புரட்டாசி மாத ராசிபலன்கள் 2019: மேஷம் உடம்பை கொஞ்சம் கவனிங்க
புரட்டாசி மாதம் கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். ஆறாவது ராசியில் கிரகங்கள் கூட்டணி சேருகின்றன. புரட்டாசி மாதத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
சென்னை: புரட்டாசி மாதம் தெய்வீக அருள் நிறைந்த மாதம் நவராத்திரி பண்டிகைகள் களை கட்டும். மஹாளய பட்சமும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் சூரியன், புதன், சுக்கிரன் செவ்வாய் கன்னி ராசியில் சஞ்சரிக்கின்றன. மாத மத்தியில் சுக்கிரன், புதன் துலாம் ராசிக்கு நகர்கின்றன. மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி, கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொருத்து மேஷம் ராசிக்காரர்களுக்கு பலன்களைப் பார்க்கலாம்.
சனி பகவான் புரட்டாசி 1 ஆம் தேதி முதல் வக்ர காலம் முடிந்து நேர் கதியில் பயணிக்கிறார். 8ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசிக்கு நகர்கிறார். 12ஆம் தேதி துலாம் ராசிக்கு புதன் நகர்கிறார். நீசமடைந்திருந்த புதன் 16ஆம் தேதி முதல் தனது ராசியான துலாமில் ஆட்சி பெற்று புதனுடன் இணைகிறார்.
மேஷம் ராசிக்காரர்களுக்கு ஆறாவது வீட்டில் கிரகங்கள் கூட்டணி சேருவது சுமாரான அமைப்புதான். சுக்கிரனும் புதனும் புரட்டாசி 12ஆம் தேதிக்கு மேல் துலாம் ராசியான ஏழாவது வீட்டிற்கு நகர்கின்றனர். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய மாதம் இது.

பரணியில் பிறக்கும் மாதம்
புரட்டாசி மாதம் கன்னி மாதம். உங்க ராசிக்கு ஆறாவது வீட்டில் கிரகங்கள் இணைவது அவ்வளவு சிறப்பானதல்ல. புரட்டாசி பிறக்கும் போதே மஹாபரணியில் பிறக்கிறது பெரிய விசயம். மூத்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுங்க. ராகு மூன்றாம் வீட்டில் இருப்பதால் முயற்சிகளில் வெற்றி பிறக்கும். ராகு வெற்றிகளை தேடித்தருவார்.

கால் வழி பிரச்சினை
சூரியன் ஆறாம் வீட்டில் இருப்பதால் செவ்வாய் இணைகிறார். அரசு வழியில் செலவுகள் அதிகரிக்கும். வரிகள் கட்டவேண்டிய பாக்கி இருந்தால் கட்டி விடுங்கள். படிப்பில் பிரச்சினை வராது. உடல் ரீதியான பிரச்சினைகள் வரும். நரம்பு தொடர்பான பிரச்சினைகள் வரும் காரணம் செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை தொடர்ச்சிதான். உடம்பை கொஞ்சம் சூடாகாவே வச்சுக்கங்க. குளிர்ச்சி ஒத்துக்காதுங்க. உடம்புல வலி அதிகமாகும். கால்வழி, பாத வலியை கவனிங்க.

ஆட்சி பெறும் சுக்கிரன்
சூரியன் செவ்வாய் ஆறாம் வீட்டில் இணைவதால் வண்டி வாகனங்களில் கவனம் தேவை. முதலீடுகளில் விழிப்புணர்வு அவசியம். மாத பிற்பகுதியில் ஏழாம் வீடான துலாமில் புதன் அமரும் போது கூடவே 16ஆம் தேதிக்கு மேல் சுக்கிரனும் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு. நல்ல விசயங்கள் தேடி வரும். கணவன் மனைவி உறவு பலப்படும். ரொமான்ஸ் உணர்வு அதிகரிக்கும். ஒன்பதாம் வீட்டில் இருக்கும் சனி கேது ராகுவை பார்ப்பதால் சில பாதிப்புகள் வரும். சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சில தடைகளை ஏற்படுத்தும்.

அஷ்டம குரு
ஆறாம் வீட்டில் கிரகங்கள் சஞ்சாரம் அஷ்டம குருவினால் இந்த மாதம் சுமாரான பலன்களே ஏற்படும். சாப்பாட்டு விசயத்தில கவனம் தேவை. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்க- கண் பிரச்சினைகள் உடனே கவனிங்க. பாக்ய சனியின் பார்வை ஆறாம் வீட்டில் இருக்கும் கன்னி ராசியில் உள்ள கிரகங்கள் மீது விழுவதால் .புதிய வேலைகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய தெம்புகள் உற்சாகத்தை கொடுக்கும். வியாபாரத்தில் கவனமாக இருங்க. அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். கலைத்துறையினருக்கு சுமார்தான. கொடுத்த கடன் திரும்ப வருவது சிரமம். பாதிப்புகள் குறைய புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருக்கவும்.
-
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications