Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி 2020-22: சார்வரி ஆண்டில் 4 ராசிக்காரங்களுக்கு திடீர் யோகம் தேடி வருது

சார்வரி தமிழ் புத்தாண்டு இன்னும் சில மாதங்களில் பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டில் செப்டம்பர் மாதம் ராகு கேது பெயர்ச்சி நடக்கப் போகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ கிரகங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு கேது கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கும் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார் கேது பகவான்.

கால புருஷ தத்துவதத்திற்கு இரண்டாம் வீடு தன வாக்கு ஸ்தானம், எட்டாம் வீடு ஆயுள் ஸ்தானம். பொதுவாகவே ராகு கேது கிரகங்கள் இருக்கும் இடத்துக்கேற்ப அந்த வீட்டின் அதிபதியைப் போல் பலன் தருவார். ரிஷபம் வீட்டின் அதிபதி சுக்கிரன் எனவே ராகு பகவான் சுக்கிரனைப் போல அள்ளிக்கொடுப்பார் ராகு.

விருச்சிகம் ராசியின் அதிபதி செவ்வாய் எனவே கேது பகவான் செவ்வாயைப் போல பலனைத் தருவார். ராகு அதிக காதலையும், கேது அதிக வீரத்தையும் கொடுக்கப் போகின்றனர். சார்வரி தமிழ் புத்தாண்டில் நடக்கப் போகும் ராகு கேது பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அதிக யோகத்தை தரப்போகிறது.

ரிஷப ராகு விருச்சிக கேது

ரிஷப ராகு விருச்சிக கேது

ராகுவை போல கொடுப்பார் இல்லை என்பார்கள். நல்லதை அள்ளிக்கொடுப்பார் ராகு, தீயவைகளை தடுப்பார் கேது பகவான். நிகழும் மங்களகரமான சார்வரி வருஷம் ஆவணி மாதம் 16ம் நாள் செப்டம்பர் 1ஆம் நாள் செவ்வாய்கிழமை அன்று ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும் - கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். வாக்கியப்பஞ்சாங்கப்படி இந்த ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. நிகழும் மங்களகரமான சார்வரி வருஷம் புரட்டாசி மாதம் 7ஆம் நாள் செப்டம்பர் 23ஆம் நாள் புதன்கிழமை அன்று ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும் - கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். திருக்கணிதப்பஞ்சாங்கப்படி இந்த ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது.

கடகம்

கடகம்

சார்வரி புத்தாண்டில் கடகம் ராசிக்காரர்களுக்கு அற்புதம் நிகழப்போகிறது. கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி எண்ணற்ற பலன்களை தரப்போகிறது. மாற்றங்களும் முன்னேற்றங்களும் தரப்போகிறார் ராகு பகவான். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். இன்பத்தை திகட்ட திகட்ட அனுபவிக்கப் போகிறீர்கள். கணவன் மனைவி இடையே சந்தோஷம் அதிகமாகும். தன விருத்தியாகும் காரணம் ராகு உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்து உங்க ராசியை பார்க்கிறார். செய்யும் தொழிலில் லாபம் வரும். இதுநாள் வரை விரைய ஸ்தானத்தில் அமர்ந்து இருந்த ராகு பகவான் பல செலவுகளை கொடுத்து வந்தார். இப்போது குரு, சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும் ராகு நல்ல நிலையில் அமர்ந்து உங்களுக்கு நிறைய நன்மைகளை தரப்போகிறார். ஐந்தாம் வீட்டில் கேது பகவான் அமரப்போகிறார். கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும். நீண்ட நாட்களாக புத்திர பாக்கியத்திற்காக ஏங்கி தவிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்மம் ராசிக்கு சார்வரி புத்தாண்டில் ராகு கேது பெயர்ச்சி நிறைய நன்மைகளைத் தரப்போகிறது. ராகு பகவான் பத்தாம் வீட்டிற்கு நகர்கிறார். பத்தில் ஒரு பாவி இருப்பது நல்லது என்பார்கள், அள்ளிக்கொடுக்கப் போகும் ராகு பத்தாம் வீட்டில் அமர்கிறார். அதே போல கேது பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்திற்கு நகர்கிறார். காரிய வெற்றி ஏற்படும். எதிரிகள் தொல்லை நீங்கும். வீடு, வண்டி வாகன யோகம் அமையும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். வம்பு வழக்குகளினால் ஏற்பட்ட பிரச்சினை தீரும். வாழ்க்கை அமைதியாக இருக்கும். சனி பகவான் ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகம், குரு பகவான் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பது பூர்வ புண்ணியங்களை அள்ளித்தரும் அதுபோல ராகு கேதுவினால் சார்வரி தமிழ் புத்தாண்டில் ராஜயோகம் கிடைக்கப் போகிறது.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்கு சனி சாதகமாக இல்லை, குரு ஜென்ம குரு எனவே எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்து வரும் உங்களுக்கு நிகழ இருக்கும் ராகு கேது பெயர்ச்சி சந்தோஷங்களையும் நிம்மதியையும் அள்ளித்தரப்போகிறது. ராகுவினால் தனுசு ராசிக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கப் போகிறது. உப ஜெய இடமான 6வது வீட்டிற்கு வருகிறார். வெற்றிகள் கிடைக்கும். இகழ்ந்தவர்களுக்கு மத்தியில் வெற்றி பெறுவீர்கள். நல்ல விசயங்கள் கிடைக்கும். வீடு வாகன சேர்க்கை கிடைக்கும். உறவுகளுக்கு இடையே மகிழ்ச்சி தாண்டவமாடும். ராகு களத்திர ஸ்தானத்தில் இருந்து இடப்பெயர்ச்சியாகி ஆறாம் வீட்டிற்கு நகர்கிறார். கேது தலையில் இருந்து விலகி 12ஆம் வீட்டிற்கு நகர்கிறார். ஏழரை சனி, ஜென்ம குரு இருந்தாலும் ராகு கேது பெயர்ச்சி நன்மையை தரப்போகிறது.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த சார்வரி தமிழ் புத்தாண்டு சந்தோஷங்களை தரப்போகிறது. சனியும் குருவும் சாதகமான நிலையில் இருக்கின்றனர். இனி ராகுவும் மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து உங்களுக்கு வெற்றிகளைத் தேடித்தரப்போகிறார். கேது பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்து பல நன்மைகளையும் பாக்கியங்களையும் அள்ளித்தரப்போகிறார். தொழில் துறையில் உற்சாகம் பிறக்கும். எதிரிகள் கூட பயந்து ஓடுவார்கள். முன்னேற்றம் இதுநாள் வரை தடைபட்டு வந்தது. வீட்டை பராமரிப்பு செய்வீர்கள். உயர்வான நிலையை அடைவீர்கள், குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். வேலையில் நல்ல மாற்றங்கள் நடைபெறும். அரசு தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் லாபமும் உற்சாகமும் ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+