற்றும் வாந்தியுடன் கூடியது, கப காய்ச்சல் - ஜலதோஷம், சளி, இருமலுடன் கூடியது. வாத காய்ச்சலுக்கு சனீஸ்வர பகவானும், பித்த காய்ச்சலுக்கு செவ்வாய் மற்றும் சூரியனும், கப காய்ச்சலுக்கு சந்திரன் மற்றும் சுக்கிர பகவானும் காரகத்துவம் வகிக்கின்றனர். சனீஸ்வர பகவானும் குளிர்ச்சி மற்றும் கபத்திற்கு காரகம் வகிப்பதால் சந்திரன் மற்றும் சுக்கிரன் இவற்களோடு சனி சேரும்போது தீவிரமான சளியுடன் காய்ச்சல் ஏற்படுகின்றது.
நுரையீரலை தாக்கும் நிமோனியா
நிமோனியா என்பது நுரையீரல் அழற்சி நோய். இந்த நோயினால் ஓர் ஆண்டுக்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
நிமோனியா குறிப்பிட்ட ஒரு காரணத்தினால்தான் ஏற்படுகிறது என்று யாராலும் சொல்ல முடியவில்லை. நிமோனியா அநேகமாக வைரஸ் காரணமாகவே பரவுகிறது என்றாலும், பாக்டீரியா, பூஞ்சை ஆகியவை காரணமாகவும் பரவ வாய்ப்பிருக்கிறது.
யாருக்கு பாதிப்பு
உணவு, தூசி, நீர், காற்று ஆகியவற்றின் மூலமாக இது பரவும். 65 வயதுக்கு அதிகமானவர்களுக்கு நிமோனியா ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மரணத்துக்கு, மற்ற நோய்களைவிட நிமோனியா முக்கியமான காரணமாக இருக்கிறது. குழந்தை பிறந்து முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் கொடுப்பதன் மூலமாகவே நிமோனியாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும்.
சூரியன் பாதிப்பு
ஒருவர் ஜாதகத்தில் சூரியன் நீர் ராசிகளில் நின்று பலமிழக்கும்போது முக்கியமாக மீனத்தில் சூரியன் பலமிழந்து அதனோடு நீச புதன் சேர்க்கை பெறும்போது வைட்டமின் ஏ குறைபாட்டினால் நிமோனியா காய்ச்சல் ஏற்படும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. தொண்டை மற்றும் நுரையீரலின் காரக கிரஹமான புதன் ஒரு ஜாதகத்தில் 6 அல்லது 8 அல்லது 12ஆம் பாவ தொடர்புகள், செவ்வாய், சனி, ராகு கேதுவுடன் சேர்ந்து பலமிழந்து நிற்பது போன்றவை ஜாதகருக்கு நிமோனியா தொற்றை ஏற்படுத்துகிறது.
சந்திரனின் சேர்க்கை
கால புருஷனுக்கு இதயத்தை குறிக்கும் வீடு நான்காம் பாவம் எனப்படும் கடக ராசி. கடக ராசி மற்றும் அதன் அதிபதியான சந்திரன் அசுபத்தன்மை பெற்று புதனுடன் தொடர்பு கொள்ளும்போது நிமோனியா காய்ச்சல் ஏற்படும் சாத்திய கூறுகள் உள்ளதாக மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.
காற்று ராசிகள்
காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் 6 அல்லது 8 அல்லது 12 தொடர்புகள், சனி, ராகு, கேது தொடர்புகள் பெறும்போது மூச்சுகோளாறுகள், சுவாச உறுப்பில் பாதிப்பு ஏற்படுகின்றது. நுரையீரலின் காரகரான புதனுடன் சனி தனித்தோ அல்லது கபகிரஹங்களான சந்திரன் மற்றும் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று நிற்கும் போது தொண்டையில் கிருமி தொற்று, சளி மற்றும் நிமோனியாவை ஏற்படுத்துகிறது.
சந்திரன் சனி சேர்க்கை
கால புருஷ எட்டாவது ராசியான விருச்சிகத்தில் சந்திரன் நீசமாகி புதன் மற்றும் சனியுடன் சேர்க்கை பெறுவது. நீர் கிரகங்களில் ராகு/கேது நின்று, சந்திரன், புதன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களை பார்ப்பது.விருச்சிகத்தில் கோச்சார சந்திரன், புதன், சனி சேர்ந்து பயணம் செய்வது காய்ச்சலை ஏற்படுத்தும்.
கந்த சஷ்டியின் மகத்துவம்
செவ்வாயின் காரகம் நிறைந்த துளசியில் செய்த மருந்துகள், கசாயம் தொண்டை நோய் மற்றும் இருமலுக்கு சிறந்த பலனளிக்கும்.
நோய் ஏற்பட்டவரின் அருகில் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுபடை, சுதர்ஸனாஷ்டகம், ஸ்ரீ லஷ்மி நரசிம்ம மந்த்ர ராஜ பத ஸ்லோகம் பாராயணம் செய்வது நன்மை தரும். எனவேதான் நம் உடலில் ஏற்படும் நோய் என்னும் அசுரனை சம்ஹாரம் செய்ய நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து காக்கிறார் தமிழ் கடவுள் முருகன்.
தன்வந்திரி பகவான்
சூரிய பகவானுக்கான ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யலாம். வைட்டமின் ஏ நிறைந்த சத்தான உணவுகளை சாப்பிடலாம்.
புதன் மற்றும் விஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி பகவானை புதன் கிழமைகளில் புதன் ஹோரையில் வணங்கி வருவதன் மூலம் பாதிப்புகளை தடுக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications