Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புரட்டாசி மாத ராசிபலன்கள் 2019: தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு உற்சாகம் கூடும்

புரட்டாசி மாதம் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார் கூடவே கன்னி ராசியில் புதனும், சுக்கிரன், செவ்வாய் என கிரகங்கள் கூட்டணி சேருகின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் தனுசு மற்றும் தனுசு ராசிக்கார

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    16-09-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ

    சென்னை: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். காரணம் கன்னி ராசி புதன் உச்சம் பெரும் ராசி. அந்த ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் சூரியனுடன், சுக்கிரன், புதன், கூடவே செவ்வாயும் கூட்டணி சேருகின்றனர். இந்த கிரகங்களின் கூட்டணியால் பல ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் ஏற்படும். புரட்டாசி பிறக்கும் போது மேஷத்தில் சந்திரன், மிதுனத்தில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,புதன், சுக்கிரன். சிம்மம் ராசியில் செவ்வாய், விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மாதத்தின் முதல்நாளில் சனி பகவான் வக்ரம் முடிந்து நேர்கதியில் இயங்குகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலனை தரும் என்று பார்க்கலாம்.

    புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். நவராத்திரி பண்டிகை, மகாஹய பட்சம் கடைபிடிக்கப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இந்த ஆண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும்.

    புரட்டாசியில் கிரகங்களின் மாற்றம் உள்ளது. சிம்மம் ராசியில் இருக்கும் செவ்வாய் பகவான் புரட்டாசி 8ஆம் தேதி கன்னி ராசிக்கு நகர்கிறார். 12 ஆம் புதன் துலாம் ராசிக்கும், சுக்கிரன் 16ஆம் தேதி துலாம் ராசிக்கு நகர்ந்து புதனுடன் கூட்டணி சேருகிறார். சனி பகவான் வக்ரம் முடிந்து நேர்கதியில் இயங்கத்தொடங்குகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்களைத் தரப்போகிறார்.

    கிரகங்கள் சஞ்சாரம்

    கிரகங்கள் சஞ்சாரம்

    இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்குள் சனி மற்றும் கேது சஞ்சரிக்க ஏழாம் வீட்டில் ராகு இருக்கிறார். பத்தாம் வீடான கன்னி ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சாரம் உள்ளது. ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் மாத துவக்கத்திலேயே பத்தாம் வீட்டிற்கு வந்து சூரியனுடன் இணைகிறார். மாத மத்தியில் புதன், சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு நகர்கின்றனர். ராசி நாதன் குரு விரைய ஸ்தானத்தில் இருக்கிறார்.

    மனக்குழப்பம்

    மனக்குழப்பம்

    நான்கு முக்கிய கிரகங்கள் பாசிட்டிவ் ஆக இருக்கின்றன. நீண்ட நாள் போராட்டங்களுக்குப் பிறகு கோள்களின் சஞ்சாரத்தினால் நிறைய நல்ல விசயங்கள் நடக்கும். படிப்பு தொடர்பான பயணங்கள் ஏற்படும். சிலருக்கு மனக்குழப்பம் வரும். சனி கேது தடையை உடைக்க தியானம் மன அமைதி அவசியம்.
    குரு உங்க ராசியை நெருங்குகிறார். ஐப்பசி மாதம் உங்க ராசிக்குள் வரப்போவதால் நன்மைகள் நடைபெறும் காலம் நெருங்கி வருகிறது.

    கஷ்டங்கள் தீரும்

    கஷ்டங்கள் தீரும்

    இந்த மாதம் நல்ல திட்டங்கள் செயல்படுத்தத் தொடங்குவீர்கள். உடல்நல பிரச்சினைகள் தீரும். செவ்வாய் பத்தாம் வீட்டிற்கு நகர்ந்து உங்க ராசியை பார்க்கிறார். கேது சனியின் சக்தியை ஈர்த்து விடும். தனுசு ராசி நீண்ட நாள் கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் பற்றுக்கொள்ளுங்கள். நேர்மறையான நினைத்தாலே போதும் நிறைய நல்ல விசயங்கள் நடக்கும்.

    அடையாளம் காட்டும் சனி

    அடையாளம் காட்டும் சனி

    வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருங்க. தப்பு செய்யுற இடத்தில யாரும் நிக்காதீங்க உங்களுக்கு என்ன வேலையோ அதை மட்டும் நீங்க பாருங்க. செலவுகள் அதிகமாகும். ஏழரை சனி ஜென்ம சனி நடக்குது கவலைப்படாம இருங்க. உங்களுக்கு உலக விசயங்களை புரியவைப்பார் சனிபகவான். உங்களுக்கு கூட இருந்தே குழி பறிப்பவர்களை அடையாளம் காட்டுவார். ஜென்ம சனியால் மூளை மந்தமாக இருக்கும். சனிபகவான் உங்களை சிந்திக்க வைத்து செயல்பட வைப்பார்.

    நிதானம் தேவை

    நிதானம் தேவை

    தனுசு ராசியில் பிறந்த சிலருக்கு உபரி வருமானம் கிடைக்கும். உடல்நிலை தொந்தரவுகள் குறையும். வாகனத்தில் செல்லும் போது கூடுதல் வேகத்தை குறைத்து விடுங்கள். நிதானமாக போவது நன்மையை தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சந்திராஷ்டம காலத்தில் புதிய முயற்சிகள் தவிர்த்து விடுங்கள்.

    தோஷம் தீரும்

    தோஷம் தீரும்

    மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் திதி கொடுங்க. அன்னதானம் கொடுங்க. முன்னோர்களுக்கு மகாளய பட்சத்தில் தர்ப்பணம் கொடுப்பதால் தலைமுறைக்கும் நல்லது நடக்கும். பித்ரு தோஷம் சாபங்கள் நீங்கும்.

    மன உளைச்சல்

    மன உளைச்சல்

    மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமாக இருக்கிறது. குரு 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். சூரியன், செவ்வாய் ஒன்பதாம் வீட்டிலும், சுக்கிரன், புதன் பத்தாம் வீட்டிற்கு நகர்வது நன்மையான அம்சம். உடம்புல கவனம் வையுங்கள். வருமானம் இருந்தாலும் வேலை வசதிகள் இருந்தாலும் மன உளைச்சலோடு இருப்பீங்க. தேவையான வசதி வீடு வண்டி வாகனம் இருந்தாலும் கடன் அதிகம் இருக்கும். காரணம் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சனி கேது சஞ்சாரம் செய்வது நிம்மதியை தடுக்கிறது.

    நிம்மதி குறைவு

    நிம்மதி குறைவு

    மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் திருமணம் கைகூடும், வேலை கிடைக்கும், காதல் விவகாரங்கள் கை கூடும் என்றாலும் எல்லாமே தடை தாமதங்களுடன் நடைபெறும். செழிப்போடு இருந்தாலும் கேதுவினால் உடம்பில் இடைஞ்சல் ஏற்படும். ராசி நாதன் சனி கேது உடன் விரைய இருப்பதால் மனக்குழப்பமாக இருக்கும்.

    பயணங்களில் கவனம்

    பயணங்களில் கவனம்

    இந்த மாதம் சுப விரையம் நிறைய ஏற்படும் அதற்காக கடன்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் படிப்பு செலவிற்கு கடன்கள் வாங்குவீர்கள். சிலர் நம்பிக்கை மோசடி செய்வார்கள். பகல்நேர பயணங்கள் செய்யுங்கள். இரவு பயணங்களை தவிர்த்து விடுங்கள். கொடுக்கல் வாங்கல் பிரச்சினை முடிவுக்கு வரும்.
    தாய்வழி உறவுகள் தந்தை வழி உறவுகளிடம் பேசும் போது கவனம் தேவை.

    வாகனங்களில் கவனம்

    வாகனங்களில் கவனம்

    ஆன்லைனில் பொருட்களை வாங்க வேண்டாம். சிலர் நம்பிக்கை மோசடி செய்வார்கள். யாரையும் முழுதும் நம்பவேண்டாம் ஜாமின் கையெழுத்து போட்டு யாருக்கும் பணம் வாங்கித்தரவேண்டாம். மகர ராசிக்காரர்களுக்கு பெற்றோர்கள், பெரியோர்களுடன் வாக்குவாதம் வேண்டாம். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும் வண்டியில் செல்லும் போது கவனம். அடிவயிற்றில் உபத்திரவம் ஏற்படும். ஞாயிறுகிழமையில் பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்கி வாருங்கள் நல்லதே நடக்கும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+