Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புரட்டாசி மாத ராசிபலன்கள் 2021: மிதுன ராசிக்காரர்களே புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும்

கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் புரட்டாசி மாதத்தில் கிரகங்களின் கூட்டணி சஞ்சாரம் பார்வைகளால் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும் மாதமாக அமைந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பண்டிகைகள் நிறைந்த புரட்டாசி மாதத்தில் நவகிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும் வெற்றிகரமான மாதமாக அமைந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்வதால் கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. கன்னி ராசி புதன் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் இந்த மாதத்தில் சூரியன் இணைந்து பயணம் செய்வது சிறப்பு இந்த மாதத்தில் சூரியன், புதன் உடன் கூடவே செவ்வாயும் கூட்டணி அமைத்து பயணம் செய்கிறார்.

புரட்டாசி பிறக்கும் போது ரிஷபத்தில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,புதன், செவ்வாய், துலாம் ராசியில் சுக்கிரன், விருச்சிகத்தில் கேது, மகர ராசியில் சனி, குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. புரட்டாசியில் கிரகங்களின் மாற்றம் உள்ளது. கன்னி ராசியில் இருக்கும் புதன் புரட்டாசி 6 ஆம் தேதி துலாம் ராசிக்கு நகர்கிறார். 11ஆம் தேதி புதன் வக்ர ஆரம்பமாகிறது. 15ஆம் தேதி மீண்டும் கன்னி ராசிக்கு புதன் செல்கிறார். சுக்கிரன் 16ஆம் தேதி விருச்சிக ராசிக்கு செல்கிறார். 25 ஆம் தேதி சனிபகவான் வக்ரம் முடிந்து நேர்கதியில் பயணம் செய்கிறார்.

புரட்டாசி மாதம் முழுக்க விரத நாட்கள்தான். முன்னோர்களை வணங்கும் மாதம். அம்மனுக்காக நவராத்திரி பண்டிகை கொண்டாடும் மாதம். 17-09-2020 முதல் 16-10-2020 வரை புரட்டாசி மாதத்தில் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்பது பற்றியும் சந்திராஷ்டம நாட்களையும் பார்க்கலாம்.

Purattasi matha Rasi Palan 2021 Tamil: Mithunam rasi purattasi month palan

புதன் ஆதிக்கம் பெற்ற மிதுன ராசிக்காரர்களே, புரட்டாசி மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி உங்களுக்கு அற்புதமாக அமைந்துள்ளது. ராசிநாதன் புதன் இந்த மாதம் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். சூரியனும் நான்காம் வீட்டில் செவ்வாய் உடன் பயணம் செய்கிறார். சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். ஆறாம் வீட்டில் கேது விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றனர். அஷ்டம சனி அஷ்டம குரு உடன் மாதத்தின் முதல்நாளில் சந்திரன் சேர்ந்திருக்கிறார். சந்திராஷ்டம தினத்தோடு மாதம் பிறக்கிறது.

இந்த மாத முற்பகுதியில் சுக்கிரன் பயணம் ராகு உடன் இணைகிறார். நல்ல விசயங்கள் பல தேடி வரும். நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொண்டு வேலையைத் தொடருங்கள். நான்காம் வீட்டில் கிரகங்கள் இணைந்து வலு உடன் பயணம் செய்வது சிறப்பு. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பண வரவு அதிகம் வந்தாலும் செலவுகளும் தேடி வரும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை. இடமாற்றம் ஏற்படும். வேலையில் கவனம் தேவை.

திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் வரன் பார்க்க ஆரம்பிக்கலாம். முடிவு எடுப்பதை தள்ளி வைக்கவும். அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். கார்த்திகை மாதம் குரு பெயர்ச்சி நிகழ்ந்த பின்னர் வரன் பேசி முடிக்கலாம். ஒருமுறைக்கு இருமுறை பேசி ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. சாதனைகள் பல புரியப்போகிறீர்கள்.

ஆறாம் வீட்டில் சுக்கிரன் கேது சேர்க்கையால் புதிய பிரச்சினைகள் வந்தால் அதை பேசி முடிவு செய்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நோய்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலையிழந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் தேடி வரும். தொழில் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். விரைய ராகு, அஷ்டம சனி, குருவினால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தோல் தொடர்பான நோய்கள் வரும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு சொந்த ஊர் செல்வதற்கான நேரம் கை கூடி வந்துள்ளது. சந்திராஷ்டம நாட்களில் வண்டி வாகனங்களில் செலவு வரும். இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். சனிப்பிரதோஷ நாளில் வீட்டில் விளக்கேற்றி சிவபெருமானை வழிபடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினை நீங்க புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து தன்வந்திரி பகவானை வணங்குவது பாதிப்புகள் நீங்கி நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+