Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி 2020: சுக்கிரனை போல பலன் தரும் ராகு... செவ்வாயை போல பலன் தரும் கேது

வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற 01.09.2020 அன்றும் திருக்கணிதப்படி 23-09-2020 அன்றும் ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மிதுனம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு ராகுவும் தனுசு ராசியில் இருந்து விருச்சிகம் ர

Subscribe to Oneindia Tamil

சென்னை: சார்வரி தமிழ் புத்தாண்டில் ஆவணி மாதம் 16ஆம் தேதி செப்டம்பர் 1ஆம் தேதி வாக்கியப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நடைபெறப்போகிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி செப்டம்பர் 23ஆம் தேதி நிகழ்கிறது. இந்த இடப்பெயர்ச்சியால் தற்போது மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கு நகர்கிறார். அதே போல கேது பகவான் தற்போது உள்ள தனுசு ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு நகர்கிறார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அந்த கிரகங்களின் பலனை செய்வார்கள். ரிஷபம் சுக்கிரன் வீடு என்பதால் ராகு சுக்கிரனை போலவும், விருச்சிகம் செவ்வாய் வீடு என்பதால் கேது செவ்வாயை போலவும் செப்டம்பர் மாதம் முதல் பலனை கொடுப்பார்கள்.

நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ராகுவும் கேது ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகு கேதுகளுக்கு ஓவ்வொரு நாளிலும் தனியாக ஓன்றறை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது இந்த காலத்தை ராகுகாலம் எமகண்டம் என்று கூறுவார்கள்.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6,11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3,7,11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இனி ரிஷபத்தில் சஞ்சரிக்கப் போகும் ராகுவினாலும் விருச்சிகத்தில் சஞ்சரிக்கப் போகும் கேதுவினாலும் யாருக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். யரெல்லாம் சார்வரி தமிழ் புத்தாண்டில் ஆயுள் ஆரோக்கியம் செல்வ வளம் பெற்று வாழப்போகிறீர்கள் என்று இந்த ராசிபலன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இது பொதுவான பலன்தான். ஒருவரின் சுய ஜாதகத்தில் ராகு கேது இருக்கும் நிலை, நடைபெறும் தசாபுத்தியை பொருத்து பலன்கள் மாறுபடும்.

மேஷம்

மேஷம்

மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும் ராகு பெயர்ச்சியாகி 2ம் இடத்தில் சஞ்சரிக்கப்போகிறார். 9ஆம் இடமான பாக்ய ஸ்தானத்தில் இருந்த கேது இனி 8ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். எற்கனவே ராகு கேது இருந்த இடமும் யோகமான இடம் தான். 2ஆம் இடம் என்பது செல்வம், குடும்பம்,பணம் கையிறுப்பு, அசையும் சொத்துக்கள், கண்கள்,வாக்கு, நாணயம் இவைகளை குறிக்கும் பாவமாகும். இதில் ராகு வரப்போவதால் சொன்ன நேரத்தில் சொன்னபடி வரவு செலவுகளை பங்சுவாலிட்டியாக கடை பிடித்த உங்களுக்கு ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் சங்கடங்கள் வரலாம். கஷ்டங்களை தாண்டி உங்களுக்கு தேவைகேற்ப தனவரவு, நண்பர்கள் உதவி கிடைக்கும். பூர்விக சொத்து வீடு மனைகளால் பிரச்சனை வரலாம். எதிலும் நிதானமாக பேசியும் அமைதியாகவும் செயல்படுவது நல்லது. அரசு மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்கு காத்து இருந்தவர்களுக்கு வாய்ப்பு கை கூடிவரும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் ஆதாயம் வந்தாலும் யாரோ பட்ட கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்று கடனை அடைக்கும் நிலையும் வரலாம். தடைப்பட்ட காரியங்கள் சுபநிகழ்ச்சிகள் ஆரம்பத்தில் கலகத்துடன் ஆரம்பித்து இறுதியில் சுபமாக முடியும். உண்ண உணவு உடுக்க உடை இருக்க இடம் வருமானம் சிறப்பாக இருக்கும். கேது 8ல் சஞ்சரிப்பதால் தொட்டது துலங்கும். கேது பகவான் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமை எதிரி எல்லாவற்றையும் அழிப்பார். சுக்கிரனும் செவ்வாயும் உங்களுக்கு கொடுப்பதை போல ராகு கேது பெயர்ச்சியினால் உங்களுக்கு இனி செல்வம் செல்வாக்கு தைரியம் அதிகரிக்கப் போகிறது.

ரிஷபம்

ரிஷபம்

ராகு பகவான் உங்க ஜென்ம ராசிக்கு வரப்போகிறார். கேது பகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு வரப்போகிறார். இது வரை ராகு கேது இருந்த இடம் 2ல் ராகு. 8ல் கேது சஞ்சரிப்பது சுமாரான இடம் தான். இப்பொழுது ஜென்ம ராசியில் ராகு வரப்போகிறார். ஜென்ம ராசி என்பது கௌரவம், செயல் தன்மை, கீர்த்தி, செல்வாக்கு,புகழ்,பெறுமை,ஆற்றலை குறிக்கும் இடம். அனைவரும் வணங்க தக்க வாழ்க்கையை கொடுத்தாலும் சிலரை கண்டாலே வெறுப்பாக இருக்கும்.நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும் சிலருக்கு தொழில் மாற்றம்,இடமாற்றம் வரலாம். இதுநாள் வரை தடைப்பட்ட திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். ராகு 7ம் இடத்தை பார்ப்பதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும். உத்தியோக உயர்வு கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும். கேது ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போவதால் தவிர்க்க முடியாத செலவும் அதனால் கடன் வாங்கும் கட்டாயமும் வரலாம். ராகு கொடுத்தால் கேது கெடுப்பார் இனி எல்லாவற்றிலும் கவனமாக செயல்பட வேண்டும்.

மிதுனம்

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களே இதுநாள் வரை ராகு ஜென்ம ராசியிலும் கேது 7ஆம் பாவத்திலும் சஞ்சாரம் செய்தார்கள். இனி விரைய ஸ்தானத்தில் ராகுவும் ஆறாம் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். ராகு ஜென்ம ராசியில் இருந்தாலும் தனுசு ராசியில் இருந்த சனியின் பார்வை உங்க ராசியில் இருந்த ராகுவை செயல்பட விடாமல் தடுத்தது. ஒருவழியாக குருவின் பார்வை கிடைத்து செயல்பட தொடங்கியிருக்கிறார் ராகு என்றாலும் அஷ்டமத்து சனி ஆட்டித்தான் வைக்கிறது. அறிவாளியை முட்டாளாக்கி உட்கார வைத்த ராகு 12 ஆம் இடத்திற்கு மாறுவதால் வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும் வாய்ப்பை கொடுப்பார். வர்த்தக தொடர்பு ஏற்படும். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதன் அடிப்படையில் இப்பொழுது கெட்ட இடத்திற்கு ராகு கேது வருவது நல்லது தான். சுபகாரியங்கள் திருமணம், வீடு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். சிலரது பிள்ளைகளுக்கு கலப்பு திருமணம் காதல் திருமணம் அவர்கள் விருப்பபடி செய்து வைக்கும் சூழ்நிலை வரும். கேது 6ஆம் வீட்டிற்கு வருவதால் புது வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாற்றி பழைய கடன்களை அடைக்கலாம். நோய் நொடி போட்டி பொறாமை ஒழியும். வீண் விரைய வைத்திய செலவுகள் குறையும். இந்த ராகு கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தரும். மலைபோல வரும் துன்பம் எல்லாம் பனி போல விலகி குடும்பத்தில் அமைதி ஆனந்தம் கிடைக்கும்.

கடகம்

கடகம்

கடகம் ராசிக்கு 12ஆம் வீட்டில் ராகுவும் 6ஆம் வீட்டில் கேதுவும் சஞ்சரிப்பது யோகத்தை தரக் கூடிய இடங்கள் தான் என்றாலும் இனி ராகு லாப ஸ்தானத்திலும் கேது பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கு வரப்போவது சாதகமான அம்சம்தான். 11ஆம் வீட்டிற்கு வரும் ராகு எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவு போட்டி பொறாமைகளை ஒழிப்பார். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஒயமாட்டிர்கள். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் நீங்கள் மாட்டிய பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். பாகப் பிரிவினை, விவாகரத்து,செக் மோசடி வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கும். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான்.புத்திர பாக்கியம் தெய்வஅருள் புண்ணியம் காதல் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானத்தில் கேது வருவதால் சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும். வாங்கிய கடனுக்கு அசலுக்கு அதிகமாக கடனை செலுத்தியவர்களுக்கு கடன் சுமை குறையும். பணத்தால் நண்பர்கள் உற்றார் உறவினர் மூலம் சங்கடங்களை சந்தித்து வந்தீர்கள் இனி பகையை மறந்து நட்பு பாராட்டுவார்கள். புதிய முயற்சிகள் கை கூடும். ஏமாற்றங்களால் ஊரை விட்டு ஓடி விடுவோமா என்று நினைத்தவர்கள் சொந்த ஊரிலே தலை நிமிர்ந்து வாழலாம். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளுக்கு படிப்பு மாற்றம் மேல் கல்விகளுக்கு சுப கடன்கள் வாங்க நேரிடும். கூடிவரும் வேலையில் தடைப்பட்ட திருமணங்கள், புத்திரபாக்கியம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் மாற்றமும் உருவாகும். இது வரை உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களை கண்டு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள். நன்மையான ராகு கேது பெயர்ச்சி தான். 5ஆம் வீட்டில் கேது இருப்பதால் குலதெய்வ பிரார்த்தனை செய்யுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+