ராகு கேது பெயர்ச்சி 2020 : மகம் முதல் கேட்டை வரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு எப்படி
ராகு கேது பெயர்ச்சி செப்டம்பர் மாதம் நிகழ உள்ளது.
சென்னை: ராகு கேது பெயர்ச்சி பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதைப் போல அரசியல் தலைவர்களும் ஆவலுடன் இந்த ராகு கேது பெயர்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி செப்டம்பர் 23ஆம் தேதி நிகழ இருக்கிறது. இந்த கிரகப்பெயர்ச்சியால் மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை வரையிலான நட்சத்திரங்களில் பிறந்த அரசியல் கட்சித்தலைவர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
இராசி மண்டலத்தின் வடதுருவப் புள்ளி இராகு என்றும், தென்துருவப் புள்ளி கேது எனவும் வழங்கப்படுகின்றன. ஜோதிடத்தில் கேதுவைக் காட்டிலும், இராகுவுக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படுகிறது. கரும்பாம்பு என அழைக்கப்படும், இராகு போக காரகன் ஆவார். செம்பாம்பு எனும் கேது மோட்ச காரகன்.
அரசியல் மாற்றத்திற்கு முக்கிய காரக கிரகங்கள் ராகுவும் கேதுவுமாகும். இரவோடு இரவாக ஒரு ஆண்டி திடீரென அரசனாவதற்கும் மாடு மேய்ப்பவன் மந்திரியாவதற்கும் குப்பையில் கிடப்பவன் குபேரனாவதற்கும் காரணம் சர்ப கிரகங்களே. யானை மாலை போட்டு அரசனாக தேர்வு செய்வதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும் என்பார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி எந்தெந்த அரசியல் கட்சி தலைவர்களை அரியணையில் அமர வைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மகம்
மகம் ஜெகத்தை ஆளும் என்பார்கள். மகத்தில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி பெயர், புகழ், கௌரவத்தை தேடி கொடுக்கும் என்றாலும் மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாகவே மாறும். கட்சியிலும் மக்கள் மத்தியிலும் உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும்.

பூரம்
தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம் இது. மக்கள் மத்தியில் புதிய உத்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பதவிகளும், பட்டங்களும் தேடி வரும்.

உத்திரம்
சிம்மம் ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு கட்சியில் செல்வாக்கு அதிகரிக்கும். புகழும் செல்வாக்கும் கிடைக்கலையே என்ற மனக்கவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். மன தைரியம் கொண்ட நீங்கள் அரசியலில் ஜெயிக்க புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

ஹஸ்தம்
கன்னி ராசியில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகள் மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். கட்சி தலைமையை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். சந்திக்க நேரிடலாம். இந்த சந்திப்பு மன மகிழ்ச்சியை உண்டாக்கும். செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும்.

சித்திரை
கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகள் அதிக கவனத்தோடும் எச்சரிக்கையோடும் செயல்பட வேண்டியிருக்கும். இதன் மூலமே பதவியும் பட்டங்களும் தேடி வரும். திடீர் உதவிகள் வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். பேச்சில் நிதானம் தேவைப்படும் காலகட்டமாகும்.

சுவாதி
துலாம் ராசியில் உள்ள சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிரிகளின் தொல்லைகளை எகிறி அடிப்பீர்கள். எத்தகைய இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியசாலிகள் நீங்கள் என்பதால் எதற்கும் கவலைப்பட வேண்டாம்.

அனுஷம்
விருச்சிகம் ராசியில் உள்ள அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி சந்தோஷத்தை கொடுக்கும். இதுநாள் வரை கட்சி மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். தலைமையின் குட்புக்கில் இடம் பெறும் அளவிற்கு நல்ல காரியங்கள் நடைபெறும். எதிர்பாராத பதவிகள் தேடி வரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கேட்டை
விருச்சிகம் ராசியில் உள்ள கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு நீங்கள் எதையும் அலசி ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். வேகமாக செயல்படுவதை விட விவேகமாக செயல்படுவது அவசியம். சில நேரங்களில் நினைத்தது நடக்காமல் காரியத் தடைதாமதம் ஏற்படும். இழுபறியாகவும் இருக்கும். கட்சித்தலைமையின் கவனத்தை கவர உங்களின் செயல்பாடுகளில் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications