Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புரட்டாசி மாத ராசிபலன்கள் 2019: சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு புது வேலை கிடைக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். காரணம் கன்னி ராசி புதன் உச்சம் பெரும் ராசி. அந்த ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் சூரியனுடன், சுக்கிரன், புதன், கூடவே செவ்வாயும் கூட்டணி சேருகின்றனர். இந்த கிரகங்களின் கூட்டணியால் பல ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் ஏற்படும். புரட்டாசி பிறக்கும் போது மேஷத்தில் சந்திரன், மிதுனத்தில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,புதன், சுக்கிரன். சிம்மம் ராசியில் செவ்வாய், விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மாதத்தின் முதல்நாளில் சனி பகவான் வக்ரம் முடிந்து நேர்கதியில் இயங்குகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.

புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். நவராத்திரி பண்டிகை, மகாஹய பட்சம் கடைபிடிக்கப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இந்த ஆண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும்.

புரட்டாசியில் கிரகங்களின் மாற்றம் உள்ளது. சிம்மம் ராசியில் இருக்கும் செவ்வாய் பகவான் புரட்டாசி 8ஆம் தேதி கன்னி ராசிக்கு நகர்கிறார். 12 ஆம் புதன் துலாம் ராசிக்கும், சுக்கிரன் 16ஆம் தேதி துலாம் ராசிக்கு நகர்ந்து புதனுடன் கூட்டணி சேருகிறார். சனி பகவான் வக்ரம் முடிந்து நேர்கதியில் இயங்கத்தொடங்குகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் கன்னி, சிம்மம் ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்களைத் தரப்போகிறார்.

பணவரவு தாராளம்

பணவரவு தாராளம்

சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்க ராசி நாதன் இரண்டாம் வீட்டில் ஆட்சி உச்சம் பெற்ற புதன், நீசபங்கம் பெற்ற சுக்கிரனுடன் சேர்ந்து இருக்கிறார். பணவரவு அற்புதமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். உங்க வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும் சுப காரியங்கள் நடக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தைகள் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகளால் நன்மைகள் நடக்கும்.

உடல் நலத்தில் அக்கறை

உடல் நலத்தில் அக்கறை

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதி அற்புதமாக உள்ளது. காரணம் கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணி அப்படி உள்ளது. சோதனைகள் பல கடந்து விட்டீர்கள். இனி எல்லாம் நல்லதாகவே அமையும். செய்யும் தொழிலில் சில கஷ்டங்கள் இருந்தது. தோல் நோய்கள் இருந்தது. இனி பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. கண் கோளாறுகள் வர வாய்ப்பு உள்ளது. டாக்டரை பாருங்க சூரிய நமஸ்காரம் பண்ணுங்க.

மாணவர்கள் உற்சாகம்

மாணவர்கள் உற்சாகம்

உங்க ராசியில் உள்ள செவ்வாய் எட்டாம் தேதி இரண்டாம் வீட்டிற்கு வருகிறார். முன்கோபம் ஏற்படும் கோபத்தை குறைங்க. இரண்டாவது வீட்டில் சூரியன் புதனோடு இணைந்து புத ஆதித்ய யோகம் உள்ளது. கல்வி நிலையில் சிறப்பை தரும். தொழில் சார்ந்த கல்வி படிப்பவர்களுக்கும், அரசு வேலைக்காக படிப்பவர்களுக்கு நன்மை நடைபெறும். வெளிநாடு யோகம் தரும். கல்வியில் கவனமாக இருப்பது அவசியம். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

தொழில் வியாபாரம் லாபம்

தொழில் வியாபாரம் லாபம்

திருமண பேச்சுவார்த்தைகள் நன்மையில் முடியும். குலதெய்வ கோவிலுக்கும் இஷ்ட தெய்வ கோவிலுக்கும் சென்று வாருங்கள். வேலையில் மாற்றம் ஏற்படும் கண்டிப்பாக கிடைக்கும். வியாபாரிகள், தொழில் செய்பவர்களுக்கு நல்லதே நடக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.நல்ல மாதம் இது.

கன்னி

கன்னி

கன்னி ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிக்கின்றனர். விரைய ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் மாத முற்பகுதிலேயே ராசியில் இணைகிறார். கோபத்தை கட்டுப்படுத்தவும். உங்க ராசிக்கு கேந்திர ஸ்தானங்களில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. பத்தில் ராகு, நான்கில் சனி கேது, ராசியில் சூரியன், சுக்கிரன்,புதன் என கன்னி ராசி கேந்திர பலம் பெற்றிருப்பது நன்மையும் மாற்றங்களும் நடைபெறும். நல்ல நேரம் பிறந்து விட்டது.

புதிய வேலைகள்

புதிய வேலைகள்

திருமணம் ஆகாமல் இருக்கும் இளைஞர்கள் கன்னிப்பெண்களுக்கு திருமணம் நடைபெறும். மாத பிற்பகுதியில் கிரகங்கள் இரண்டாம் வீட்டிற்கு நகர்கின்றன. சனிபகவான் உங்க ராசியை பார்க்கிறார். சில தடைகள், தாமதங்களை ஏற்படுத்துவார். குரு மூன்றாம் வீட்டில் இருப்பதால் செய்யும் முயற்சிகள் தோல்வியடையும். உங்களுக்கு வேலைக்காக செய்யும் முயற்சிகளில் தடைகள் தாமதங்கள் ஏற்படும். நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலமாக சில நல்ல விசயங்கள் நடக்கும்.

பெண்களால் பெண்களுக்கு நல்ல விசயங்கள் நடைபெறும். மாத பிற்பகுதியில் சுக்கிரன் உடன் செவ்வாய் இணைவதால் அன்னிய ஆண்களை நம்ப வேண்டாம். அரசு வேலைகள் முயற்சி செய்தால் கண்டிப்பாக கிடைக்கும். மனதை தளரவிட வேண்டாம். திருமணமாகி குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக புத்திரபாக்கியம் கிடைக்கும். தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு அரியர் எழுதி பாஸ் செய்யலாம். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+