Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி 2020 : இந்த 4 ராசிக்காரங்களுக்கும் வருமானத்தை அள்ளித்தரப்போகும் ராகு கேது

ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற 01.09.2020 அன்றும் திருக்கணிதப்படி 23-09-2020 அன்றும் நடக்கிறது. மிதுனம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு ராகுவும் தனுசு ராசியில் இருந்து விருச்சிகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகு கேது பெயர்ச்சி சார்வரி தமிழ் புத்தாண்டில் ஆவணி மாதம் 16ஆம் தேதி செப்டம்பர் 1ஆம் தேதி வாக்கியப்பஞ்சாங்கப்படி நடைபெறப்போகிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி செப்டம்பர் 23ஆம் தேதி நிகழ்கிறது. இந்த இடப்பெயர்ச்சியால் தற்போது மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கு நகர்கிறார். அதே போல கேது பகவான் தற்போது உள்ள தனுசு ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு நகர்கிறார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அந்த கிரகங்களின் பலனை செய்வார்கள். ரிஷபம் சுக்கிரன் வீடு என்பதால் ராகு சுக்கிரனை போலவும், விருச்சிகம் செவ்வாய் வீடு என்பதால் கேது செவ்வாயை போலவும் செப்டம்பர் மாதம் முதல் பலனை கொடுப்பார்கள். சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ராகுவும் கேது ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகு கேதுகளுக்கு ஓவ்வொரு நாளிலும் தனியாக ஓன்றறை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது இந்த காலத்தை ராகுகாலம் எமகண்டம் என்று கூறுவார்கள்.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6,11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3,7,11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இனி ரிஷபத்தில் சஞ்சரிக்கப் போகும் ராகுவினாலும் விருச்சிகத்தில் சஞ்சரிக்கப் போகும் கேதுவினாலும் யாருக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். சார்வரி தமிழ் புத்தாண்டில் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஆயுள் ஆரோக்கியம் செல்வ வளம் பெற்று வாழப்போகிறீர்கள் என்று இந்த ராசிபலன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இது பொதுவான பலன்தான். ஒருவரின் சுய ஜாதகத்தில் ராகு கேது இருக்கும் நிலை, நடைபெறும் தசாபுத்தியை பொருத்து பலன்கள் மாறுபடும்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களுக்கு ராகுவும் கேதுவும் பரம விரோதிகள். ஒரு ராசியில் ராகு உடன் சூரியனோ, கேது உடன் சூரியனோ இணைந்திருந்தால் தோஷம்தான். சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்போது புத்திர ஸ்தானத்தில் கேதுவும் லாப ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரித்தனர். ஆவணி மாதம் முதல் ராகு தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும், கேது சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் வருகின்றனர். பத்தில் ஒரு பாவி இருக்க வேண்டும் என்பார்கள். பத்தாம் வீட்டில் பாவியான ராகு வருகிறார். 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம்.நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளை உருவாக்கி தரலாம்.நீங்கள் செய்யும் தொழிலில் லாபமும் வெற்றிகளும் கிடைக்கும். கடந்த காலங்களில் வருமானம் இல்லாமல் தவித்தவர்கள் புதிய வேலை பார்த்து இனிமேல் கை நிறைய காசு பார்க்கலாம். கேந்திரத்தில் பாவ கிரகங்கள் சஞ்சரிக்கும் பொழுது வலிமையான பலனை கொடுக்கும். உங்களின் ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கணவன் மனைவி ஓற்றுமை ஒங்கும். குடும்பத்தில் சுபகாரியம் சுபமாக முடியும். வீடு நிலம் வாங்கும் வசதி வரும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும்.
10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம்.நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளை உருவாக்கி தரலாம்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே ராகு பகவான் தற்போது 10ம் வீட்டிலும் கேது பகவான் தற்போது நான்காம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். ஆவணி மாதம் முதல் ராகு 9ஆம் வீட்டிலும் கேது 3ஆம் வீட்டிற்கும் வருகின்றனர். பாம்பு கிரகங்களான ராகு கேது 3, 6, 11,ஆகிய வீடுகளிலும் 4, 7, 10,வீடுகளிலும் சஞ்சரிப்பது நன்மையை செய்யும். முன்றாம் பாவம் சகோதரம்,வீரியம்,வீரம்,எழுத்தறிவு,விளையாட்டு ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். குடும்பத்தில் சுபகாரியம் திருமணம்,புத்திர பாக்கியம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள்,வெளிநாட்டு பயணங்கள் ஆதாயத்தை தரும். வருமானம் திருப்தி தரும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறு நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் ஓற்றுமை ஏற்படும். நீங்கள் நினைத்த காரியம் கை கூடும். ஏழரை சனியால் மனக்கோளாறு,புத்திபேதலிப்பு உடல் நலத்தில் குறைபாடு மனைவி மக்கள் நட்பு உறவு பிரிவுகள்,போலீஸ் வம்பு வழக்கு சந்தித்தவர்களுக்கு ராகு கேது விடிவையும் விமோசனத்தை தந்து காசு,பணம் சம்பாத்தியம் சேமிப்பை கொடுப்பார் என்பது உறுதி.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இதுநாள் வரை 3ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் கேது இனி 2ஆம் வீட்டிற்கும், 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு எட்டாம் வீட்டிற்கும் வருகிறார்கள். ஏற்கனவே இருந்த இடம் யோகத்தை செய்ய வேண்டிய இடம் தான். ஜாதகத்தில் 8ஆம் இடம் என்பது கெட்ட ஸ்தானமாகும். சஞ்சலம்,ஏமாற்றம் விபத்து, பீடை, அவமானம், அசிங்கம், கௌரவ பங்கம்,கவலை,இழப்பு ஆகியவற்றை குறிக்கும் இடம் எட்டாம் இடம். அந்த ஸ்தானத்திற்கு சுபகிரகம் வந்தால் அவற்றை வளர்ப்பார். பாவ கிரகம் வந்தால் அழிப்பார். எனவேதான 8 ல் ராகு வருவது யோகத்தையும் பெருமையையும் புகழையும் தருவார். ராகு சூது கிரகம் என்பதால் எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். ஓளி மயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும். திருமணம் சுபகாரியம் நடைபெறும். கோர்ட் வம்பு வழக்கு பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாகும். வெளியூரில் இருந்தவர்கள் இனி உள்ளுரில் செட்டில் ஆகலாம். சிலர் பிள்ளைகள் படிப்புக்கு ஊரை மாற்றலாம். பிள்ளைகள் படிப்புக்காக பிரிந்து போகலாம். தொழில் வருமானம் சேமிப்பு உயரும். சிலர் வீட்டுக்கு மேல் வீடு கட்டும் வாய்ப்பு வரும். குடும்ப ஸ்தானத்தில் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். வீடு கட்டும் யோகம், வண்டி வாகனம் வாங்கும் யோகத்தையும் ராகு கேது பெயர்ச்சி தரப்போகிறது.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம் ராசி நண்பர்களே. தற்போது குடும்ப ஸ்தானமான 2 ஆம் வீட்டில் கேதுவும் 8ஆம் இடத்தில் ராகுவும் சஞ்சரித்த நிலைமாறி இனி உங்க ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகிறார்கள். ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம் தான். உங்களால் எல்லோருக்கும் நல்லது நடந்தாலும் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. ராசியில் கேது சஞ்சரிப்பதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும்.வருமானம் திருப்தி தரும்.தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்ய நேரிடும் அதனால் கடன் பட்டாலும் சுபகடனாக அதாவது வட்டி இல்லாமல் பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். உற்றார் உறவினர் நட்பு வட்டத்தால் உதவிகளை எதிர்பார்க்கலாம். களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு நேரடியாக உங்க ராசியை பார்வையிடுகிறார். புதிய கூட்டுத்தொழில் லாபத்தை கொடுக்கும். கடன் வாங்கி வட்டி கட்சி நொந்து போனவர்களுக்கு இனி வருமானம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையேயான பிரச்சினை தீரும். ஏழரை சனியால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சி மனதில் நிம்மதியை தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+