Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தாண்டு 2025: சனியை விடுங்க.. ராகுவால் ஏற்படவுள்ள மாற்றம்.. மீனத்துக்கு கிடைக்கும் பலன்கள் என்ன?

Subscribe to Oneindia Tamil

புத்தாண்டு பலன் 2025: புத்தாண்டை அதிகம் எதிர்பார்ப்பது மீனம். ஏற்கனவே படாத பாடு பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஜென்ம சனி வரப்போவதால் பயம் அதிகமாக இருக்கும். சனி மட்டுமல்லாமல் குரு, ராகு, கேது கிரகங்களிலும் மாற்றம் நிகழப் போகிறது. இது மீனம் ராசிக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என இங்கு விரிவாக காணலாம்... (new year rasi palan for Meenam)

கடந்த மூன்று வருடங்களில் மீனம் ராசி வாழ்க்கையில் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்திருப்பார்கள். ஏழரை சனியுடன் ஜென்மத்தில் இருந்த ராகு இயக்கத்தை முடக்கியிருப்பார். ராசிநாதனான குரு மூன்றாவது இடத்தில் மறைந்ததும் சங்கடங்களை ஏற்படுத்தியிருக்கும். பயம், பதற்றம் அதிகமாக இருந்திருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருந்திருக்காது. மீனத்துக்கு பெரியளவு அழுத்தம் கொடுத்த ராகு 2025 ஜென்மத்தில் வெளியில் செல்கிறார். இதனால் மனச்சங்கடங்கள் நீங்கும். (Puthandu rasi palan for Meenam)

2025 newyear rasi palan astrology 2025

இருப்பினும் மார்ச் மாதம் சனிப்பெயர்ச்சியில் சனி ஜென்மத்துக்கு வருகிறதே என்ற பயம் இருக்கலாம். மறுபக்கம் ராகு வெளியேறுவதால் மீன ராசிக்காரர்கள் பெரியளவு பயப்பட வேண்டியதில்லை. ராகு வெளியேறுவது, உங்கள் வாழ்வில் படர்ந்திருந்த இருள் நீங்கி வெளிச்சம் பிறக்கப் போகிறது. நினைத்த விஷயங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். உறவுகள்மத்தியில் உங்கள் செல்வாக்கு கூடும். வாக்குஸ்தானம் பலமடையும். (2025 Sanipeyarchi for Meenam)

மூன்றாவது இடத்தில் இருந்த குரு உடன்பிறந்தவர்களை கூட எதிரியாக மாற்றியிருக்கும். அந்தப் பிரச்னைகள் எல்லாமே மாறும். தன்னம்பிக்கை, விடாமுயற்சி அதிகரிக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் தேடி வருவார்கள். உங்களுக்கு எதிராக நின்றவர்கள் உடன் சேர்ந்து பயணிப்பார்கள். இடம், வீடு மாற்றம் நிச்சயம் அமையும். வாகன மாற்றம் நிச்சயம் நடைபெறும். புதிதாக வீடு கட்ட நினைப்பவர்களின் ஆசை நிறைவேறும். இழந்தப் பதவி திரும்பி வரும்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்கள் விலகி முன்னேற்றம் கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். அம்மாவின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பு அமையும் கடன் நெருக்கடியில் தீர்வு கிடைக்கும். ஏழாவது இடத்தில் இருந்த கேது, ஆறாவது இடத்துக்கு வருகிறார். இது குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்னைகளை நீக்கும். கணவன் - மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள் இணைவார்கள். காதல் கைக்கூடும்.

சொத்து பத்து, வங்கிக் கடன், கொடுக்கல் வழக்கல் மற்றும் வழக்குகளில் சாதகமான அம்சம் உருவாகும். சுப விரயம் நடக்கும். அப்பா வழி உறவில் இருந்த பிரச்னைகள் தீரும். 2025 மார்ச் மாதத்துக்கு பிறகு உங்கள் பெயர், புகழ் அதிகரிக்கும். உங்களை உதாசீனப்படுத்தியவர்களே அரியணையில் அமர வைப்பார்கள். அரசுப்பணி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வெற்றிகரமான வருடமாக இருக்கும். எதிர்பாராத மாற்றம், உயர்வு தானாக அமையும். பத்தாவது இடத்தை குரு நேரடியாக பார்ப்பதால் திரைத்துறை, ரியல் எஸ்டேட் துறைகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பெயர், பதவி, பட்டம் என விரும்பிய அனைத்தும் தேடி வரும். தொட்டது துலங்கும்.

கவனம்: ஏழரை சனி இருப்பதால் பொறுமை, நிதானம், அமைதி அவசியம். எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக உடலையும், மனதையும் பார்த்துக் கொள்ள வேண்டும். யாரையும் நம்பக் கூடாது. ரத்தநாளம், எலும்பு மற்றும் நரம்பு சம்மந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பரத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். சூது உள்ளிட்ட தேவையற்ற விஷயத்தில் இறங்க வேண்டாம்.

மாணவர்கள்: மாணவர்களின் மந்தத் தன்மை விலகும். கடந்த காலங்களில் செய்த முயற்சிகள் கைக்கொடுத்திருக்காது. அந்த முயற்சிகள் இப்போது அணுகூலமாகும். விரும்பிய வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

பெண்கள்: கடந்த காலங்களில் எதிலும் தடை ஏற்பட்டு உங்களை புலம்ப வைத்திருக்கும். புதிய நம்பிக்கையுடன் செயல்பட்டு எதிலும் வெற்றி பெறுவீர்கள். புதிய தொழிலை தொடங்குவதற்கு நல்ல காலம். தொழிலில் வெற்றி கிடைக்கும். இருப்பினும் புதியவர்களை நம்ப வேண்டாம். வேலை வாய்ப்பில் மாற்றம் ஏற்படும்.

பரிகாரம்: ராசியில் சனி இருப்பதால் ஆஞ்சிநேயர், சனிபகவான் வழிபடலாம். வாரத்தின் முதல் சனிக்கிழமை நவக்கிரகத்தை வழிபட்டு படையல் செய்து பிரசாதம் வழங்கலாம். முடியாத மக்களுக்கு முடிந்த தானத்தை செய்வதும் தடைகளை நீக்கி வெற்றியை கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+