Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புரட்டாசி மாத ராசிபலன்கள் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு கெட்டிமேளச்சத்தம் கேட்கும்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் கிரகங்களின் கூட்டணி கன்னி ராசியில் இணைகிறது. ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் எப்படியிருக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். காரணம் கன்னி ராசி புதன் உச்சம் பெரும் ராசி. அந்த ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் சூரியனுடன், சுக்கிரன், புதன், கூடவே செவ்வாயும் கூட்டணி சேருகின்றனர். இந்த கிரகங்களின் கூட்டணியால் பல ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் ஏற்படும். புரட்டாசி பிறக்கும் போது மேஷத்தில் சந்திரன், மிதுனத்தில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,புதன், சுக்கிரன். சிம்மம் ராசியில் செவ்வாய், விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி கேது முதல்நாளில் சனி பகவான் வக்ரம் முடிந்து நேர்கதியில் இயங்குகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு என்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.

புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். நவராத்திரி பண்டிகை, மகாஹய பட்சம் கடைபிடிக்கப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இந்த ஆண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும்.

புரட்டாசியில் கிரகங்களின் மாற்றம் உள்ளது. சிம்மம் ராசியில் இருக்கும் செவ்வாய் புரட்டாசி 8ஆம் தேதி கன்னி ராசிக்கு நகர்கிறார். 12 ஆம் புதன் துலாம் ராசிக்கும், சுக்கிரன் 16ஆம் தேதி துலாம் ராசிக்கு நகர்ந்து புதனுடன் கூட்டணி சேருகிறார். புரட்டாசி மாதம் ரிஷபம் ராசிக்கு ஐந்தாம் வீடான கன்னி ராசியில் சூரியன்,புதன், சுக்கிரன் இணைந்துள்ளன. நான்காம் வீட்டில் இருக்கும் செவ்வாய் ஐந்தாம் வீட்டிற்கு நகர்கிறார். மாத பிற்பகுதியில் ஆறாம் வீட்டிற்கு நகரும் புதன், சுக்கிரனால் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும். சனி வக்ரம் முடிந்து நேர்கதியில் இயங்கத்தொடங்குகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்களை தரும் என்று பார்க்கலாம்.

அற்புதமான மாதம்

அற்புதமான மாதம்

ஐந்தாம் அதிபதி ஐந்தில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளதால் நல்ல காரியங்கள் அற்புதமாக நடக்கும். உங்க ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்ற ஐந்தாம் அதிபதியுடன் இணைந்து நீசபங்க ராஜயோக அமைப்பை பெற்றுள்ளதால் உங்களுக்கு திடீர் வருமானங்கள் கிடைக்கும். பெண்களுக்கு அற்புதமாக இருக்கும். சந்திரன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். முதல்வாரத்தில் உங்க ராசியிலேயே சந்திரன் உச்சம் பெறுகிறார்.

சுப நிகழ்ச்சிகள் கைகூடும்

சுப நிகழ்ச்சிகள் கைகூடும்

அலுவலகத்தில் நல்ல பேரும் புகழும் கிடைக்கும். கடன் வாங்க வேண்டாம். கணவன் மனைவி பிரச்சினைகள் தீரும், திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம், தொழில் சார்ந்த பேச்சுவார்த்தைகள் நன்மையில் முடியும். சந்திரன், சனி, கேது, இணையும் சந்திராஷ்டம நேரத்தில் உடல் நல பாதிப்பு மன நல பாதிப்பு ஏற்படும். பெண்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. பலம்வாய்ந்த பெண்களாக இருந்தால் முடியாத காரியங்கள் கூட முடியும்.

படிப்பில் கவனம்

படிப்பில் கவனம்

உங்க ராசி நாதன் சுக்கிரன் துலாமில் ஆட்சி பெற்று அமர்கிறார். கன்னி ராசியில் நீச நிலையில் இருந்து நகர்ந்து ஆறாம் வீட்டில் மறைகிறார். குரு பார்வை கோடி புண்ணியம். படிப்பில் நல்ல கவனத்தை ஏற்படுத்துவார். மாணவர்கள் அற்புதமாக படிப்பார்கள். ஆறாம் வீட்டில் சுக்கிரன் அமர்கிறார். படிப்பில் கவனம் செலுத்தவும்.

அம்மன் கோவிலில் தரிசனம்

அம்மன் கோவிலில் தரிசனம்

சுப செய்திகள் தேடி வரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு தடைகள் நீங்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். புதிதாக யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். புதன் சுக்கிரன் ஆறாம் வீட்டில் மறைவதால் குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரும் கவனம் தேவை. வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம். அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நன்மை அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடு செய்யவும். வெள்ளிக்கிழமை வெள்ளைப்பூக்களால் அம்மனுக்கு அர்ச்சனை செய்யலாம் நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+