Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புரட்டாசி மாத ராசிபலன்கள் 2019: மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு புரமோசன் கிடைக்கும்

புரட்டாசி மாதம் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார் கூடவே புதனும், சுக்கிரன், செவ்வாய் என கிரகங்கள் கூட்டணி சேருகின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் மிதுனம்,கடகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்பட

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    13-09-2019 | இன்றைய ராசிபலன்-வீடியோ

    சென்னை: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். காரணம் கன்னி ராசி புதன் உச்சம் பெரும் ராசி. அந்த ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் சூரியனுடன், சுக்கிரன், புதன், கூடவே செவ்வாயும் கூட்டணி சேருகின்றனர். இந்த கிரகங்களின் கூட்டணியால் பல ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் ஏற்படும். புரட்டாசி பிறக்கும் போது மேஷத்தில் சந்திரன், மிதுனத்தில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,புதன், சுக்கிரன். சிம்மம் ராசியில் செவ்வாய், விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி கேது முதல்நாளில் சனி பகவான் வக்ரம் முடிந்து நேர்கதியில் இயங்குகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு என்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.

    புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். நவராத்திரி பண்டிகை, மகாஹய பட்சம் கடைபிடிக்கப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இந்த ஆண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும்.

    புரட்டாசியில் கிரகங்களின் மாற்றம் உள்ளது. சிம்மம் ராசியில் இருக்கும் செவ்வாய் புரட்டாசி 8ஆம் தேதி கன்னி ராசிக்கு நகர்கிறார். 12 ஆம் புதன் துலாம் ராசிக்கும், சுக்கிரன் 16ஆம் தேதி துலாம் ராசிக்கு நகர்ந்து புதனுடன் கூட்டணி சேருகிறார். சனி பகவான் வக்ரம் முடிந்து நேர்கதியில் இயங்கத்தொடங்குகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்களைத் தரப்போகிறார்.

    நான்கில் 4 கிரகங்கள் கூட்டணி

    நான்கில் 4 கிரகங்கள் கூட்டணி

    மாத தொடக்கத்தில் நான்காம் வீட்டில் ராசி நாதன் புதன் உச்சம் பெற்றிருக்க, சூரியன், சுக்கிரன், செவ்வாய் இணைந்திருப்பது நன்மை தரும் அமைப்புதான். இந்த மாதம் அதிகம் கெடுதல் எதுவும் நடக்காது. புத்திசாலித்தனம் அதிகம் ஜெயிக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்துவிட்டு செய்யுங்கள். கண்டச்சனி கவலையை ஏற்படுத்தும். ராசியில் உள்ள ராகுவை கேதுவும் சனியும் பார்வையிடுகிறார்,

    உடல்நலத்தில் அக்கறை

    உடல்நலத்தில் அக்கறை

    ராகுவால் மருத்துவ செலவு இருக்கும். உடம்பு ஒத்துழைக்காது. சின்னச் சின்ன பாதிப்புகள் இருக்கும் சோம்பேறித்தனமாக இருக்கும். உடல்ரீதியான பிரச்சினைகள் வரும். அலுவலகத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும் மேலதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படும். வளைந்து கொடுத்து வேலை செய்யுங்கள். வேறு இடம் போவதற்கு நேரம் வரும் அதுவரை காத்திருங்கள். இந்த மாதம் தொழிலில் லாபம் கிடைக்கும். வீடு மனை வாங்க கை கூடும்.

    கணவன் மனைவி பிரச்சினை

    கணவன் மனைவி பிரச்சினை

    சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். ஏழாம் வீட்டில் உள்ள சனி வேலையை கொடுப்பார். புதிய வேலையில் தைரியமாக சேருங்கள். நல்லதே நடக்கும். மாணவர்களுக்கு படிப்பு உற்சாகத்தை தரும். சூரியன் செவ்வாய் சேரும் போது முகத்தில் சில பிரச்சினைகள் ஏற்படும். கணவன் மனைவி உறவு சண்டை சச்சரவுகள் வரலாம் அமைதியாக போங்க விட்டுக்கொடுத்துப்போனால் விரிசல்கள் வராது. சனிபகவானின் பாதிப்புகள் குறைந்து அன்பும் அருளும் கிடைக்க புதன்கிழமை பெருமாளை வணங்கவும் ஆறாம் வீட்டில் உள்ள குரு குடும்பத்தில் சில பிரச்சினைகளை தருவார்.

    வெற்றிகரமான மாதம்

    வெற்றிகரமான மாதம்

    குரு பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறார். வெற்றிகரமான மாதமாக அமையும். மூன்றாம் வீட்டில் கிரகங்கள் கூட்டணி அற்புதமாக உள்ளது.
    இரண்டாம் அதிபதி சூரியன் மூன்றாம் வீட்டில் கிரகங்களுடன் சேருகிறார். குரு ஐந்தாம் வீட்டில் இருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடக ராசிக்காரர்களுக்கு நிறைய நல்லது நடக்கும். புதிய முயற்சிகளுக்கு பலன்கள் கிடைக்கும்.

    கடனை ஒத்திவையுங்கள்

    கடனை ஒத்திவையுங்கள்

    இந்த மாதம் மத்தியில் கிரக மாற்றங்களினால் பல புதிய முயற்சிகள் கைகூடி வரும். கடன் வாங்க வேண்டாம். அப்படியே கடன் வாங்கியே ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள் ஒத்திவைக்கவும். வீடு மனை வாங்கும் போது யோசித்து வாங்குங்கள். அதேபோல வீட்டிற்குத் தேவையான பொருட்களை புதிதாக இந்த மாதம் வாங்க வேண்டாம். மூன்றாம் வீட்டில் புதன் இருப்பதால் எழுத்தாளர்களுக்கு முயற்சிகள் வெற்றியடையும். கூட்டுத்தொழில் சுயதொழில் வெற்றியடையும். வாடிக்கையாளர்களால் லாபம் வரும்.

    வேலையில் உற்சாகம்

    வேலையில் உற்சாகம்

    அரசு உத்யோகஸ்தர்களுக்கு நிறைய நல்ல பலன்கள் கிடைக்கும். வேலையில் உற்சாகமாக இருப்பீர்கள். புரமோசன் கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரகாரர்களுக்கு திருமணம் அற்புதமாக கூடி வரும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கைகூடி வரும். சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். அரசியல்வாதிகளுக்கு அற்புதமான காலம், சகோதரர்களின் ஒற்றுமை அதிகரிக்கும். பேச்சுவார்த்தைகள் சுமூகமாக இருக்கும்

    மனைவி வழியில் வருமானம்

    மனைவி வழியில் வருமானம்

    இந்த மாதம் சொத்துப்பிரச்சினைகள் சரியாகும் வருமானம் வரும். கணவன் மனைவி இடையே உறவு சிறப்பாக இருக்கும் மனைவி மூலம் திடீர் வருமானம் வரும். தொழில் தொடங்கினாலும் நன்மைகள் நடக்கும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். குல தெய்வத்தை தரிசனம் செய்வீர்கள். குழந்தைகளுக்கு கல்வி சிறப்பாக இருக்கும். சில பிள்ளைகள் வேலைக்காக வெளியூர் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+