ராகு கேது பெயர்ச்சி 2023 : அடிச்சான் பாரு லக்கி ப்ரைஸ்..கோடிகளை அள்ளித்தரும் ராகு..எப்போது தெரியுமா
சர்ப்ப கிரகங்களின் பயணத்தால் சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சிலர் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
சென்னை: ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு, கேது வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு,கேது இடம்பெறும். திடீர் அதிர்ஷ்டத்தை அள்ளித்தருபவை இந்த கிரகங்கள்தான். எம்எல்ஏவாக இருந்தவர் திடீரென முதல்வராவதும், கம்பெனியில் கணக்குப்பிள்ளையாக இருந்தவர் திடீரென முதலாளியாவதும் ராகுவினால்தான். நவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் சர்ப்ப கிரகங்கள். நிழல் கிரகங்களான இந்தக் கிரகங்கள் பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தருவதால் தான், மனிதர்கள் வாழ்வில் முன்னோக்கிச் செல்கின்றனர். ராகுவும் கேதுவும் செல்வத்தையும் செல்வாக்கையும் அள்ளித்தந்து ராஜயோக வாழ்வை வாழ வைப்பார்கள். எந்த ராசியில் ராகு நின்றால் என்ன யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

"ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி ஐந்திடத்தில்
கருநாகம் அமர்ந்து நிற்கில்
பூமேடை தனில் துயிலும் ராஜயோகம் போற்றிடுவர்
வேறு இன்னும் புகலக் கேளாய்
ஏமாறாதே நான்கு கேந்திரத்தும்
இடைவிடாமற் கிரகம் இருந்தாகில்
தேமேவு பர்வதமா யோகமாகும்
சீமான் ஆகுவான் ராஜயோகஞ் செப்பே..." என்று தமிழ் ஜோதிட நூல்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த 'ஜாதக அலங்காரம்' என்ற நூல் ராகுவைப் பற்றி குறிப்பிடுகிறது.
இந்த பாடலின் முதல் மூன்று வரிகள் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் ராகு இருந்து அதனுடைய தசை வரும் போது அந்த ஜாதகருக்கு 'பூப்படுக்கையில் படுக்கும் ராஜயோகம்' எனச் சொல்லுகிறது. அடுத்த வரிகள் நான்கு கேந்திரங்களிலும் தொடர்ந்து கிரகங்கள் இருந்தால் சிறப்பான பர்வத யோகத்தை தரும் எனக் குறிப்பிடுகிறது.
மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய இடங்களில் ராகு அமர்ந்து இந்த பாவங்களில் இருக்கும் ராகுவிற்கு கேந்திரங்களில், அதாவது ராகுவின் முதலாம் கேந்திரமான அவர் இருக்கும் வீட்டில் அவருடன் இணைந்து ஒரு கிரகம், அடுத்து ராகுவிற்கு நான்கில் ஒன்று, அடுத்ததாக ராகுவிற்கு எதிரில் இருக்கும் கேதுவுடன் இணைந்து ஒரு கிரகம், அடுத்து ராகுவிற்கு பத்தாமிடத்தில் ஒரு கிரகம் என இடைவிடாமல் கிரகங்கள் இருந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை ராகு தன் தசையில் செய்யும்.

ஒருவரின் ஜாதகத்தில் ராகு மூன்றாமிடத்தில் இருந்தாரெனில் மற்ற கிரகங்கள் ஆபோக்லிம ஸ்தானங்கள் என்று சொல்லப்படும் மூன்று ஆறு ஒன்பது பனிரெண்டு ஆகிய இடங்களில் இருக்கும். இந்த அமைப்பிலும் பாக்யாதிபதி தன் வீட்டிலோ அல்லது ராகுவுடன் இணைந்து தன் வீட்டைப் பார்வையிட்டோ மற்ற துர்ஸ்தானாதிபதிகள் ஒருவருக்கொருவர் மாறி அமர்ந்தோ இருந்தார்கள் எனில் ராகு யோகம் செய்வார்.
அதே நேரத்தில் ராகுவுக்கு நான்கு கேந்திரங்களிலும் இடைவிடாமல் கிரகங்கள் இருக்கும் நிலையில் யோகம் பூரணமாகக் கிடைக்கும். ஏதேனும் ஒரு இடத்திலோ அல்லது ராகு கேதுவுடன் கிரகங்கள் இணையாமல் ராகுவிற்கு இரண்டு பக்கங்களில் மட்டும் கிரகங்கள் இருந்தாலும் யோக அமைப்புத்தான் ஏற்படும். ஆனால் இந்த யோகம் செயல்பட வேண்டுமெனில் ஜாதகருக்கு ராகுதசை நடக்க வேண்டும்.
ராகுவின் அருள் பரிபூரணமாக கிடைக்க துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகு பரிகார ஸ்தலமாகும். வாயு ஸ்தலமான காளஹஸ்தியில் ராகுவுக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளில் தொலைவில்லி மங்கலம் பரிகார ஸ்தலமாகும். ஞாயிறு மாலை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி அர்ச்சனை செய்யலாம்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications