ராகு கேது பெயர்ச்சி 2019: உங்க ஜாதகத்தில் ராகு இங்க இருந்தா நீங்க திடீர் கோடீஸ்வரர்தான்!
ஐம்பது வயது வரை கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவர் திடீர் என கோடீஸ்வரர் ஆக மாறிவிடுவார். இதற்குக் காரணம் அவரது ஜாதகத்தில் விபரீத ராஜயோகம், நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டிருக்கும்.
சென்னை: வாழ்க்கையில் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவருக்கு திடீர் ராஜயோகங்கள் ஏற்படும், விபரீத ராஜயோகம், நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு அதன் மூலம் திடீர் கோடீஸ்வரர் ஆகி விடுவார். ராகுவும் சிலருக்கு ராஜயோக பலன்களைத் தருவார்.
நவ கிரகங்கள் அமர்ந்து அவை பார்க்கும் வீடுகளைப் பொறுத்தும், இணைந்திருக்கும் கிரங்களைப் பொறுத்தும் ஒருவருக்கு யோகங்களும், பலன்களும், நன்மை தீமைகளும் நடைபெறும்.
பொதுவாக ராகுபகவான் பஞ்சமாதிபதி சாரம் பெற்று அந்த வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் ராஜயோக பலனை ஏற்படுத்துவார் அதேபோல் மிதுனம்,துலாம்,கும்பம் ஆகிய வீட்டில் சுயசாரம் பெற்று அந்த வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் ராஜயோக பலனை ராகு ஏற்படுத்துவார்.

ராஜயோக பலன் யாருக்க
ராகுபகவான் லக்ன கேந்திரத்தில் அமர்ந்து அந்த வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும் ராஜயோக பலனை ராகு ஏற்படுத்துவார் இந்த யோகம் ரிஷபம்,மிதுனம்,கன்னி,துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னத்திற்கு மட்டுமே ராஜயோக பலனை ஏற்படுத்துவார் மற்ற லக்னத்திற்கு பஞ்சமாதிபதி சாரம் பெற்று குருவால் பார்க்கப்பட்டால் ஓரளவு யோகத்தை ராகுபகவான் செய்வார்

ராகுவினால் யோகம்
அனைத்து கிரகங்களும் ராகு கேதுவிற்குள் அமர்ந்தால் இந்த யோகம் உண்டாகும் அதாவது ராகுபகவான் ரிஷபம்,மிதுனம்,கன்னி,துலாம் கும்பம் ஆகிய நட்பு வீடுகளில் ராகு அமர்ந்து அதற்கு அடுத்தடுத்த வீடுகளில் கிரகங்கள் அமர்ந்தால் காலசர்ப்ப யோகம் உண்டாகும் இந்த யோகம் ரிஷபம்,துலாம்,மிதுனம்,கன்னி, மகரம் கும்பம் ஆகிய லக்னகாரர்களுக்கு மட்டுமே முழுயோகத்தை செய்வார் மற்ற லக்னகாரர்களுக்கு ராகுவால் காலசர்ப்ப தோஷம் உண்டாகும்

சுக்கிரன் பார்வையால் யோகம்
ராகுபகவான் 6,8,12 இல் அமர்ந்து அந்த வீட்டின் அதிபர்கள் மாறிமாறி வீடுகளில் அமர்ந்து குரு அல்லது சுக்கிரனால் ராகுவை தொடர்பு கொண்டால் இந்த யோகம் உண்டாகும் மேலும் ராகுபகவான் சுபத்துவமடைந்து 6,8,12 ஆம் அதிபதிகள் சாரம் பெற்று குரு அல்லது சுக்கிரனால் பார்க்கப்பட்டாலும் இந்த யோகம் உண்டாகும் இந்த யோகம் அனைத்து லக்னகாரர்களுக்கும் உண்டு.

சுபர்களின் தொடர்பு
ராகுபகவான் மேஷம், சிம்மம், தனுசு, ஆகிய வீடுகளில் அமர்ந்து அந்த வீட்டின் அதிபதிகள் மாறிமாறி 6,8,12ல் அமர்ந்தாலும் ஓரளவு விபரீத யோகத்தை செய்வார் ஆனால் அந்த வீட்டின் அதிபதிகளான ராஐ கிரகங்களான சூரியன்,செவ்வாய்,குரு ஆகியோரால் சுபத்துவமடைந்து பார்க்கப்படால் விபரீத ராஜயோகம் உண்டு ஆனால் ராகுவால் ஏற்படும் விபரீத ராஜயோகங்கள் இறுதியிலே கானல்நீராக மாறிவிடும் இல்லாவிடில் தவறான வழிகளில் யோகம் வேலைசெய்யும் இதில் லக்ன திரிகோண அதிபதிகள் அல்லது லக்ன சுபர்களின் தொடர்பு ராகுபகவானிற்கு அவசியமாகும்

ராகு திசையில் ராஜ யோகம்
ஒருவருக்கு ராகு திசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும். ராகு நின்ற வீட்டதிபதியின் நிலையை கொண்டே ராகு அதன் பலனை தருவார். ராகு பகவான் பலமாக அமையப் பெற்று குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் நல்ல உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பாக இருக்க கூடிய ஆற்றல் உண்டாகும். இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை நல்ல அறிவாற்றல், புத்தி கூர்மை, ஸ்பெகுலேஷன் மூலம் தன சேர்க்கை உண்டாகும்.

பணவரவு
நடுத்தர வயதில் நடைபெற்றால் எதிர்பாராத தனசேர்க்கை, புதிய வாய்ப்புகள் தேடி வரும் அமைப்பு, எதிர்பாராத உயர்வுகள் உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் வசதி வாய்ப்புகள், எதிர்பாராத பணவசதி, தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications