Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி 2022: மேஷ ராகு துலாம் கேதுவால் யாருக்கு கோடீஸ்வர யோகம் வரும்?

ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். அதே போல கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேஷ ராகு ரிஷப கேது எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது என்று பலருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். மார்ச் 21ஆம் தேதி திங்கட்கிழமை வாக்கியப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஏப்ரல் 12ஆம் தேதி ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். அதே போல கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த இடப்பெயர்ச்சியால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.

ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். பிறந்த ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே கடந்த ஓன்றறை வருடமாக ராகு 10ஆம் வீட்டிலும். கேது 4ஆம் வீட்டிலும் பயணம் செய்கின்றனர். பொதுவாக ராகு கேதுவுக்கு 3, 6, 11,ஆகிய வீடுகளும் கேந்திர ஸ்தானமான 4, 7, 10 வீடுகளில் ராகு கேது வருவது நல்லது தான். கேது மாறி வரும் இடம் முன்றாம் பாவம் சகோதரம், வீரியம், வீரம், எழுத்தறிவு,விளையாட்டு ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். தசாபுத்தி யோகமாக இருந்தால் தலைக்கு வந்தது தலை பாகையோடு போய்விட்டது என்று ஆறுதல் படுத்திக்கொள்ளலாம். ராகு பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு வரப்போவதால் நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். நிண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த உதவிகள் வேலை வாய்ப்புகள்,வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும். வருமானம் திருப்தி தரும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறு நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினை நீங்கி ஓற்றுமை ஏற்படும். நீங்கள் நினைத்த காரியம் கை கூடும். குடும்பத்தில் சுபகாரியம் புதுமுயற்சி,திருமணம்,புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சி விடிவையும் விமோசனத்தை தந்து காசு,பணம் சம்பாத்தியம் சேமிப்பையும் அதிகரிக்கும் என்பது உறுதி

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, 3ஆம் வீட்டில் இருக்கும் கேது இப்பொழுது குடும்ப ஸ்தானமான 2ஆம் இடத்திற்கும்,9ஆம் வீட்டில் இருந்த ராகு 8ஆம் வீட்டிற்க்கும் வருகிறார்கள். எற்கனவே இருந்த இடம் யோகத்தை செய்ய வேண்டிய இடம் தான். ஜாதகத்தில் 8ஆம் இடம் என்பது கெட்ட ஸ்தானமாகும். சஞ்சலம்,ஏமாற்றம் விபத்து,பீடை,கௌரவ பங்கம்,கவலை,இழப்பு அந்த ஸ்தானத்திற்கு சுபகிரகம் வந்தால் அவற்றை வளர்ப்பார். பாவ கிரகம் வந்தால் அழிப்பார். இந்த ராகு பெயர்ச்சி யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெருமை புகழையும் தருவார். இது வரை கலங்கிய களங்கப்பட்ட வாழ்க்கை ஓளி மயமான வாழ்க்கைக்கு வழிகாட்டுவார்.ராகு சூது கிரகம் என்பதால் எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமணம் சுபகாரியம் நடக்கும். கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும்.சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம். சிலர் பிள்ளைகள் படிப்புக்கு ஊரை மாற்றலாம். பிள்ளைகள் படிப்புக்காக பிரிந்து போகலாம். தொழிலில் நிலையான தன்மை கிடைக்கும்.வருமானம் சேமிப்பு உயரும்.சிலர் வீட்டுக்கு மேல் வீடு கட்டும் வாய்ப்பு வரும். குடும்ப ஸ்தானத்திற்கு கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். உங்கள் முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். வருவது தானாக வரும். வருவது மட்டுமே வரும் என்று நினைக்கும் நீங்கள் உழைப்பை மட்டுமே நம்புவீர்கள் நல்லது நடக்கும். ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும் என்பதில் ஐயமில்லை.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இது வரை 2 ம் இடத்தில் கேதுவும் 8ஆம் இடத்தில் ராகு இருந்த நிலைமாறி ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் இடப்பெயர்ச்சியாகிறார்கள். ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம் தான். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு வரப்போவதால் புதிய தொழில் தொடங்கலாம். கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடியில் முழ்கி உழைப்பு சம்பாத்தியம் அனைத்தையும் அசலுக்கு மேல் வட்டி கட்டி சோற்றுக்கே கடனை வாங்கி நொந்து போனவர்களுக்கு புதிய தொழில் அதிக லாபத்தை தரலாம். குடும்ப கேதுவால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை நீங்கும். கருத்து வேற்றுமை மாறி ஓன்று சேரலாம்.கோர்ட்டு விவாகரத்து என்று அலைந்தவர்களுக்கு தீர்ப்பு சாதகமாக அமைந்து மறுமணம் நடக்கலாம். ராசியில் கேது கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும். புரமோசன் காரணமாக வருமானம் அதிகரிக்கும் வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்வீர்கள். சுப காரியத்திற்காக கடன் வாங்குவீர்கள். வட்டி இல்லாமல் பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். உற்றார் உறவினர் நட்பு வட்டத்தால் உதவிகளை எதிர்பார்க்கலாம். அர்த்தாஷ்டம சனியால் ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் மாற்றம் முன்னேற்றம் வரும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே இதுவரை ராசியில் கேது 7 ஆம் பாவத்தில் ராகு இருந்த நிலை மாறி 12 ஆம் பாவத்தில் கேது 6ஆம் பாவத்தில் ராகு வருகிறது. ஏழரைச் சனி முடிந்து மழை விட்டாலும் தூரல் நின்றபாடில்லை என்ற நிலை மாறும். கெட்டானை தொட்டானும் கெட்டான் என்பதை போல யாருக்கோ போக வேண்டிய பிரச்சனைகள் உங்களை சம்பந்தபடுத்தி வாட்டி வதைத்தது. தீராத குறையாக நம்பகூடாதவர்களை நம்பி விரையம் ஏமாற்றம் சஞ்சலம் வேறு. எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன் அடைப்படும் தீராத நோய் தீரும். போட்டி பொறாமை பொடிபொடியாகும். தொழில் முயற்சிகள் கை கூடும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும்.வெளிநாட்டு தொடர்புடைய உத்யோகம் கிட்டும்.பதவி உயர்வு பெற்று வருமானம் கூடும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். தேவைகள் பூர்த்தியாகும்.திருமணம் நீண்ட நாள் கனவான புத்திரசம்பத்து கிடைக்கும். மோட்ச ஸ்தானத்தில் மோட்சகாரகன் கேது வருவதால் புது முயற்சிகள் கை கூடும்.வரவு எட்டணா செலவு பத்தணா நிலை மாறி சேமிப்புகள் உயரும்.சுப தேவைகளுக்கு கடன் பட நேரிடும். நீண்ட நாள் பட்ட கடன்களும் அடையும். வண்டி வாகன மாற்றமும் வீடு மாற்றமும் சொந்த வீட்டிற்குக் குடி போகும் சந்தர்ப்பங்கள் உருவாகும். இது வரை இழுத்தடித்த கோர்ட்டு வம்பு வழக்குகள் சாதகமாகும். ராகு கேது பெயர்ச்சி யோகம் செல்வாக்கு சொத்து சுகத்தை கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+