Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புரட்டாசி மாத ராசிபலன்கள் 2019: கும்பம், மீனம் ராசிக்காரர்கள் கவனம்

புரட்டாசி மாதம் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார் கூடவே கன்னி ராசியில் புதனும், சுக்கிரன், செவ்வாய் என கிரகங்கள் கூட்டணி சேருகின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் கும்பம் மற்றும் மீனம் ராசிக்கார

Subscribe to Oneindia Tamil

சென்னை: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். காரணம் கன்னி ராசி புதன் உச்சம் பெரும் ராசி. அந்த ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் சூரியனுடன், சுக்கிரன், புதன், கூடவே செவ்வாயும் கூட்டணி சேருகின்றனர். இந்த கிரகங்களின் கூட்டணியால் பல ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் ஏற்படும். புரட்டாசி பிறக்கும் போது மேஷத்தில் சந்திரன், மிதுனத்தில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,புதன், சுக்கிரன். சிம்மம் ராசியில் செவ்வாய், விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மாதத்தின் முதல்நாளில் சனி பகவான் வக்ரம் முடிந்து நேர்கதியில் இயங்குகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலனை தரும் என்று பார்க்கலாம்.

புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். நவராத்திரி பண்டிகை, மகாஹய பட்சம் கடைபிடிக்கப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இந்த ஆண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும்.

புரட்டாசியில் கிரகங்களின் மாற்றம் உள்ளது. சிம்மம் ராசியில் இருக்கும் செவ்வாய் பகவான் புரட்டாசி 8ஆம் தேதி கன்னி ராசிக்கு நகர்கிறார். 12 ஆம் புதன் துலாம் ராசிக்கும், சுக்கிரன் 16ஆம் தேதி துலாம் ராசிக்கு நகர்ந்து புதனுடன் கூட்டணி சேருகிறார். சனி பகவான் வக்ரம் முடிந்து நேர்கதியில் இயங்கத்தொடங்குகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்களைத் தரப்போகிறார்.

 எட்டாம் வீட்டில் கிரகங்கள்

எட்டாம் வீட்டில் கிரகங்கள்

கும்ப ராசிக்காரர்களே இந்த மாதம் ஏழுக்கு உடைய சூரியன் எட்டில் இருக்கிறார். கொண்டாட்டங்களை குறைத்துக்கொள்ளுங்கள். இந்த மாதம் பொறுமை தேவை. எட்டாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் என கிரகங்கள் சேருவது நல்லதல்ல. பத்தில் குரு சஞ்சரிப்பதும் நல்லதல்ல. பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்தில் சனி கேது இருப்பதால் நல்ல சக்தியை கேது இழுத்துக்கொள்வார். சனியை செயல்பட விடாமல் வைத்திருக்கிறார். எந்த ஆதாயமும் தரவிடாமல் இருக்கிறார்.

 எட்டாம் அதிபதி வலிமை

எட்டாம் அதிபதி வலிமை

எட்டாம் வீட்டில் சூரியன் செவ்வாய் இணைவதால் சக்திகள் அனைத்தும் விரையமாகும். கும்பம் ராசிக்காரர்கள் கவனமாக இருப்பது அவசியம். அஷ்டம சூரியன், பத்தில் குரு என இருப்பது சங்கடங்களை தரும், சோதனைகளை சந்திப்பீர்கள். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. எதைப்பற்றியும் கவலைப்படாதீங்க. உங்க வேலையில கவனம் செலுத்துங்கள். மேலதிகாரிகளுடன் கவனமாக இருங்கள். பணம், பொருட்கள் விசயங்களில் கவனம் தேவை.

 உடல் நல பாதிப்புகள்

உடல் நல பாதிப்புகள்

விரைய செலவுகள் அதிகம் வருவதால் பணத்தை எதற்கும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். எட்டாம் அதிபதி புதன் எட்டில் வலுவாக ஆட்சி உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். திடீர் அதிர்ஷ்டங்கள் பணவரவு கிடைக்கும். ஜாதகம் வலுவாக இருந்தால் நன்மைகள் நடக்கும்.
சளித்தொந்தரவு தலைவலி பிரச்சினைகள் வரலாம். உணவுகளில் கவனம் வைப்பது அவசியம். காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம். அதிகம் ரிஸ்க் என்று தெரிந்தால் முடியாது என்று சொல்லி விடுவது நல்லது. நல்ல நண்பர்கள், பெற்றோர்கள் மூத்தவர்கள் சொல்வதை கேளுங்கள் நல்லது நடக்கும்.

 பரிகாரங்கள்

பரிகாரங்கள்

சனி செவ்வாய் பார்வை ஏற்படுகிறது. திருமணம், வேலை போன்ற சுப காரியங்கள் செயல்பட விடாமல் தடுக்கும். மாத பிற்பகுதியில் சுக்கிரன் வலுவடைகிறார். ஒன்பதாம் வீடான துலாம் ராசிக்குள் புதன் சுக்கிரன் இணைவது உற்சாகத்தை தரும். குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்தும்.
சிலருக்கு பணத்தட்டுபாடு தீரும். புரட்டாசியில் கவனமாக இருங்க ஐப்பசியில் குருப்பெயர்ச்சி அற்புதமான பலன்களை தரும். இளம் வயதுக்காரர்கள் அதிக எச்சரிக்கையோடு இருங்கள். குல தெய்வ வழிபாடுக்கு முக்கியத்துவம் கொடுங்க. ராம நாமம் ஜெபிக்கணும். ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய் வணங்குங்கள்.

 பேச்சில் கவனம்

பேச்சில் கவனம்

சனி பத்தில் கேது உடன் இருக்கிறார். வேலை செய்யும் இடத்தில் தொய்வாக இருக்கும். ஏழாம் வீட்டில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் என சஞ்சரிக்கின்றனர். இந்த கிரகங்கள் மாத பிற்பகுதியில் எட்டாம் வீட்டில் புதன், சுக்கிரன் இணைகின்றனர். ஏழாம் வீட்டில் செவ்வாய் சூரியன் இருப்பதால் தேவையில்லாத எரிச்சல் கோபம் வரும். செவ்வாய் சனி பார்வைகள் சங்கடங்களை ஏற்படுத்தும். வாக்கு நிதானம் தேவை. பேச்சில் கவனம் இல்லாவிட்டால் பிரச்சினைகள் அதிகமாகும். உடம்பில் ஒரு சோம்பேறித்தனம் இருந்து கொண்டே இருக்கும்.

 நான்கு கிரகங்கள் பார்வை

நான்கு கிரகங்கள் பார்வை

புரட்டாசி மாதம் ஏழாம் வீடான களத்திர வீடான கன்னி ராசியில் சூரியன், சுக்கிரன், புதனோடு சஞ்சரிக்கிறார். செவ்வாயும் இந்த கிரகங்களுடன் இணைகிறார். உங்க ராசியை நான்கு கிரகங்கள் நேரடியாக பார்க்கின்றனர். கணவன் மனைவியால் சாதக பாதகங்கள் இருந்தாலும் சின்ன பிரச்சினைகள் வரும். இந்த கால கட்டத்தில் தொழில் பார்ட்னர்களால் ஆதாயம் சின்னச் சின்ன சண்டைகள் வரும். குரு ஒன்பதாம் வீட்டில் இருந்து அவர் நல்லது செய்ய நினைத்தாலும் பிற கிரகங்கள் நமக்கு நல்லது செய்ய நினைக்கலை. எனவே கவனமாக இருங்க. நிதானமாக இருங்க நல்லது நடக்கும்.

 உடல்நிலையில் அக்கறை

உடல்நிலையில் அக்கறை

குடும்ப விசயத்தில் கவனமாக இருங்க. கணவன் மனைவி சின்ன சண்டைகள் கூட பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு வேண்டாம். இல்லத்தரசியின் உடம்பில் கவனம் வையுங்க. காதல் விசயத்தில் அடுத்தவரை தலையிட விட வேண்டாம். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும் மாதம். உடம்பில் பிரச்சினை இருப்பதால் மன அழுத்தங்களை ஏற்படுத்தும். குருவின் அனுகூலத்தினால் நன்மைகள் நடைபெறும். புதிய வண்டி வாகனங்கள் வாங்க நல்ல நேரம் கூடி வருகிறது.

 எச்சரிக்கை தேவை

எச்சரிக்கை தேவை

பயணங்களால் லாபம் வரும். கடல் கடந்த பயணம் செல்வீர்கள். உடமைகள் பணத்தில் பத்திரம். எதையும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள். குடும்ப விசயத்தில் விட்டுக்கொடுங்க. யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். பொறுமையும் நிதானமும் வேண்டும். வெற்றிகள் தேடி வரும்.
திருமண முயற்சிகள் கைகூடி வரும். உங்க ராசியில் நீசமடையும் புதன் ஏழாம் பாவத்தில் உச்சம் பெற்று வலுவடைகிறார். விநாயகரை வழிபடுங்கள். வியாழக்கிழமை வியாழ ஹோரையில் விளக்கேற்றி வழிபடுங்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட பிரச்சினைகள் தீரும். துளசி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்ப்பது நன்மை தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+